Advertisment

உங்க வேண்டுதல் நிறைவேறணுமா? கிருஷ்ண ஜெயந்தி 2023:  வழிபாடு, ஸ்பெஷல் பூஜை இப்படி செய்யுங்க

கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு மற்றும் பூஜை  எப்படி மேற்கொள்ள வேண்டும்? என்பது தொடர்பாக அனிதா குப்புசாமி தெளிவாக தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கிருஷ்ணர் ஜெயந்தி 2023: வழிபாடு, ஸ்பெஷல் பூஜை இப்படி செய்யுங்க

கிருஷ்ணர் ஜெயந்தி 2023: வழிபாடு, ஸ்பெஷல் பூஜை இப்படி செய்யுங்க

கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு மற்றும் பூஜை  எப்படி மேற்கொள்ள வேண்டும்? என்பது தொடர்பாக அனிதா குப்புசாமி தெளிவாக தெரிவித்துள்ளார்.

Advertisment

கிஷ்ண ஜெயந்தி வழிபாடு மற்றும் பூஜை தொடர்பாக அனிதா குப்புசாமி வீடியோவில் பேசியதிலிருந்து “ திருமாலின் 10 அவதாரங்களில் அனைவராலும் விரும்பி போற்றப்படுகிற அவதாரம் கிருஷ்ணர் அவதாரம். இந்நிலையில் கிருஷ்ணர் பிறந்த நாளில் சிறப்பான வழிபாடுகளை மேற்கொள்கிறார்கள். எப்போதெல்லாம் அநீதி மேல் ஓங்குகிறதோ அப்போதெல்லாம், அவதாறம் எடுப்பது மகாவிஷ்ணுவின் வழக்கம். எங்கெல்லாம் அநீதி இழைக்கப்படுகிதோ அப்போதெல்லாம் கிருஷ்ணா என்று சொல்லி அழைத்தால், கிருஷ்ணர் தோன்றுவார் என்பது வழக்கம். இதை நாம் கிருஷ்ணர் நாமம் சொல்லும்போது உணரலாம். துட்சாதனன் சபையில் பாஞ்சாலியின் துகில் உருக்கப்பட்டு கொண்டே இருக்கிறது. அப்போது யாராலும் காப்பாற்ற முடியவில்லை. சபையில் வந்த கிருஷ்ணர் பாஞ்சாலியை காப்பாற்றுகிறார். அப்போது கிருஷ்ணரிடம் ஒரு முக்கிய கேள்வி கேட்கப்படுகிறது. ” உங்கள் தங்கைக்கு இதுபோன்ற சம்பவம் நடைபெறுவதற்கு முன்பே, இதை தடுத்து ஏன் நிறுத்தவில்லை “ என்று கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த கிருஷ்ணர் ‘யாராவது என்னை கூப்பிட்டால்தான் அங்கே செல்வேன். அது தங்கையானாலும் சரி பக்தர்கள் ஆனாலும் சரி “ என்று தெரிவித்துள்ளார்.

தெய்வ மந்தரங்கள் என்று சொல்லும்போது, தனித் தனி வார்த்தைகள் சேர்த்து நாம் மந்திரங்கள் சொல்லுவோம். கிருஷ்ணா என்று அவரது பெயரை சொன்னாலே அது மகா மந்திரம் ஆகிறது. ஓம் கிருஷ்ணாய நமஹ என்று சொல்வது மகா மந்திரமாக மாறுகிறது. எப்படிபட்ட மனக் கவலைகள் இருந்தாலும் அதை நீக்குபவர் கிருஷ்ணன். கிருஷ்ண ஜெயந்தியை நாம் கோகுலாஷ்டமி, ஜென்மாஷ்டமி என்று பல பெயர்களில் வழிப்பட்டுக்கொண்டு வருகிறோம். கிருஷ்ணர், ஆவனி மாதம் தேய்பிறையில்தான் அவதாரம் புரிந்தார்.

அஷ்டமி சிறப்பான நாள் என்பதால்தான் கால பைரவர், வராகி அம்மன் மற்றும் கிருஷ்ணரை வணங்குகிறோம். இந்த நாளை நல்ல நாள் இல்லை என்று ஒதுக்கக்கூடாது.

