சமீபத்தில் கே.எஸ். ரவிக்குமார் தன்னுடைய பேரக் குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது.
Advertisment
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார். இவரது மனைவி கற்பகம்…
இந்த தம்பதிக்கு 3 மகள்கள் உள்ளார்கள்.
Advertisment
Advertisements
ஒரு மகள் ஜனனி ரவிக்குமார் ஒரு ஃபிட்னெஸ் ஆர்வலர், சொந்தமாக தொழில் செய்து வருகிறார்.
இன்னொரு மகள் ஜஸ்வந்தி ஒரு டாக்டர், தற்போது சென்னையில் புதிதாக அர்மோரா என்ற டெர்மடாலஜி கிளினிக்கை திறந்திருக்கிறார், இவரது கணவர் அரவிந்த் கூட மருத்துவர் தான்.
மூத்த மகள் மல்லிகா, பெண்களுக்கான Life coaching நிறுவனத்தை நடத்தி வருகிறார்…
ஒருமுறை மல்லிகா சூரியன் எஃப்.எம்.க்கு அளித்த பேட்டியில் Life coach பயணம் குறித்து நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
எனக்கு லாக்டவுன் சமயத்தில் குழந்தை பிறந்தது. அந்த சமயத்தில் சரியாக எதுவும் செய்யமுடியவில்லை. டெலிவரி, பிரசவத்துக்கு பிந்தைய மன அழுத்தம், கோவிட் பயம் இப்படி பல்வேறு காரணங்களால் மிகவும் உடைந்து போய் விட்டேன். அந்த சமயத்தில் தான் என்னை நம்பி ஒரு குழந்தை வந்துவிட்டது. இனி யாருடைய ஆறுதலையும் எதிர்பார்த்து நாம் வாழக்கூடாது என்று உணர்ந்தேன்.
ஏதாவது செய்ய வேண்டும் என முடிவெடுத்து இந்தியாவிலேயே சிறந்த லைஃப் கோச்களில் ஒருவரான பூஜா என்பவரை சந்தித்தேன். அவர்களிடம் சென்ற பின்னர் என்னுடைய வாழ்க்கையே மாறியது. மன அழுத்தம், டென்ஷன், பானிக் அட்டாக் என்று இருந்த நான் மிகவும் பாசிட்டிவ்வாக- மாறினேன்.
அப்போதுதான் எனக்கு ஒரு யோசனை தோன்றியது. என் வாழ்க்கை மாறியிருக்கிறது. நன்றாக பேசுகிறேன். கஷ்டப்பட்ட சமயத்தில் பிரச்னைகள் குறித்த நிறைய அனுபவங்கள் கிடைத்திருக்கிறது. நான் ஏன் ஒரு ‘Life coach’ ஆகக் கூடாது என்று எண்ணி இந்த பாதையில் வந்தேன். மிகவும் நன்றாக போய்க் கொண்டிருக்கிறது.
கிட்டத்தட்ட 800-க்கும் மேற்பட்ட தமிழ்ப் பெண்களின் பிரச்னைகளை தீர்த்து வைத்துள்ளேன், என்று கூறினார்.
என்ன தான் பெரிய இயக்குனரின் மகளாகவே இருந்தாலும் தன் மூன்று மகள்களும் இன்று தங்கள் சொந்த காலில் நல்ல நிலையில் இருப்பதைப் பார்த்து கே.எஸ்.ரவிக்குமார் பெருமிதத்துடன் இருக்கிறார்.
மகள்களுக்கு நல்ல வழியைக் காட்டிய அவரை ரசிகர்களும் வாழ்த்தி வருகின்றனர்….
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“