சென்னையில் 'பல்லாவரம் சந்தை' என்று பிரபலமாக குறிப்பிடப்படும் இந்நிகழ்வு, வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று அனைத்து விதமான விற்பனையாளர்களும் வருகைதரும் இடமாக அமைக்கப்பட்டுள்ளது.
'வெள்ளிக்கிழமை சந்தை' என்பது அதிகாலை 4 மணி முதல் இரவு 11:00 மணி வரை நடைபெறும், இங்கு காய்கறி முதல் செல்லப்பிராணிகள் வரை அனைத்தும் விற்கப்படும் இடமாக கருதப்படுகிறது.
சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையத்திற்கு அருகில் கிராண்ட் சவுத் ட்ரங்க் சாலைக்கு அருகில், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அதிகாலை நேரத்தில் இந்த சந்தை நடைபெறுகிறது. நூற்றுக்கணக்கான விற்பனையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் தங்கள் தற்காலிக விற்பனையாகங்களை அமைப்பதற்காக இப்பகுதிக்கு வருகிறார்கள், இது ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கிறது.
பல்லாவரம் கன்டோன்மென்ட் மூலம் பராமரிக்கப்படும் சந்தையின் தோற்றம் குறித்து அதிகாரப்பூர்வ பதிவு எதுவும் இல்லை என்றாலும், இது 100 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்ததாக நம்பப்படுகிறது.
சமூக ஆர்வலரும், பல்லாவரத்தில் நீண்டகாலமாக வசிப்பவருமான வி.சந்தானம் கூறுகையில், "பம்மல் பகுதிக்கு அருகில் இருந்த சந்தை, பத்தாண்டுகளுக்கு முன்பு மேம்பாலம் கட்டும் பணியின் காரணமாக தற்போதைய இடத்திற்கு மாற்றப்பட்டது", என்றார்.
“இந்தச் சந்தை ஆரம்பத்தில் மாட்டு சந்திப்பு (மாடுகளை விற்கும் இடம்) என்று அழைக்கப்பட்டது. கால்நடைகளை விற்பனை செய்வதற்காக அருகிலுள்ள நகரங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் வெள்ளிக்கிழமைகளில் இங்கு கூடுவார்கள். இது 1970களின் பிற்பகுதியிலும் நடந்தது.
இங்கிருந்து ரூ.70-க்கு ஒரு மாடு வாங்கினேன். பின்னர், மூர் மார்க்கெட் மூடப்பட்ட பிறகு, மக்கள் இந்த பகுதிக்கு மாறி, அனைத்து வகையான பொருட்களையும் விற்க ஆரம்பித்தனர்”, என்று சந்தானம் கூறுகிறார்.
"இந்தச் சந்தை சூரியனுக்குக் கீழே உள்ள அனைத்தையும் விற்கிறது" என்ற கூற்று வேடிக்கையாகத் தோன்றலாம், ஆனால் அது உண்மையில் சந்தைகளுக்குப் பொருந்தும். ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் பல்பொருள் அங்காடிகள் போன்ற நவீன கால வசதிகளின் பாரிய ஏற்றம் இருந்தபோதிலும், சந்தை ஒவ்வொரு வாரமும் பெரும் கூட்டத்தை ஈர்க்கிறது.
புறநகர் பகுதிகள், அண்டை நகரங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்தும் கூட விற்பனையாளர்கள் இங்கு கடையை அமைத்து விற்கிறார்கள். சந்தை, பொதுமக்களுக்கு ‘திருவிழா’ போன்ற உணர்வைத் தருகிறது என்று கூறப்படுகிறது", என்றார்.
இந்த சந்தையில் பூர்வீகமற்ற விற்பனையாளர்களும் நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்துள்ளனர். சரளமான தமிழில் உரையாடுவது அவர்களுக்கு கடினமாக இருந்தாலும், பலர் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தங்கள் தயாரிப்புகளை விரிவாக விவரிப்பதைக் காண முடிந்தது.
நூற்றுக்கணக்கான இரு சக்கர வாகனங்கள் அடுத்தடுத்து நிறுத்தப்படுவதால், இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் அடிக்கடி பரபரப்பு ஏற்பட்டு, ஆத்திரமடைந்த பொதுமக்களை போலீசார் சமாதானம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. அப்பகுதியில் வாகனத்தை நிறுத்த, 10 ரூபாய் செலுத்த வேண்டும்.
வெள்ளி சந்தை, கிட்டத்தட்ட இரண்டு கிலோமீட்டர் பரப்பளவில் உள்ளது, நுழைவாயிலுக்கு அருகில் காய்கறி மற்றும் பழ கடைகள் உள்ளன. மேலும் ஒருவர் முன்னோக்கிச் செல்லும்போது, சாலையின் இருபுறமும் ஆடைகள், மின்னணு உபகரணங்கள், வீட்டுப் பொருட்கள், சைக்கிள்கள், செல்லப்பிராணிகள், வெளிநாட்டு பறவைகள், உணவு மசாலாப் பொருட்கள், விளையாட்டு உபகரணங்கள், வாசனை திரவியங்கள், பழங்கால பொருட்கள், ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் விற்கும் கடைகளின் வரிசையைக் காணலாம்.