அஷ்டமி திதி செப்டம்பர்- 06- இரவு 9 மணி 14 நிமிடங்களுக்கு பிறகு அஷ்டமி திதி தொடங்கும். ரோகிணி நட்சத்திரம் தொடங்கும் நேரம் செப்டம்பர் 6 மாலை 03 மணி 25 நிமிடங்களுக்கு பிறகு. அஷ்டமி திதி நிறைவடையும் நாள் மற்றும் நேரம், செப்டம்பர் – 7 இரவு 09 மணி 14 நிமிடம் வரை. ரோகிணி நட்சத்திரம் நிறைவடையும் நேரம் மற்றும் நாள் செப்டம்பர் 7 – மாலை 03 மணி 59 நிமிடங்கள் வரை உள்ளது. இந்நிலையில் இதனால் 6ம் தேதி அல்லது 7ம் தேதிகளில் எந்த தேதியில்  கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடலாம் என்ற கேள்வி எழும். திதி தொடங்கும் நேரத்தை வைத்துதான் சைவர்கள் எந்த ஒரு வழிப்பாட்டையும் மேற்கொள்வார்கள். சைவர்கள் 6ம் தேதி கிருஷ்ணர் ஜெயந்தி விரதம் மேற்கொண்டு கொண்டாட வேண்டும். வைணவர்கள் பெரும்பான்மையானோர் 7ம் தேதி ரோகிணி நட்சத்திரத்தை அடிப்படையாக வைத்து கொண்டாடுவார்கள்.

இந்நிலையில் தமிழ்நாட்டை பொருத்தவரை செப்.6ம் தேதிதான் அனைவரும் கிஷ்ணர் ஜெயந்தியை கொண்டாடுகிறார்கள். கண்ணன் நள்ளிரவில்தான் அவதாரம் எடுத்தார். இந்நிலையில் 6ம் தேதி காலையிலேயே விரதத்தை தொடங்க வேண்டும். தொடர்ந்து 7ம் தேதி காலையில் விரதத்தை முடித்துக்கொள்ள வேண்டும்.

எப்படி வழிபாடு செய்ய வேண்டும் ?

கிருஷ்ணர் படம் அல்லது சிலை இருந்தால், அதை சுத்தம் செய்ய வேண்டும். சிலை இருந்தால், துளசி கலந்த தண்ணீரில் அபிஷேகம் செய்யலாம். நன்றாக அபிஷேகம் செய்ய வேண்டும் என்று நினைதால் வெண்ணை, பால், நெய் ஆகியவற்றில் அபிஷேகம் செய்யலாம். பால் தொடர்பான விஷயங்கள் கிருஷ்ணருக்கு பிடிக்கும் என்பதால் அதில் செய்த எல்லாவற்றையும் நாம் கிஷ்ணருக்கு படைக்கலாம். சிறிய பானையில் வெண்ணை அல்லது நெய் அதில் வைக்கலாம். நெய் வைத்தியமாக அவல் உருண்டை, சீடை, பொறி, பால், பழங்கள் வைக்கலாம். திருப்தியாகும் வரை வழிபாடு செய்ய வேண்டும். துளசி தளம் மிகவும் முக்கியம். பானகம் தயாரித்து அதில் துளசி சேர்த்து அதை நாம் பிரசாதமாக குடிக்கலாம். விரதம் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் நாள் முழுவதும் எதையும் சாப்பிடக்கூடாது. வயதானவர்கள், குழந்தைகள், நோய் வாய்பட்டவர்கள், கர்ப்பிணிகள் விரதம் இருக்க வேண்டாம். விரதம் இருக்கும்போது பசித்தால், கிருஷ்ணருக்கு படைத்த பால் அல்லது பழத்தை நாம் சாப்பிடலாம்.

மேலும் நாள் முழுவதும் அமைதியாக இருந்து மகாமந்திரமான ’ஸ்ரீ கிருஷ்ணாய நமஹ’ என்று சொல்ல வேண்டும். உங்கள் வேண்டுதல்களுக்கு பலன் கிடைப்பதை நீங்கள் பார்க்க முடியும். இந்நிலையில் எண்ணிக்கையில் மந்திரங்களை சொல்லலாம் என்று நினைப்பவர்கள், 108 முறை, 9 முறை, 11 முறை,21 முறை, 54 முறை,  65 முறை என்ற எண்ணிக்கையில் சொல்லலாம். துளி மாலையை வைத்துதான் இந்த மந்திரத்தை நாம் சொல்ல வேண்டும். நாம் பூஜைக்கு எல்லாம் தயாராகிவிட்டோம், அந்த நேரத்தில் வீட்டுக்கு தூரம் ஆகிவிட்டோம் அல்லது பூஜை செய்ய இயலாத சூழ்நிலை ஏற்பட்டது என்றால். வீட்டில் இருக்கும் கணவர் அல்லது குழந்தைகளின் பிரசாதத்தை கிருஷ்ணனுக்கு படைத்துவிட்டு. தண்ணீர் ஊற்றி அர்பணம் செய்துகொள்ளுங்கள். தொடர்ந்து பூஜை அறைக்கு வெளியில் அமர்ந்து மகாமந்திரமான ’ஸ்ரீ கிருஷ்ணாய நமஹ’ என்று சொல்லுங்கள்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment