/tamil-ie/media/media_files/uploads/2017/08/sleep-759.jpg)
இரவில் போதுமான நேரம் உறங்காத குழந்தைகளுக்கு டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான ஆபத்து அதிகம் என, ஆராய்ச்சி ஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
லண்டனில் உள்ள புனித ஜார்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்தது. இந்த ஆராய்ச்சிக்காக, 9-10 வயதிலான 4,525 குழந்தைகளின் உடல் அளவீடுகள், ரத்த மாதிரிகள் ஆகியவை ஆய்விற்காக எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்த ஆய்வில், அதிக நேரம் உறங்கும் குழந்தைகள், குறைந்த உடல் எடை மற்றும் உடல் கொழுப்புகளை கொண்டிருப்பது தெரியவந்தது. ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவு, இன்சுலின், இன்சுலின் எதிர்ப்பு ஆகியவற்றைப் பொறுத்தும் உறக்க நேரம் அமையும்.
10 வயதுள்ள குழந்தை சுமார் 10 மணிநேரம் உறங்குவது அவசியம் என இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை அமைப்பு பரிந்துரைக்கிறது.
”அதிக நேரம் குழந்தைகள் உறங்குவதன் மூலம் அவர்களது உடலில் உள்ள கொழுப்புகள் குறையும், டைப் 2 நீரிழிவு நோய் வருங்காலத்தில் ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கும் என இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.”, என ஆராய்ச்சியாளர் கிரிஸ்டோஃபர் ஓவன் கூறினார்.
“குழந்தை காலங்களில் அதிக நேரம் உறங்குவதன் மூலம் கிடைக்கும் பலன்கள் இளமைக் காலங்களிலும் அவர்களது உடல் நலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.”, என அவர் கூறினார்.
சராசரியாக வாரத்திற்கு ஒரு முறை தூக்க நேரத்தை (10.5 மணி நேரம்) அதிகரிப்பதன் மூலம், பி.எம்.ஐ. 0.1 கிலோகிராம் குறைவு மற்றும் இன்சுலின் எதிர்ப்பில் 0.5 சதவீத குறைப்பு ஆகியவற்றுடன் தொடர்புடையதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன்மூலம், வருங்காலத்தில் டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்க முடியும் என ஆரய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.