Latest Trendy dress designs for women Tamil News : எப்போதும் ஒரேபோன்ற ஆடைகளை உடுத்தி சலித்துபோனவர்களுக்கு, வித்தியாசமான அதுவும் எளிமையான தோற்றம் கொடுக்கக்கூடிய டாப் 5 ட்ரெண்டி உடைகளின் அப்டேட்டுகளை பார்க்கலாம்.
டிசைன் 1 - ட்ரெடிஷனல் டச் இருக்கவேண்டுமென்றால், நிறங்கள் அதற்கு முக்கிய பங்கு வகிக்கின்றன. பச்சை மற்றும் மெரூன் நிறங்களில் ஆடைகளை தேர்வு செய்வதன் மூலம், ட்ரெடிஷனல் லுக் எளிதில் பெறலாம். அதிலும், ப்யூர் சில்க் மெட்டிரியலில், புடவை, சல்வார் கமீஸ், லெஹெங்கா, அனார்கலி உள்ளிட்ட ஆடைகளை உடுத்தினால் நிச்சயம் வித்தியாச அதே நேரத்தில் ட்ரெடிஷனல் தோற்றத்தை எளிதாகப் பெறலாம்.
டிசைன் 2 - பனாரஸ் மெட்டிரியலில் ஒரேயொரு துப்பட்டா வைத்துக்கொள்ளுங்கள். நிச்சயம் இது பல மேஜிக் செய்யும். பாவாடை அணிந்து தாவணியாகவும் உடுத்திக்கொள்ளலாம். அல்லது, ப்ளெயின் சல்வாருக்கு அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த துப்பட்டாவாகவும் உடுத்திக்கொள்ளலாம்.
டிசைன் 3 - இந்தக் காலத்துப் பெண்களுக்கு பொதுவாக அதிக எடை கொண்ட புடவை வகைகள் பிடிக்காது. அவர்களுக்கென்றே மார்க்கெட்டில் சில்வர் டிஷ்யூ புடவை இறக்குமதி ஆகியிருக்கின்றன. பார்ப்பதற்கு அதிக எடை கொண்டதுபோல் காட்சியளித்தாலும், இவை மிகவும் லைட் வெயிட் வகை. அதிலும் ஏராளமான டிசைன்களில் தற்போது கிடைக்கின்றன. அலுவலகம் மற்றும் கல்லூரி செல்லும் பெண்களுக்கு நிச்சயம் இது சிறந்த தேர்வாக இருக்கும்.
டிசைன் 4 - பனாரசி புடவை மீது முன்பு இருந்த ஆசை தற்போது ஏனோ குறைந்துவிட்டது. ஆனால், ஏற்கெனவே வீட்டிலிருக்கும் பனாரசி புடவையை அனார்கலி அல்லது ஸ்ட்ரெயிட் கட் சுடிதாராக மாற்றி உடுத்தலாம். நிச்சயம் இது வித்தியாச மற்றும் ட்ரெடிஷனல் தோற்றம் கொடுக்கும்.
டிசைன் 5 - பனாரசி புடவைகளை போலவே போச்சம்பள்ளி புடவைகளையும் அனார்கலி மாடலில் தைத்து உடுத்திக்கொள்ளலாம். கூடுதலாக இடைப் பகுதியில் பெல்ட் மாடல் இணைத்து உடுத்தினால், கூடுதல் ஸ்டைலாக இருக்கும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil