Things You Must Experience in Kerala…| கேரளாவில் நீங்கள் அனுபவிக்க வேண்டிய 6 விஷயங்கள்.. கேரளா ஏன் கடவுளின் சொந்த தேசம் என்று அறியப்படுகிறது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? மழைக்காலத்தில் கேரளாவுக்குச் சென்றால் உங்கள் எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும். கேரளாவில் பருவமழை நிச்சயமாக ஒரு வாழ்நாள் அனுபவம். இந்த அழகான கண்கவர் மாநிலம், மழையின் போது இன்னும் சிறப்பாக மாறும்;
மண் மணம், நிரம்பி வழியும் ஆறுகள், பச்சைபசேல் இலைகள், உங்கள் முகத்தில் வீசும் குளிர்ந்த காற்று ஆகியவற்றை நீங்கள் உணர்வீர்கள். கேரளாவில் மழைக்காலத்தில் செய்ய வேண்டிய சிறந்த விஷயங்கள் என்ன என்று யோசிக்கிறீர்களா?
கேரளாவில் பருவமழை
கேரளாவில் மழைக்காலத்தில் நீங்கள் சொர்க்கத்தை அனுபவிக்க முடியும். கேரளாவில் இரண்டு பருவமழை சீசன் உள்ளது. இதில், தென்மேற்கு பருவமழை ஜூன் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். அந்த சமயத்தில் மாநிலத்தின் சராசரி வெப்பநிலை 19 முதல் 30 டிகிரி வரையில் இதமான ஒரு காலநிலையை நீங்கள் அனுபவிக்கலாம்.
படகில் காதல்

கேரளாவின் உப்பங்கழியில் ஹவுஸ்போட் அனுபவம் நிச்சயமாக மதிப்புள்ளது, குறிப்பாக மழை பெய்யும் போது. இந்த மழைக்காலத்தில் உங்கள் துணையை உங்களுடன் கேரளாவிற்கு அழைத்துச் செல்லுங்கள். ஆலப்புழா ஹவுஸ்போட் அனுபவிக்க மிகவும் பிரபலமான இடமாகும். ரொமாண்டிக் டின்னர், அழகான போட்டோஷூட் ஆகியவை தம்பதிகள் கண்டிப்பாக முயற்சிக்க வேண்டிய சில விஷயங்கள்.
பீச்

கேரளா மாநிலத்தில் நிறைய கடற்கரைகள் உள்ளன, இந்த கடற்கரைகள் பெரும்பாலும் கூட்டம் இல்லாதவை மற்றும் நாட்டின் மற்ற கடற்கரைகளை விட மிகவும் தூய்மையானவை. இயற்கையோடு இணைவதற்கு இது ஒரு அழகான வழியாகும். பருவமழை கடல் நீரை பெருக்கக்கூடும், எனவே ஒரு குறிப்பிட்ட கடற்கரைக்குச் செல்வதற்கு முன் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
பேகல் பீச், செராய் பீச் மற்றும் பாபநாசம் பீச் போன்றவை கேரளாவில் செல்ல வேண்டிய சில கடற்கரைகள். மேலும், கேரளாவில் சுவையான கடல் உணவை அனுபவிக்க மறக்காதீர்கள்.
உயிர் பெறும் மலைகள்

யார் சொன்னது கேரளா என்பது கடல் மட்டுமே என்று? பருவமழையின் அழகை அனுபவிக்க அதன் புகழ்பெற்ற மலைவாச ஸ்தலங்களுக்கு வாருங்கள். கேரளாவின் மூணார், மாநிலத்தின் மிக அழகான இடங்களில் ஒன்றாகும், இது பூமியின் வாசனையுடன் கூடிய மேகங்கள், மழையைக் காதலிக்க சரியான வழியாகும். இதேபோன்று, தேக்கடி, வாகமண், இடுக்கி, பீர்மேடு, மலம்புழா, அய்யம்புழா, மலையத்தூர் மற்றும் பல உள்ளன
தனிமையை அனுபவிக்க

கேரளா பெரும்பாலும் குளிர்ந்த இடமாக இருப்பதால், பருவமழையில் மிகவும் காலியாக இருக்கும். ஹோட்டல் முன்பதிவுகளில் சில பெரிய தள்ளுபடிகளையும் எதிர்பார்க்கலாம். இந்த அழகான மாநிலத்தில் பருவமழையை அனுபவிக்க சிலர் விரும்பினாலும், ஆண்டின் இந்த நேரத்தில் குறைவான மக்களே வருகின்றனர்.
நீர்வீழ்ச்சி
கேரளாவில் உள்ள நீர்வீழ்ச்சிகள் மழைக்காலத்தில் இன்னும் அழகுடன் இருக்கும். சரி, பாகுபலி படத்தில் வரும் பிரபலமான அருவி நினைவிருக்கிறதா? பிரசித்தி பெற்ற அதிரப்பில்லி நீர்வீழ்ச்சியில் தான் இந்தக் காட்சி படமாக்கப்பட்டது. மேலும், இங்கு படமாக்கப்பட்ட புகழ்பெற்ற நன்னாரே பாடலையும் மறக்க முடியாது. இது கேரளாவின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சி.
வயநாட்டில் உள்ள செத்தாலயம் அருவி, இடுக்கியில் உள்ள கீழ்குத்து அருவி, திருச்சூரில் உள்ள வாழச்சல் அருவியும் பார்க்க வேண்டியவை.
ஃபில்டர் காபி/ டீ
நிச்சயமாக, நீங்கள் எந்த நகரத்திலும் ஃபில்டர் காபியை முயற்சி செய்யலாம், ஆனால் இந்த மழைக்காலங்களில் நீங்கள் கேரளாவில் மழையைப் பார்த்துக் கொண்டே ஒரு கப் ஃபில்டர் காபியை பருகுங்கள். குளிர்ந்த காற்று, ரொமான்டிக் சுற்றுப்புறங்கள் மற்றும் ஒரு ருசியான காபி ஆகியவற்றைக் காட்டிலும் எதுவும் இல்லை.
பெரியாரில் உள்ள கன்னிமாரா டீ ஃபேக்டரி, மூணாறில் உள்ள தேயிலை அருங்காட்சியகம், கொச்சியில் உள்ள தேயிலை பங்களா போன்றவை முக்கியமான டீ பாயிண்ட்ஸ்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“