scorecardresearch

முட்டை வேக வைக்க, பூரி அதிக எண்ணெய் பிடிக்காமல் இருக்க இந்த ஹேக் டிரை பண்ணுங்க

இங்கே உங்கள் சமையலை எளிதாக்கும் சில குறிப்புகள் மற்றும் தந்திரங்கள் உள்ளன. அவை உங்களுக்கு சமையலை சுவாரஸ்யமாக்கும்.

lifestyle
Cooking Hacks

மாறிவரும் பிஸியான வாழ்க்கையில், சூடான சமையலறைகளில் நீண்ட நேரம் செலவழிக்க முடியாது. இங்கே உங்கள் சமையலை எளிதாக்கும் சில குறிப்புகள் மற்றும் தந்திரங்கள் உள்ளன. அவை உங்களுக்கு சமையலை சுவாரஸ்யமாக்கும், மேலும் சமையலறையில் உள்ள சில விஷயங்களை எளிதாக்க உதவும்.

மென்மையான வேகவைத்த முட்டை எந்த உணவிற்கும் பர்ஃபெக்ட் ஆக இருக்கும். ஆனால் முட்டையை சரியாக வேகவைப்பது அவ்வளவு எளிதானது அல்ல.

என்ன செய்ய வேண்டும்?

அறை வெப்பநிலையில் இருக்கும் முட்டைகளைப் பயன்படுத்தவும், பிரிட்ஜில் இருந்து நேராக எடுத்து பயன்படுத்தக்கூடாது. குளிர்ந்த முட்டைகளை கொதிக்கும் நீரில் சேர்க்கும் போது வெப்பநிலையில் ஏற்படும் தீவிர மாற்றம் முட்டை ஓட்டில் விரிசலை ஏற்படுத்தும்.

முட்டைகளைச் சேர்ப்பதற்கு முன் எப்போதும் தண்ணீர் கொதிக்கும் வரை காத்திருங்கள், இல்லையெனில் நீங்கள் அதை உரிக்க முயற்சிக்கும்போது ஓடு,  முட்டையின் வெள்ளைக்கருவில் ஒட்டிக்கொண்டிருக்கும்.

மென்மையான ரொட்டிக்கு

மென்மையான ரொட்டி தயாரிக்க நிறைய நேரம் எடுக்கும். ஏனென்றால் நீங்கள் நீண்ட நேரம் மாவை பிசைய வேண்டும். மேலும் நீங்கள் ஒரு சமையல் நிபுணராக இல்லாவிட்டால், ரொட்டி மென்மையாக வராது. நீங்கள் மாவில் சிறிது பால் சேர்க்கலாம். இது ரொட்டி மிகவும் மென்மையாக மாறுவதை உறுதி செய்யும்!

பூரி சமைக்க

பூரி அதிக எண்ணெய் பிடிக்கிறதா? அதனால் சாப்பிட்ட உடனே வயிறு உப்பி நெஞ்செரிச்சல் ஏற்படுகிறதா? நீங்கள் என்ன செய்ய வேண்டும்?  பூரிக்கு மாவை உருட்டி, 15 நிமிடங்களுக்கு ஃப்ரீசரில் வைக்கவும்.  உங்கள் பூரிகள் அதிக எண்ணெய் தோய்க்காமல் நன்றாக உப்பி வரும்.

அடுத்தமுறை சமைக்கும் போது இந்த ஹேக்குகளை பயன்படுத்தி உங்கள் சமையல் வேலையை எளிதாக்குங்கள்!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Kitchen hacks boiled eggs poori soft roti cooking hacks