Tomato cooking hacks | Indian Express Tamil

தக்காளி தோல் உரிக்க ஆலிவ் எண்ணெய்.. இந்த வீடியோ பாருங்க

தக்காளி தோலை உரிப்பது என்பது நேரம் எடுக்கும் செயலாகும். ஆனால் எங்களிடம் எளிதான தீர்வு ஒன்று உள்ளது,

lifestyle
Tomato Cooking Hacks

சுவை நிறைந்த பழுத்த தக்காளி, உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான ரெசிபிகளின் முதுகெலும்பாகும். ஆனால், தக்காளி தோலை உரிப்பது என்பது மிகப்பெரிய வேலை என்பது தினசரி சமைப்பவர்கள் ஒத்துக் கொள்வர். அதனாலேயே பெரும்பாலான சமையல்களில் தக்காளி தோலை உரிக்காமல் அப்படியே பயன்படுத்துவது வழக்கமாகி விட்டது.

ஆனாலும் சாஸ், சூப் போன்ற ரெசிபிகளுக்கு அவசியம் தக்காளியில் இருந்து தோல்களை அகற்றியே ஆக வேண்டும். தக்காளி தோலை உரிப்பது என்பது நேரம் எடுக்கும் செயலாகும். ஆனால் எங்களிடம் எளிதான தீர்வு ஒன்று உள்ளது, அதைச் செய்ய உங்களுக்கு 5 நிமிடங்களுக்கும் குறைவாகவே ஆகும்.

ஃபுட் விலாகர் @jaxfoodhax இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

முதலில் தேவையான அளவு தக்காளி எடுத்து, அனைத்தையும் பாதியாக வெட்ட வேண்டும். பிறகு ஒரு சூடான கடாயில் சிறிது ஆலிவ் எண்ணெயை ஊற்றி, அதில் வெட்டிய பாகம் பாத்திரத்தில் படுமாறு வைத்து, மூடி வைத்து மூட வேண்டும். 5 நிமிடங்கள் கழித்து திறந்து பார்க்கும்போது, தக்காளியில் இருந்து தோல் லேசாக வெளியே வந்திருக்கும். உங்கள் இரு விரல்களைப் பயன்படுத்தி இந்த தோல்களை எளிதாக அகற்றலாம்.

குறிப்பு: தக்காளி தோல்கள் ஜீரணிக்க முடியாதவை என்று பல்வேறு ஆய்வுகள் நிரூபித்துள்ளன. இருப்பினும், தக்காளி தோல் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் நம்பமுடியாத ஆதாரமாக உள்ளது.

அவற்றைப் பயன்படுத்துவதற்கான சிறந்த வழி, தோலை வெயிலில் காயவைத்து, உலர வைக்க வேண்டும். பின்னர் நசுக்கி நன்றாக தூள் செய்ய வேண்டும். இந்த தக்காளி தோல் பொடியை பல்வேறு உணவுகளில் தாளிக்க பயன்படுத்தலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Kitchen hacks tomato cooking hacks tomato recipes