முதல் பொண்ணுக்கு சென்னையில..இரண்டாவது பொண்ணுக்கு கேரளா.. லட்சுமி ராமகிருஷ்ணன் வீட்டு திருமணங்கள்!

வீட்டுல நடந்த முதல் விசேஷம்கிறதால கொஞ்சம் கிராண்டா இருந்துச்சு

By: Updated: August 28, 2020, 03:08:13 PM

lakshmi ramakrishnan daughter instagram lakshmi ramakrishnan daughter: நடிகையும், தயாரிப்பாளரும் இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன், ZEE தொலை க்காட்சியில் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சி மூலமாக பட்டிதொட்டி யெல்லாம் அறிமுகமானவர். இந்நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்கியதன் மூலம் அவர் சந்தித்த பிரச்சனைகள் கேலி கிண்டல்கள் மிக மிக அதிகம். ஆனால் அவை எல்லாவற்றையும் தவிடு பொடியாக்கி சினிமாவில் தனக்கென தனி ரசிகர்களை சம்பாதித்துள்ளார். குணசித்திர வேடங்களாக இருந்தாலும் சரி, அம்மாவாக இருந்தாலும் சரி யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தும் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு தனி ஃபேன்ஸ் உண்டு.

நடிப்பதில் மட்டுமில்லை இவர் ‘அம்மணி’, ‘நெருங்கி வா முத்தமிடாதே’, ‘ஆரோகனம்’ ‘ஹவுள் ஓனர்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். அடிக்கடி சமூகவலைதளத்தில் கருத்துக்களை வெளியிட்டு ஒரு லைம் லைட்டிலேயே இருப்பவர் இவர்.இவரின் 2 மகள்களின் ஸ்பெஷல் திருமண மொமண்ட்களை ரீவைண்ட் பண்ணல்லாம் வாங்க.

35 வயது வரை ஓமன் நாட்டில் கணவருடன் வாழ்ந்து வந்தார் லட்சுமி ராமகிருஷ்ணன். பின்பு தனது மூன்று செல்ல மகள்களின் கல்விக்காக கனவருடன் கோயமுத்தூர் வந்து செட்டில் ஆனார்.்இவரது இரண்டாவது மகளின் காதலையும் அங்கீகரித்து பஞ்சாபி மாப்பிள்ளையை மருமகனாக ஏற்றுக் கொண்டுள்ளார. இவரது இரண்டாவது மகள் ஸ்ருதி-அங்கிட் நிச்சயதார்த்த‌ம் டெல்லியில் நடந்தது. பின்பு இயற்கை எழில் சூழ்ந்த கேரளாவின் குமரகத்தில் திருமணம் முடிந்த்து. மூத்த மகளின் திருமணத்திற்கு மொத்த சினிமா இன்டஸ்ட்ரிக்கும் அழைப்பு விடுத்திருந்தவர், இந்தத் திருமணத்திற்கு நெருங்கிய நட்பு வட்டாரத்தை மட்டுமே அழைத்திருந்தார்.

மூத்த மகள் சாரதா கோயம்புத்தூர்ல சாரதா கோவை படிச்சிட்டு மாஸ்டர் டிகிரிக்காக அமரிக்கா போனாங்க் அப்ப தான் அவரின் நண்பர் அஸ்வினை காதலித்து கரம் பிடித்தாங்க. இவர்களின் திருமணம் பிராமண் முறைப்படி சென்னையில் பிரம்மாண்டமாக நடந்தது.

இரண்டாவது மகள் ஸ்ருதி சி.ஏ., முடிச்சுட்டு டெல்லி யில ஹையர் ஸ்டடீஸ் பண்ணப்ப, டெல்லியில செட்டிலான பஞ்சாபி ஃபேமிலி பையன் அங்கிட்டை காதலித்து கரம் பிடித்தார். . அங்கிட்டோட அப்பா, ரிட்டயர்டு ஆர்மி மேன். நிச்சயதார்த்தம் மாப்பிள்ளை வீட்டுல நடந்திச்சு. கல்யாணம் ‘டெஸ்டி னேஷன் வெட்டிங்’ஏரி, படகு வீடு னு அமைதியும் அழகும் சூழ்ந்த இயற்கையான குமரகம். பொதுவான ஆரிய சமாஜ் முறைப்படி நடந்துச்சு.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Lakshmi ramakrishnan daughter instagram lakshmi ramakrishnan daughter wedding lakshmi ramakrishnan daughter marriage

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X