சுவை நிறைந்த பழுத்த தக்காளி, உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான ரெசிபிகளின் முதுகெலும்பாகும்.
ஆனால், தக்காளி தோலை உரிப்பது என்பது மிகப்பெரிய வேலை என்பது தினசரி சமைப்பவர்கள் ஒத்துக் கொள்வர். அதனாலேயே பெரும்பாலான சமையல்களில் தக்காளி தோலை உரிக்காமல் அப்படியே பயன்படுத்துவது வழக்கமாகி விட்டது.
ஆனாலும்’ சாஸ், சூப் போன்ற ரெசிபிகளுக்கு அவசியம் தக்காளியில் இருந்து தோல்களை அகற்றியே ஆக வேண்டும். எங்களிடம் எளிதான தீர்வு ஒன்று உள்ளது, அதைச் செய்ய உங்களுக்கு 5 நிமிடங்களே போதும்.
இந்த ஹேக் மூலம் நீங்கள் வீட்டிலேயே சாஸ், சூப் ரெசிபிகளை எளிதாக செய்யலாம். ஃபுட் விளாகர் @jaxfoodhax இந்த புதுமையான வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
எப்படி?
முதலில் தேவையான அளவு தக்காளி எடுத்து, அனைத்தையும் பாதியாக வெட்ட வேண்டும். பிறகு ஒரு சூடான கடாயில் சிறிது ஆலிவ் எண்ணெயை ஊற்றி, அதில் வெட்டிய பாகம் பாத்திரத்தில் படுமாறு வைத்து, மூடி வைத்து மூட வேண்டும். 5 நிமிடங்கள் கழித்து திறந்து பார்க்கும்போது, தக்காளியில் இருந்து தோல் லேசாக வெளியே வந்திருக்கும். உங்கள் இரு விரல்களைப் பயன்படுத்தி இந்த தோல்களை எளிதாக அகற்றலாம்.
என்ன! எளிதாக இருக்கிறதா? அடுத்தமுறை தக்காளி சாஸ் அல்லது சூப் செய்யும் போது இந்த குறிப்பை கண்டிப்பாக முயற்சி செய்து பாருங்கள்..
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“