Advertisment

'சந்தோஷம் ரொம்ப கூடினா குத்து டான்ஸ் தான்': புரட்சி ஆட்சியர் கவிதா ராமு மறுபக்கம்

வேங்கைவயல் பகுதியில் பட்டியலின மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட தீண்டாமை கொடுமைக்கு எதிராக, தனது துரிதமான நடவடிக்கைகள் மூலம் அதிகமாக பேசப்பட்டார்.

author-image
abhisudha
Jan 05, 2023 15:50 IST
Kavitha Ramu IAS

Kavitha Ramu IAS

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக 2021 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருபவர் கவிதா ராமு.

Advertisment

கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியா வந்த சீன அதிபர் ஸீ ஜின்பிங் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியபோது, அவருக்கு கரகாட்டம், மானாட்டம், ஒயிலாட்டம், பரதநாட்டியம், பறையிசை என 5 வகையான நடனங்களால் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாட்டை முன்நின்று கவனித்தவர் கவிதா ராமு ஐ.ஏ.எஸ். இவர் ஒரு பரதநாட்டியக் கலைஞர்.

சமீபத்தில் கூட புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் பகுதியில் பட்டியலின மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட தீண்டாமை கொடுமைக்கு எதிராக, தனது துரிதமான நடவடிக்கைகள் மூலம் அதிகமாக பேசப்பட்டார்.

கவிதா ராமு ஐ.ஏ.எஸ் ஒருமுறை ஆதன் தமிழ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதுகுறித்த ஒரு தொகுப்பு;

publive-image

நான் வாழ்க்கைய ரசிச்சு வாழுற ஒரு பெண், எனக்கு நடனம், பாட்டு, நண்பர்கள், குடும்பம் ரொம்ப பிடிக்கும். எந்த அடையாளங்களும் இல்லாம இருக்க விரும்புற ஒரு பெண் நான்.

என் அப்பா ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி, நான் சின்ன வயசுல ஐ.எஃப்.எஸ் ஆகணும்தான் விரும்பினேன். நிறைய நாட்டுக்கு போலாம், நான் ஒரு நடனக் கலைஞரா இருக்கிறதால நிறைய இடங்கள்ல ஆடலாம் அப்படிங்கிற ஆசை இருந்தது. ஆனா, நான் ஐ.ஏ.எஸ். ஆகணும்ங்கிறது என் அப்பாவோட ஆசை.

வாழ்க்கையில ஒரு விஷயம் போதும்னா நான் நடனம் மட்டும் தான் சொல்லுவேன். என்னோட சின்ன வயசுல இயக்குனர் பாரதிராஜா கிட்ட இருந்து நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது. ஆனா நான் பண்ணல.

காமன்வெல்த் மாநாட்டுல முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன்னாடி ஆடுனது, உலக தமிழ் மாநாட்டுல ஆடுனது எல்லாம் என்னால மறக்கவே முடியாத விஷயம். எனக்கு வாழ்க்கையில ரொம்ப சந்தோஷமா விஷயம் நடக்குதுனா கூட நான் குத்து டான்ஸ் ஆடுவேன்.

என் அப்பா ரொம்ப சின்சினியரான அதிகாரி, அவருக்கு பாடுறது ரொம்ப பிடிக்கும். என் அம்மா, அப்பா ரெண்டு பேரும் எனக்கு இது பண்ணனும், இது பண்ணக்கூடாதுனு எந்த தடைகளும் போட்டதில்ல.

நீங்க வளரத்துக்கு வாசிப்பு ரொம்ப முக்கியம். கண்டதும் படித்தால் பண்டிதன் ஆகலாம் பழமொழி சொல்லுவாங்க. அதுமாதிரிதான். தினமும் செய்தித்தாள் படிக்கிறது ரொம்ப முக்கியம். பலவிதமான புத்தகங்களை படிக்கணும். அப்போதான் நிறைய விஷயங்களை தெரிஞ்சுக்க முடியும். பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள் புத்தகத்துல நுட்பமான நிறைய விஷயங்கள் இருக்குது.

இப்படி நிறைய விஷயங்களை கவிதா ராமு ஐ.ஏ.எஸ் அந்த பேட்டியின் போது பகிர்ந்து கொண்டார். அந்த வீடியோ இங்கே

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment