Advertisment

உல்லன் ஷால், ஜாக்கெட்... சென்னை குளிருக்கு இதம் அளிக்கும் 117 ஆண்டு பாரம்பரியம்!

117 ஆண்டுகளாக சென்னையில் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் குளிர்கால உடைகளின் கடையைப் பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

author-image
Janardhan koushik
Nov 22, 2022 18:24 IST
New Update
உல்லன் ஷால், ஜாக்கெட்... சென்னை குளிருக்கு இதம் அளிக்கும் 117 ஆண்டு பாரம்பரியம்!

சென்னை பர்ரிஸுக்கு அருகிலுள்ள ரத்தன் பஜாரில் ஜூனஸ் சைட் & சன்ஸ்

சென்னையின் தட்ப வெப்பநிலையை அறிந்தவர் எவரும் குளிர்கால உடைகளின் கடை அமைப்பதை ஊக்குவிக்கமாட்டார்கள். ஆனால் அதை வெற்றிகரமாக நடத்தி வந்த ஒரு கடையைப் பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

Advertisment

இந்த கடையின் அறிமுகத்திற்கு பிறகு, மழைக்காலம் வந்தாலே சென்னை மக்கள் செல்லும் முதல் இடமாக மாறிவிட்டது. சென்னை பர்ரிஸுக்கு அருகிலுள்ள ரத்தன் பஜாரில் 'உள்ளேன் ஹவுஸ்' என்று அழைக்கப்படும் ஜூனஸ் சைட் & சன்ஸ், 117 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

publive-image

1905 ஆம் ஆண்டு, ஹஜீ இப்ராஹிம் சைட் என்பவரால் தொடங்கப்பட்ட இந்த கடை, தற்போது நான்காம் தலைமுறை உரிமையாளர் உஸ்மான் சேட் (வயது 62) என்பவரால் நடத்தப்படுகிறது.

publive-image

1905 ஆம் ஆண்டு, ஹஜீ இப்ராஹிம் சைட் என்பவரால் தொடங்கப்பட்டது இந்த கடை. (Express Photo)

117 ஆண்டுகள் பழமையான இந்த நிறுவனம் குளிர்கால ஆடைகள், குறிப்பாக கம்பளி ஆகியவற்றை சென்னை முழுவதும் பிரபலமாக விற்கப்படுகிறது என்பதால் கடையின் உரிமையாளர் பெருமிதம் கொள்கிறார்.

“அந்த காலத்தில் காலரா மற்றும் டைபாய்டு பாதிப்பு அதிகரித்ததால், எங்கள் முன்னோர்கள் கர்நாடகாவின் பெல்லாரியில் இருந்து சென்னைக்கு இடம்பெயர்ந்தனர். பட்டு, ரேயான், சட்டை போன்ற உடைகளை அறிமுகப்படுத்தினோம். சில ஆண்டுகளுக்குப் பிறகு, கம்பளி ஆடைகளை அறிமுகப்படுத்த ஆரம்பித்தோம். சென்னை ஒரு வெப்பம் மிகுந்த நகரம், இங்கு குளிர்காலம் வருவது மிகவும் கொஞ்சம் நாட்களுக்கு மட்டுமே என்று நினைத்தோம்.

ஆனால் 20 டிகிரி செல்சியஸுக்கு கீழே வெப்பநிலை குறைந்தால், இங்குள்ள மக்கள் நடுங்கத் தொடங்குவார்கள் என்பதை உணர்ந்து, குளிர்கால ஆடைகளுக்கு பெரும் தேவை இருப்பதைக் கண்டோம்.

publive-image

ஜூனஸ் சைட் & சன்ஸ் (Express Photo)

முக்கியமாக குழந்தைகளுக்கு கம்பளி சாக்ஸ், மப்ளர்கள் மற்றும் ஸ்வெட்டர் போன்ற உடைகளை மக்கள் வாங்கத் தொடங்கினார்கள். கனடா, ரஷ்யா, ஐரோப்பா என வெளிநாடுகளுக்கு பறக்கும் இளைஞர்கள் குளிர்கால ஆடைகளை எங்களிடம் வாங்குகிறார்கள். மேலும், ஊட்டி, சிம்லா, கொடைக்கானல் போன்ற உள்ளூர் சுற்றுலாத் தளங்களுக்கு செல்பவர்களும் எங்களிடம் ஆடைகள் வாங்குகிறார்கள்,” என்கிறார் உஸ்மான்.

ஜூனஸ் சைட், சென்னையின் ரேமண்ட் உரிமையாளர்களை முதலில் அறிமுகப்படுத்தினார். (Monte Carlo, Gadoni, Casa Blanca, Long Johns) ஆகியவை இப்போது விற்கும் சர்வதேச பிராண்டுகளில் சில. (Duck Band, Real Rainwear மற்றும் Reliable Rainwear) போன்ற பிராண்டுகளை இந்த கடை விற்பனை செய்து வருவதாக உஸ்மான் கூறுகிறார்.