ஒரு பொருளை ரூ.10க்கு விற்கும் கடையில் இருந்து ரூ.50,000 விலையில் சோஃபாக்கள் மற்றும் அலமாரிகள் விற்கும் பர்னிச்சர் கடை வரை அனைத்து வகையான வாடிக்கையாளர்களுக்கும் பொருந்துகிறது. மற்ற இடங்களில் ரூ.1 லட்சம் விலையுள்ள சில பொருட்கள் ரூ.11,000 முதல் ரூ.12,000 வரை வாங்கலாம் என்றும், அவை தரமானதாக இருக்கும் என்றும் விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.
சண்டை சேவல்களை விற்கும் பல விற்பனையாளர்கள், மரக்கிளைகளின் கீழ் தங்கள் இடங்களை எடுத்துக்கொள்வதையும் காணலாம். ஒரு சண்டை சேவல் விலை ரூ.1,000 முதல் ரூ.2,500 வரை உள்ளது.
ஜீன்ஸ், ஷர்ட்கள் மற்றும் டி-சர்ட்களை ஒவ்வொன்றும் 100 ரூபாய்க்கு விற்கும் ஒரு கடைக்காரர், விற்காத பொருட்களை நகர ஷோரூம்களில் இருந்து மலிவான விலையில் வாங்கி, பின்னர் அவற்றை சந்தைக்கு விற்பதாக கூறுகிறார்.
மற்ற நகரங்களுக்கு அல்லது வெளிநாட்டிற்கு மாறுபவர்கள், இனி தேவைப்படாது என்று நினைக்கும் பொருட்களை அடிக்கடி விட்டுச் செல்வதாகவும், அந்த பொருட்களை அவர்கள் மலிவான விலையில் அல்லது சில சந்தர்ப்பங்களில் இலவசமாக வாங்குவதாகவும் கடைக்காரர்கள் கூறுகிறார்கள்.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் நாணயங்களை விற்கும் சாமிதுரையின் விற்பனையகம் உள்ளது, மேலும் பிற பழங்கால நோட்டுகள் மற்றும் சிலைகளும் இங்கு விற்கப்படுகிறது. சிறுவயதிலிருந்தே நாணயங்கள் சேகரிப்பதில் ஆர்வம் காட்டி வருவதாக சாமிதுரை கூறுகிறார்.
வடபழனியில் பழங்காலப் பொருள் கடை வைத்துள்ள சாமிதுரை, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சந்தையில் கடை வைப்பதாக கூறுகிறார். தொடக்கத்தில் தனித்துவமான பழங்காலப் பொருட்களைக் கண்டுபிடிப்பது தனக்கு கடினமாக இருந்தது, ஆனால் இப்போது பழங்கால பொருட்களை விற்க பலர் அவரைப் பார்க்க வருகிறார்கள் என்று அவர் கூறுகிறார்.
ராமநாதபுரத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த 64 வயதான ஆர்.ராதாகிருஷ்ணன், கொரோனா தொற்றிற்கு பிறகு அடிக்கடி சந்தை செல்ல ஆரம்பித்ததாக கூறுகிறார். ராதாகிருஷ்ணன் தனது சொந்த ஊரில் ஒரு சிறிய கடையை நடத்தினார், ஆனால் அது அதிக லாபம் ஈட்டாததால், அவர் தனது தளத்தை சென்னைக்கு மாற்றினார். கூடுவாஞ்சேரி அருகே வாடகைக்கு தங்கி, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சந்தைக்கு வந்து செல்வார்.
பழக்கடை நடத்தி வருபவர் பச்சையம்மாள்,(வயது 60), சுமார் 18 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் தன்னை விட்டுச் சென்ற பிறகு, தன்னைப் பார்த்துக்கொள்ள யாரும் இல்லை என்றும், பிழைக்க பழங்கள் விற்கத் தொடங்கினேன் என்றும் கூறுகிறார்.
கோயம்பேடு மொத்த விற்பனை சந்தையில் உள்ள கடுமையான விதிமுறைகள் காரணத்தால், தான் இங்கு கடை அமைத்ததாக பச்சையம்மாள் கூறுகிறார். கடைக்காரர்கள் சந்தைக்கு டெண்டர் வைத்திருப்பவருக்கு ஒவ்வொரு நாளும் ஒரு தொகையை செலுத்த வேண்டும் என்று அவர் கூறுகிறார்.
பச்சையம்மாளைப் போலவே, பல விற்பனையாளர்கள் சென்னையின் தொலைதூரத்தில் இருந்து பல்லாவரம் வரை வந்து பிழைப்பு நடத்துகிறார்கள். அவர்கள் வெள்ளிக்கிழமைகளில் இங்கு தங்கள் கடைகளை வைத்துவிட்டு மற்ற நாட்களில் சென்னையில் உள்ள மற்ற சந்தைகளுக்குச் செல்கிறார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.