Advertisment

நெய், சாஸ், சமைத்த மோர், மீந்து போன சிக்கன் எப்படி சேமிப்பது?

மீதமுள்ள உணவைச் சேமித்து வைக்க, குறிப்பிட்ட பாத்திரங்கள் பயன்படுத்தப்பட வேண்டும் அது கெட்டுப்போவதைத் தடுக்கிறது.

author-image
abhisudha
New Update
lifestyle

How you should store foods, as per Ayurveda

எஞ்சியிருக்கும் உணவை நாம் ஃபிரிட்ஜில் சேமிக்கிறோம். அப்படி உணவை சேமிப்பதில் ஆயுர்வேதத்தில் குறிப்பிட்ட வழிகாட்டுதல்கள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா?

Advertisment

ஃபிரிட்ஜ் வருவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, ஆயுர்வேத வல்லுநர்கள் உணவை புதியதாக வைத்திருக்க எப்படி சேமிப்பது என்பதை விவரித்துள்ளனர். ஆயுர்வேதத்தில், மீதமுள்ள உணவைச் சேமித்து வைக்க, குறிப்பிட்ட பாத்திரங்கள் பயன்படுத்தப்பட வேண்டும் அது கெட்டுப்போவதைத் தடுக்கிறது என்று ஆயுர்வேத நிபுணர் வரா யனமந்த்ரா கூறினார்.

மருத்துவர் யனமந்த்ரா பரிந்துரைத்ததைப் பாருங்கள்

*பழச்சாறு, குளிர் பானங்கள் மற்றும் சிரப்கள், சில்வர் பாத்திரங்களில் சேமிக்கப்பட வேண்டும், ஏனெனில் அவை குளிர்ச்சி தன்மையைக் கொண்டுள்ளன, இது திரவத்தை நீண்ட நேரம் புதியதாக வைத்திருக்கும்.

publive-image

*நெய்யை எப்போதும் இரும்பு பாத்திரம் அல்லது ஜாடியில் சேமித்து வைக்க வேண்டும்.

*புளிப்பு உணவுகளான சாஸ்கள் மற்றும் சமைத்த மோர் போன்றவற்றை கல் பாத்திரங்களில் (stone vessels) சேமித்து வைக்க வேண்டும், புளிப்பு உணவுகளை இரும்பு பாத்திரங்களில் சேமிக்க வேண்டாம்.

*ஒயின்கள், சிரப்கள் மற்றும் ஊறுகாய்களை கண்ணாடி பாத்திரங்களில் சேமிக்க வேண்டும்.

* சமைத்த இறைச்சியை எப்போதும் சில்வர் பாத்திரங்களில் சேமித்து வைக்க வேண்டும்.

*பழங்கள் மற்றும் தின்பண்டங்கள் பின்னர் உண்பதற்காக சேமித்து வைப்பதற்கு முன், புதிய இலைகளில் மூடியிருக்க வேண்டும்.

publive-image

*காப்பர், சில்வர், பித்தளை, மண் பானைகளில் சேமிக்கப்படும் தண்ணீர் ஆரோக்கியத்திற்கு நல்லது.

சில்வர், பித்தளை மற்றும் காப்பர் ஆகியவை நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன மற்றும் காலரா, டைபாய்டு, வயிற்றுப்போக்கு மற்றும் ஹெபடைடிஸ் போன்ற நீரால் பரவும் நோய்களிலிருந்து உடலைத் தடுக்கின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment