வீட்டு வேலைகளை சுலபமாக முடிக்க அட்டகாசமான சில டிப்ஸ்களை பற்றி பார்ப்போம். ஹர்ஷிஸ் டேஸ்ட்டி கிச்சன் யூடியூப் பக்கத்தில் கூறியிருக்கும் டிப்ஸ்களாவது,
1. நெயில் பாலிஷ் அடிக்கும் போது அது தரையில் கொட்டி விட்டால் அதை ஈசியாக சுத்தம் செய்யலாம். தரையில் ஊற்றிய நெயில் பாளிஷ் காய்ந்து விட்ட பின் போகவில்லை என்றால் அதன் மேலே ஏதாவது ஒரு பெர்ப்ஃயூமை அடித்து துடைத்து எடுத்தால் வந்துவிடும்.
2. அடுத்ததாக வீட்டில் கேஸ் அடுப்புகளை சுத்தம் செய்து வைப்போம். ஆனால் கேஸ் பர்னர்களை சுத்தம் செய்ய மாட்டோம். அது கடினமாக இருக்கும். அதற்கு ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் வினிகர், பேக்கிங் சோடா சேர்த்து அதில் பர்னரை வைக்கவும். நுரை பொங்கி வந்ததும் வாஷிங் லிக்யூட், லெமன் சால்ட் சிறிது சேர்த்து விடவும். பின்னர் இதனை அரை மணி நேரம் ஊற வைத்து எடுத்தால் போதும் தேய்க்காமலேயே அதிலுள்ள அழுக்கு வந்துவிடும். பின்னர் தேவைப்பட்டால் அழுக்கு உள்ள இடங்களில் அழுத்தி தேய்த்து எடுத்தால் சுத்தமாகிவிடும்.
வீட்டு வேலைகளை சுலபமாக முடிக்க அட்டகாசமான டிப்ஸ்/kitchen & Cleaning tips in Tamil
3. இஞ்சி பூண்டை எப்போதும் இடித்தோ அல்லது தட்டியோ பயன்படுத்துவோம். அதற்கு பதிலாக காய் சீவுவதை வைத்து அதில் இஞ்சி பூண்டை சீவி சமையலுக்கு பயன்படுத்தப்பட்டால் இன்னும் சுவையாக இருக்கும் ஈசியாக.
4. முட்டை தோலை ஈசியாக உறித்து எடுப்பதற்கு எண்ணெய் சேர்த்து வேகவைத்து எடுக்கலாம். ஈஸியாக உறித்து எடுக்கலாம்.
5. நூல் எடுத்து முட்டை மேல்சுத்தி இழுத்தால் கத்தியில் நறுக்கியதை விட சூப்பராக நறுக்கி கிடைக்கும்.
6. சல்லி கரண்டியை வைத்து லெமன் ஜூஸ் போடலாம். கொட்டை கரண்டியில் தேங்கிடும் சாறு மட்டும் இறங்கிடும்.