கிருஷ்ண ஜெயந்தி இன்று (ஆகஸ்ட்- 11 ) கொண்டாடப்படுகிறது. சிறு பிள்ளைகளுக்கு கிருஷ்ண லீலைகளையும், அவர் செய்த குறும்புகளையும் கதையாக சொல்ல வேண்டும். கிருஷ்ண ஜெயந்தியை காலை நேரத்தில் வழிபடுவதை விட மாலை நேரத்தில் வழிபடுவதே சிறந்ததாகும்.
கோகுலாஷ்டமி, ஸ்ரீகிருஷ்ணா ஜெயந்தி, கிருஷ்ண ஜன்மாஷ்டமி போன்ற பல்வேறு பெயர்களில், கிருஷ்ணரின் பிறந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்து நாட்காட்டியின்படி, இந்த ஆண்டு, கிருஷ்ணரின் 5247 வது பிறந்த நாள் என கணிக்கப்படுகிறது.
இந்த விழாவை முன்னிட்டு கண்ணன் குழந்தையாக தங்கள் வீட்டிற்கு வருவது போன்று கால்தடங்களை வீட்டின் வாசலில் இருந்து பூஜையறை வரை இடுவார்கள். கிருஷ்ணருக்குப் பிடித்த உணவுப் பொருட்களை செய்தும், கிருஷ்ணரின் சிலைகளை அலங்கரித்தும் கொண்டாடி மகிழ்கின்றனர்.
கோபியர்களுடன் மாடு மேய்க்கும் போது கிருஷ்ண பகவான் எல்லோருடைய கட்டு சாதத்தையும் சேர்த்து உண்டது ஐதீகம். இந்த பாரம்பரியத்தை நினைவு கூர்ந்து பின்பற்றும் விதமாக தஹிகலா தயாரிப்பதும், தயிர் பானையை உடைப்பதும் வழக்கத்தில் உள்ளன.
விரதம் இருப்பவர்கள் நள்ளிரவில் கிருஷ்ணனின் பிறந்த நாளைக் கொண்டாடும் வரை விரதம் இருப்பது வழக்கம். நள்ளிரவில் பிரசாதத்தை உட்கொண்டு உபவாச விரதத்தை முடிப்பார்கள். அல்லது மறுநாள் காலையில் தஹிகலாவை உட்கொண்டும் உபவாசத்தை முடிப்பர்.
தஹிகலா என்பது பல்வேறு வகை தின்பண்டங்களுடன் தயிர், பால், வெண்ணெய் போன்றவற்றை கலந்து தயாரிக்கப்படுகிறது.கிருஷ்ணன் தனது உணவுடன் சகாக்கள் கொண்டு வந்திருக்கும் உணவு வகைகளையும் தயிருடன் கலந்து சேர்ந்து சாப்பிடுவார்கள். இந்நிகழ்வை அடிப்படையாக கொண்டு கிருஷ்ண ஜெயந்திக்கு அடுத்த நாள் தயிர் நிறைந்த பானையைத் தொங்கவிட்டு உடைப்பது வழக்கம். இதைத்தான் உறியடித் திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள். தமிழகத்தில் ஸ்ரீரங்கம் உள்பட முக்கிய பெருமாள் கோவில்களில் உறியடி நடக்கிறது.
கிருஷ்ண ஜெயந்தி: முக்கியத்துவம், பூஜை நேரம் முழு விவரம்
கிருஷ்ண பூஜை பொதுவாக நள்ளிரவில் நடத்தப்படுகிறது. ஷோடோபசார பூஜை 16 உபசாரங்கள் பூஜையின் ஒரு பகுதியாக உள்ளன.
ஜன்மாஷ்டமி திதி- ஆகஸ்ட் 11 (அஷ்டமி திதி – ஆகஸ்ட் 11 காலை 09:06 மணிக்கு தொடங்கி ஆகஸ்ட் 12 காலை 11:16 மணிக்கு முடிவடையும்)
நிஷிதா (நள்ளிரவு) பூஜை நேரம் – ஆகஸ்ட் 12, 12:21 முதல் 01:06 வரை
தாஹி ஹேண்டி (உறியடி திருவிழா )- ஆகஸ்ட் 12
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil