New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/06/Khushbu.jpg)
குஷ்பூ (புகைப்படம் - ட்விட்டர்)
மசூதிக்குச் சென்று பக்ரீத் கொண்டாடிய குஷ்பூ; வைரலாகும் புகைப்படங்கள்; ரசிகர்கள் வாழ்த்து
குஷ்பூ (புகைப்படம் - ட்விட்டர்)
நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்பூ பர்தா அணிந்து, மசூதிக்குச் சென்று பக்ரீத் பண்டிகை கொண்டாடியபோது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பூ. ரஜினி, கமல், பிரபு, சரத்குமார் என பல்வேறு டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த குஷ்பூ, இயக்குனர் சுந்தர் சி-யை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இதையும் படியுங்கள்: புதுச்சேரியில் ஈகை பெருநாள் தொழுகை, ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்பு
திரைப் பயணத்தைத் தொடர்ந்து அரசியலில் களமிறங்கிய குஷ்பூ தற்போது பா.ஜ.க உறுப்பினராக உள்ளார். மேலும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராகவும் இருந்து வருகிறார். அரசியலைப் போல் சமூக வலைதளங்களிலும் குஷ்பூ ஆக்டிவாக இருந்து வருகிறார். சமூக வலைதளங்களில் தன்னை விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுப்பதில் இருந்து, சொந்த வாழ்வில் நடப்பது வரை அனைத்தையும் பதிவிட்டு வருகிறார் குஷ்பூ.
இந்தநிலையில், உலகமெங்கும் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. நடிகை குஷ்பூவும் பக்ரீத் பண்டிகையை கொண்டாடியுள்ளார். பக்ரீத் பண்டிகையையொட்டி பர்தா அணிந்து, மசூதிக்கு சென்று தொழுகை நடத்தினார் குஷ்பூ. அப்போது அங்கு எடுத்த புகைப்படங்களை குஷ்பூ தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள், அதற்கு லைக் செய்வது மட்டுமல்லாமல், குஷ்பூவுக்கு பக்ரீத் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
May Allah bless all of you with good health, happiness and prosperity, today and always!! #EidMubarak pic.twitter.com/iVXXwki2Oq
— KhushbuSundar (@khushsundar) June 29, 2023
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.