நீங்கள் என்னதான் சுவையாக சமைத்தாலும், அதற்கு இறுதியில் மனமும் சுவையும் சேர்ப்பது புதினாவும், கொத்தமல்லிதழையும் தான். பிரியாணியோ, சாம்பாரோ, ரசமோ கொத்தமல்லி தழை இல்லாமல் சமையல் முழுமையடையாது.
Advertisment
சில நேரங்களில் புதினா, கொத்தமல்லி மலிவான விலையில் கிடைக்கும் போது அதிகமாக வாங்கி விடுகிறோம். எப்படித்தான் பாதுகாப்பாக சேமித்தாலும் புதினா, கொத்தம்மல்லி சீக்கிரமே வாடிவிடும் அல்லது அழுகிவிடும். ஆனால் இனி கவலையில்லை.
செஃப் விகாஸ் கண்ணா மூலிகைகளின் ஆயுளை அதிகரிக்க ஒரு சூப்பர் தந்திரத்தைப் பகிர்ந்துள்ளார்.
இந்த 27 வினாடிகள் உங்களுக்கு நிறைய சுவைகளையும் புத்துணர்ச்சியையும் தரும். 8-10 நாட்கள் வரை ஃபிரிட்ஜில் மூலிகைகளை புதியதாக வைத்திருக்க இது சிறந்த தந்திரம், என்று அவர் கூறினார்.
நீங்கள் செய்ய வேண்டியது ஒரு கிளாஸ் தண்ணீரை எடுத்து அதில் மூலிகையின் தண்டு தண்ணீரில் நனையுமாறு வைக்கவும். அதை வீடியோவில் காட்டியபடி, டம்ளருடன் அப்படியே சேர்த்து, ஒரு பிளாஸ்டிக் பையில் மூடி வைக்கவும். ஒவ்வொரு 48 மணி நேரத்திற்கும் தண்ணீரை மாற்றவும், என்று அவர் பரிந்துரைத்தார்.
அதேபோல வாழைப்பழங்களை சேமிப்பதற்கான குறிப்பையும் செஃப் பகிர்ந்து கொண்டார். வீடியோவில், அவர் சில வாழைப்பழங்களின் காம்பு பகுதியை ஈரமான டிஷ்யூ பேப்பரால் சுற்றுகிறார்.
A trick that truly works. I was experimenting on ways to increase the shelf life of bananas. Wrapping the stem with plastic wrap or covering it with wet tissue. pic.twitter.com/bjX1xKyZzP
வாழைப்பழங்களின் ஆயுளை அதிகரிப்பதற்கான வழிகளை நான் பரிசோதித்துக் கொண்டிருந்தேன். தண்டுகளை பிளாஸ்டிக் ரேப்பருடன் சுற்றவும் அல்லது ஈரமான டிஷ்யூ பேப்பரால் மூடவும் என்று அவர் பரிந்துரைத்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“