மாஸ்டர் செஃப் பங்கஜ் பதூரியாவின் பின்வரும் குறிப்புகள் நிச்சயமாக உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
சமையல் என்பது பொதுவாக பலருக்கும் பிடிக்காத ஒன்று. எனவே, சமையலறையில் அதிக நேரம் செலவழிக்காமல் முடிந்தவரை சீக்கிரம் சமைக்கவும், சமையல் தொந்தரவு இல்லாததாகவும் இருக்க பலர் விரும்புகிறார்கள்.
Advertisment
இருப்பினும், சமைப்பது என்பது காய்கறிகளை வெட்டுவது மற்றும் உணவு சமைப்பது மட்டுமல்ல, அது அதையும் தாண்டி, பொருட்கள் மற்றும் உணவை புதியதாக வைத்திருப்பதையும் உள்ளடக்கியது.
எனவே, நீங்கள் சமையலறையில் உங்கள் நேரத்தை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், மாஸ்டர் செஃப் பங்கஜ் பதூரியாவின் பின்வரும் குறிப்புகள் நிச்சயமாக உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
ஊறுகாய் கெட்டுப்போகாமல் தடுக்க
மழைக்காலத்தில் ஊறுகாய் சீக்கிரம் கெட்டுவிடும். எனவே, அவற்றை ஒரு கண்ணாடி ஜாரில் சேமித்து, அவற்றின் மேலே எப்போதும் எண்ணெய் அடுக்கு இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இது ஊறுகாய் கெட்டுப் போவதைத் தடுக்கும்.
எறும்பு தொல்லைக்கு
சர்க்கரை வைத்திருக்கும் ஜாடியில் 2-3 கிராம்புகளை வைக்கவும். எறும்புகள் கிராம்புகளின் வாசனையிலிருந்து எவ்வாறு மறைகிறது என்பதை பார்த்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
பனீர் சேமிக்க
பனீரை ஒரு பாத்திரத்தில் தண்ணீரில் போட்டு ஃபிரிட்ஜில் வைக்கவும். இது பனீர்’ புளிப்பு அல்லது கசப்பாக மாறுவதைத் தடுக்கும், மேலும் மென்மையாகவும் இருக்கும்.
முட்டைகளை சரிபார்க்க
முட்டைகள் கெட்டு விட்டதா என்பதை கண்டுபிடிக்க, அவற்றை ஒரு பெரிய கிண்ணத்தில் தண்ணீரில் வைக்கவும். முட்டைகள் பாத்திரத்தில் கீழே தங்கினால் அவை புதியவை. அவை நின்றால், முட்டைகள் 2-3 வாரங்கள் பழமையானவை, ஆனால் அவை மிதந்தால், முட்டைகள் மிகவும் பழையவை என்று அர்த்தம்; அவற்றைப் பயன்படுத்த வேண்டாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“