Advertisment

வடை சுடும் போது அதிக எண்ணெய் பிடிக்காமல் இருக்க: ஊட்டச்சத்து நிபுணர் வீடியோ

பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர், எண்ணெய்யில் வடை சுடும்போது ஆழமாக வறுக்க சில குறிப்புகளை பகிர்ந்துகொண்டார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
lifestyle

What to keep in mind when deep frying? Image: Freepik

உணவு தயாரிப்பதற்கான சில அடிப்படை விஷயங்கள், சமையலறையில் உங்களுக்கு உதவும். உண்மையில், அவை நிறைய நேரத்தையும் முயற்சியையும் சேமிக்க முடியும்.

Advertisment

பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர், எண்ணெய்யில் வடை சுடும்போது டீப் ஃபிரை செய்ய சில குறிப்புகளை பகிர்ந்துகொண்டார்.

திவேகரின் கூற்றுப்படி, ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும், மிதமான சூட்டில் ஆழமாக வறுக்க வேண்டும்.

அது மிதமான சூடாக இருக்கும்போது, ​​அதில் 3-4 வடைகளை மெதுவாக ஸ்லைடு செய்யவும். மேல் பகுதி வெளிர் பழுப்பு நிறமாக மாறியதும், அவற்றைப் புரட்டி, இருபுறமும் பொன்னிறமாகும் வரை ஆழமாக ஃபிரை செய்யவும். வடை நன்கு வெந்ததும் எண்ணெய்யை வடிகட்டி ஒரு தட்டில் மாற்றவும். மீதமுள்ள வடைகளை ஆழமாக வறுக்கவும், என்றார் திவேகர்.

டீப் ஃபிரை செய்வது அதிக எண்ணெயை உட்கொள்வதால், சில பொதுவான தவறுகளைத் தவிர்க்க உதவும் சில எளிய விதிகளைக் கடைப்பிடிப்பது முக்கியம்.

ஊட்டச்சத்து நிபுணர் ப்ரெர்ன்னா கல்ரா, சுவையான, ஆழமாக வறுக்கப்படும் உணவு, அதன் நீர் உள்ளடக்கத்தை இழக்கச் செய்து, நிறைய கலோரிகள் மற்றும் டிரான்ஸ் கொழுப்பைக் கொண்ட கொழுப்பை உறிஞ்சிவிடும் என்று கூறினார். இந்த கொழுப்பு நமது தமனிகளில் குவிந்து பல்வேறு இருதய நோய்களை உண்டாக்குகிறது.

*சிறிய பர்னரைப் பயன்படுத்தவும்

*உங்கள் கடாய் உலர்ந்ததாக இருக்க வேண்டும்

* எண்ணெய் புகைபிடிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். இது போதுமான சூடாக இருக்க வேண்டும்

*எண்ணெய் தயாராக இருக்கிறதா என்று பார்க்க கொஞ்சம் எடுத்து டீப் ஃபிரை செய்யவும்.

*நீங்கள் வடைகளை திருப்பி போடும் முன் எண்ணெய் குமிழ்கள் வரும் வரை காத்திருங்கள்.

*எப்போதும் குறைந்த தீயில் சமைக்கவும்

How to deep fry Kitchen Tips in tamil

நெய்யை பயன்படுத்த, கல்ரா பரிந்துரைத்தார். நெய்யில் high heating point உள்ளது, அதாவது அதன் ஊட்டச்சத்து மதிப்பை அவ்வளவு சீக்கிரம் இழக்காது. மேலும், உணவை இரும்புச்சத்து நிறைந்ததாக மாற்ற இரும்பு கடாயைப் பயன்படுத்தலாம், என்று கல்ரா கூறினார்.

முட்டை, கோழிக்கறி, பனீர், மீன் ஆகியவற்றை உப்பு சேர்த்து பொரிப்பதை தவிர்க்க வேண்டும். இது நல்ல புரதத்தின் பெரும்பகுதியை அழித்துவிடும், எனவே வறுக்கும்போது அதைத் தவிர்க்கவும், என்று கல்ரா கூறினார்.

மாற்றாக, கல்ராவின் கூற்றுப்படி, நாம் இரண்டு விஷயங்களைச் செய்யலாம்:

*குறைந்த சமையலுக்கு ஏர் பிரையர் அல்லது மைக்ரோவேவ் அல்லது OTGஐப் பயன்படுத்தவும். குறைந்த எண்ணெய் உபயோகிப்பது, இதயத்திற்கு ஏற்றது.

* ஆழமாக வறுப்பதற்குப் பதிலாக, இரும்புச் சட்டியில்/தவாவில் நெய் தடவி, ஒவ்வொரு பக்கத்திலிருந்தும் சரியாகச் சமைக்கலாம். இதை பான் ஃபிரையிங் என்றும் அழைப்பர்.

இருப்பினும், குறைந்த தீயில் கூட எந்த உணவையும் ஆழமாக வறுத்தெடுப்பது அதிக நிறைவுற்ற கொழுப்பைக் கொண்டிருக்கும் என்று கல்ரா சுட்டிக்காட்டினார். கடுகு எண்ணெய், ரைஸ் பிரான் எண்ணெய், கடலை எண்ணெய் மற்றும் நெய் போன்ற அதிக வெப்பம் கொண்ட எண்ணெயைப் பயன்படுத்துகிறோம் என்றால், எப்போதாவது ஒரு முறை சமைப்பது பரவாயில்லை.

இருப்பினும், வெப்பநிலை 450 டிகிரி பாரன்ஹீட் அதிகரிக்கக்கூடாது, என்று கல்ரா கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment