Krishna Janmashtami Date 2019: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நாடு முழுவதும் கொண்டாட்டம் களை கட்டுகிறது. கிருஷ்ணருக்குப் பிடித்த உணவுப் பொருட்களை செய்தும், கிருஷ்ணரின் சிலைகளை அலங்கரித்தும் கொண்டாடி மகிழ்கின்றனர்.
கிருஷ்ண ஜெயந்தி வருகிற 24-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த விழாவையொட்டி கண்ணன் குழந்தையாக தங்கள் வீட்டிற்கு வருவது போன்று கால்தடங்களை வீட்டின் வாசலில் இருந்து பூஜையறை வரை இடுவார்கள். கிருஷ்ணருக்குப் பிடித்த உணவுப் பொருட்களை செய்தும், கிருஷ்ணரின் சிலைகளை அலங்கரித்தும் கொண்டாடி மகிழ்கின்றனர்.
Krishna Jayanthi Date 2019: கிருஷ்ண ஜெயந்தி
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு விரதம் இருப்பவர்கள் நள்ளிரவில் கிருஷ்ணனின் பிறந்த நாளைக் கொண்டாடும் வரை விரதம் இருப்பது வழக்கம். நள்ளிரவில் பிரசாதத்தை உட்கொண்டு உபவாச விரதத்தை முடிப்பார்கள். அல்லது மறுநாள் காலையில் தஹிகலாவை உட்கொண்டும் உபவாசத்தை முடிப்பர்.
தஹிகலா என்பது பல்வேறு வகை தின்பண்டங்களுடன் தயிர், பால், வெண்ணெய் போன்றவற்றை கலந்து தயாரிக்கப்படுகிறது. கோபியர்களுடன் மாடு மேய்க்கும் போது கிருஷ்ண பகவான் எல்லோருடைய கட்டு சாதத்தையும் சேர்த்து உண்டது ஐதீகம். இந்த பாரம்பரியத்தை நினைவு கூர்ந்து பின்பற்றும் விதமாக தஹிகலா தயாரிப்பதும், தயிர் பானையை உடைப்பதும் வழக்கத்தில் உள்ளன.
கிருஷ்ணனுக்கு வெண்ணெய் மிகவும் பிடித்தமானது என்று கருதுவதால் அதை கிருஷ்ணனுக்கு நிவேதனம் செய்கின்றனர். வெண்ணெய் ஏன் பிடித்தமானது? என்பது சுவாரசியமானது. கொடுங்கோல் மன்னனான கம்சன் மக்களுக்கு அதிக வரி விதித்தான். அந்த வரியைக் கட்டுவதற்காக மக்கள் வெண்ணெய் விற்கும் கட்டாயத்திற்குள்ளானார்கள். தவறான முறையில் வரி விதித்து மக்களைத் துன்புறுத்தும் கம்சனிடமிருந்து மக்களைக் காப்பாற்றவே கண்ணன் வெண்ணெய் தின்பதும் அதை வாரி இறைப்பதுமான செயல்களைச் செய்தான் என ஐதீகம் கூறுகிறது.
கிருஷ்ணன் தனது உணவுடன் சகாக்கள் கொண்டு வந்திருக்கும் உணவு வகைகளையும் தயிருடன் கலந்து சேர்ந்து சாப்பிடுவார்கள். இந்நிகழ்வை அடிப்படையாக கொண்டு கிருஷ்ண ஜெயந்திக்கு அடுத்த நாள் தயிர் நிறைந்த பானையைத் தொங்கவிட்டு உடைப்பது வழக்கம். இதைத்தான் உறியடித் திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள். தமிழகத்தில் ஸ்ரீரங்கம் உள்பட முக்கிய பெருமாள் கோவில்களில் உறியடி நடக்கிறது.