இந்த குருமாவை ஒரு முறை செய்தால் போதும். இது அனைவருக்கும் பிடிக்கும்.
தேவையான பொருட்கள்
டபிள் பீன்ஸ் – 1 கப்
தேங்காய் எண்ணெய் – 3 ஸ்பூன்
அரை ஸ்பூன் சோம்பு
பிரிஞ்சு இலை – 2
ஒரு பட்டை
2 கிராம்பு
2 ஏலக்காய்
3 பச்சை மிளகாய்
2 பெரிய வெங்காயம்
உப்பு தேவையான அளவு
தக்காளி 2
1 ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
மஞ்சள் தூள் – ¼ கால் டீஸ்பூன்
கரம் மசாலா- ½ டீஸ்பூன்
மல்லி தூள்- 1 ஸ்பூன்
மிளகாய் தூள்- அரை ஸ்பூன்
3 ஸ்பூன் தயிர்
தேங்காய் அரை மூடி
கசகசா – 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் 3
முந்திரி – 6
செய்முறை: டபிள் பின்ஸை இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். தொடர்ந்து அதை வேக வைத்து எடுத்துகொள்ளவும். இரு குக்கரில் எண்ணெய் சேர்த்து, சோம்பு, பிரிஞ்சு இலைகள், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பச்சை மிளகாய் நறுக்கியது, வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். தொடர்ந்து அதில் இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் பொடி, கரம் மசாலா, மிளகாய் தூள், தயிர் சேர்த்து வதக்கவும். தொடர்ந்து மிக்ஸியில் தேங்காய், கசகசா, முந்திரி, பச்சை மிளகாய் சேர்த்து அரைத்துகொள்ளவும். தொடர்ந்து இதை குக்கரில் சேர்த்து கிளரவும். 1 விசில் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“