உள்ளூர் பிராண்டுகளுடன் தாங்கள் கையாள்வதில்லை என்றும், கம்பளி சால்வைகள், ஜாக்கெட்டுகள், உள்ளாடைகள், தோல் கையுறைகள் மற்றும் தோல் ஜாக்கெட்டுகள் போன்ற தரமான தயாரிப்புகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதாகவும் உஸ்மான் கூறுகிறார்.

ஒரு வாடிக்கையாளரை இழப்பது பணியாளர்களில் 100 பேரை இழப்பதற்குச் சமம் என்று தனது தந்தை இப்ராஹிம் சைட்டின் தனக்கு கூறியதை உஸ்மான் நினைவு கூர்ந்தார்.

ஜூனஸ் சைட்-இல் உள்ள அனைத்து தயாரிப்புகளும் நிலையான விலையில் கிடைக்கின்றன, மேலும் வாடிக்கையாளர்களை பேரம் பேச வேண்டாம் என்று உஸ்மான் கேட்டுக்கொள்வதாக கூறுகிறார்.

publive-image

தற்போது நான்காம் தலைமுறை உரிமையாளர் உஸ்மான் சேட் (வயது 62) என்பவரால் நடத்தப்படுகிறது. (Express Photo)

“வாடிக்கையாளர்களுக்கு தரமான பொருட்களை வழங்க விரும்புகிறோம். நாங்கள் ஒருபோதும் விற்பனைக்காக விலையை உயர்த்தியதில்லை. அதுவே எங்கள் வாடிக்கையாளர்களிடம் நாங்கள் உருவாக்கிய நம்பிக்கையாகும். அதுதான் எங்கள் கடையை இத்தனை ஆண்டுகளாக இயக்கி வருகிறது,” என்கிறார் உஸ்மான்.

“எனது அப்பா காலத்தில் துணிமணிகள் வாங்கியவர்கள், தங்கள் பேரக்குழந்தைகளை கடைக்கு அழைத்து வருகிறார்கள். விற்பவர்-வாங்குபவர் உறவை விட இது ஒரு குடும்பம் போன்ற உணர்வை அளிக்கிறது. அவர்களுக்குத் தேவையானதை நான் அவர்களுக்குக் கொடுக்கிறேன், அவர்களுக்குப் பயன்படாத எந்தப் பொருளையும் நான் பரிந்துரைக்கவில்லை,” என்று அவர் கூறுகிறார்.

உஸ்மான் கூறுகையில், தனது தந்தை அருகில் இருந்தபோது, ​​கேஷ் கவுண்டரில் உட்காரும் வாய்ப்பு தனக்குக் கிடைக்கவில்லை என்றும், கடையில் ஏதாவது வேலை செய்து வருவதாகவும் கூறுகிறார்.

“இந்த இடத்தைப் பெற எனக்கு கிட்டத்தட்ட 45 ஆண்டுகள் ஆனது. இப்போது குடும்பத்தின் ஐந்தாவது தலைமுறையைச் சேர்ந்த எனது மகன்கள் நௌமான் சைட் மற்றும் சஃப்வான் சைட் ஆகியோர் கடையை நடத்தி வருகின்றனர், அவர்களுக்கு என்னால் இயன்ற வகையில் உதவுகிறேன்.

சென்னை பாரிஸ் தவிர, ஜூனஸ் சைட் அண்ட் சன்ஸ் நிறுவனம் புரசைவாக்கம் மற்றும் அடையார் ஆகிய இடங்களிலும் செயல்படுகிறது.

சென்னையில் உள்ள மற்ற கடைகளை உஸ்மானின் மனைவி சுலேகா உஸ்மான் சைட் மற்றும் மகன் சஃப்வான் சைட் ஆகியோர் நிர்வகித்து வருகின்றனர். அண்ணாநகர், பழைய மகாபலிபுரம் சாலை (OMR) போன்ற இடங்களுக்கு தங்கள் கடையை விரிவுபடுத்தலாம் என்று உஸ்மான் எண்ணுவதாக கூறுகிறார்.

உஸ்மானின் மகன் நௌமான் சேட், வக்கீல்களுக்கான ஆடைகளையும், நீதிபதிகளுக்கான ஆடைகளையும் தைக்கும் தையல் பிரிவை வைத்திருந்ததாகக் குறிப்பிடுகிறார், ஏனெனில் சென்னை உயர்நீதிமன்றம் அவர்களின் கடைக்கு அருகில் உள்ளது.

“எனது காலத்திற்கு பிறகு எனது மகன்கள் இக்கடையில் விற்கப்படும் ஆடைகளை இணையம் மூலம் விற்க முயற்சி செய்யலாம். ஆனால், அப்படி செய்தால் தொடர்ந்து வரும் வாடிக்கையாளர்களை விரட்டுவது போல ஒரு நிலை உருவாகும் உள்ளது.

வாடிக்கையாளர்கள் எங்கள் கடையில் விற்கப்படும் கம்பளியைத் தொட்டு, அதை உணர்ந்து, பின்னர் தயாரிப்பின் தரத்தை உணர்ந்து வாங்க வேண்டும். ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் மற்றவர்களை நான் எதிர்க்கவில்லை, அதே சமயம் எனது கடையின் கூட்டத்தை இழக்க விரும்பவில்லை, ”என்று அவர் கூறுகிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Tamil Nadu #Chennai #Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment