சிறுவயதில் கிச்சன் ஸ்லாப்பில் அமர்ந்து அம்மா சமைப்பதைப் பார்த்தது நினைவிருக்கிறதா? நம்மில் பெரும்பாலோர் சமையல் கற்றுக்கொண்டது அப்படித்தான். இன்று, நாம் அதை வெவ்வேறு நவீன வழிகளில் கற்றுக்கொள்ள முயற்சிக்கிறோம். ஒரு சிலர் யூடியூப் வீடியோக்களைப் பார்த்து சமைக்க முயற்சி செய்கிறார்கள்.
நீங்கள் ஒரு சமையல் கலைஞராக இருந்தாலும் சரி அல்லது புதிதாக சமைப்பவராக இருந்தாலும் சரி, உங்கள் நேரத்தையும் சக்தியையும் மிச்சப்படுத்த சில எளிய வழிகள் உள்ளன. தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்!
உருளைக் கிழங்கு சேமிக்க

உருளைக் கிழங்கு ஏன் நீண்ட காலம் நீடிக்கவில்லை என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? முதலில் வெங்காயத்தை ஒரு தனி இடத்தில் சேமித்து வைக்கவும். உருளைக் கிழங்கு மற்றும் வெங்காயம் இரண்டும் ஈரப்பதம் மற்றும் வாயுக்களை வெளியிடுகின்றன, இதனால் மற்றொன்று வேகமாக கெட்டுவிடும், எனவே அவற்றை தனித்தனியாக வைத்திருப்பது நல்லது.
உருளைக்கிழங்கு ஃபிரை

உருளைக்கிழங்கு ஃபிரை செய்யும் போது அதில் சிறிது சோம்பை தூளாக்கி தூவினால் நல்ல வாசனையுடன் இருக்கும். அதேபோல, உருளைக்கிழங்கு வறுவல் செய்யும்போது, அரைக்கரண்டி புளிப்பு இல்லாத தயிர் சேர்த்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
உருளைக்கிழங்கை வேகவைப்பது நேரத்தை எடுத்துக் கொள்ளும். அதற்கு கத்தி கொண்டு உருளைக்கிழங்கை கீறிவிடுங்கள் அல்லது குத்துங்கள். துளைகளின் வழியே வெப்பம் ஊடுருவி உருளைக்கிழங்கு சிறிது நேரத்தில் மென்மையாக்க உதவும்!
சப்பாத்தி மாவு பிசையும் போது

சப்பாத்தி மாவு பிசையும் போது, அடிக்கடி கையில் மாவு ஓட்டிக் கொள்ளும். இதனால் மாவு சரியாக பிசைய முடியாது. இனி, சப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னால் கையில் சிறிதளவு உப்பை தடவிக் கொள்ளுங்கள், அப்படி செய்தால் கையில் சப்பாத்தி மாவு ஒட்டாது. பேக்கிங்கிற்கான இன்கிரிடியன்ட்ஸ் கலக்கும்போது ஒரு மரக் கரண்டியைப் பயன்படுத்தினால், மென்மையான மாவு கிடைக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“