அடித்து போட்டது மாதிரி தூக்கம்... 'நோ' மன அழுத்தம்; பெட் ரூமில் இந்த 'பூ' மட்டும் வச்சு பாருங்க!

உங்கள் மன அழுத்தத்தை போக்கும் பூ குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

உங்கள் மன அழுத்தத்தை போக்கும் பூ குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

author-image
Nagalekshmi Rajasekar
New Update
poo

தற்போதைய காலக்கட்டத்தில் மிக முக்கிய நோயாக பார்க்கப்படுவது மன அழுத்தம் தான். நமக்கு ஏற்படும் மன அழுத்தத்தினால் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. குறிப்பாக தூக்கமின்மை ஏற்படுகிறது. இன்றை சூழலில் பலரும் தூக்கம் வரமால் தவிக்கின்றனர். இதற்கு மன அழுத்தம் மட்டும் காரணமல்ல நம் வாழ்க்கை முறையும் ஒரு காரணமாகும். ஆரோக்கியமற்ற உணவு, நீண்ட நேரம் செல்போன்களை பார்ப்பது, நேரம் தவறி உண்பது என பல பிரச்சனைகளால் நம் தூக்கம் கெடுகிறது.

Advertisment

முறையான தூக்கம் இல்லாததால் நமக்கு உடல் சார்ந்த பிரச்சனைகள் பல ஏற்படுகின்றன. எப்படியாவது தூங்கிவிட வேண்டும் என்று நினைப்பவர்கள் இனிமேல் இந்த ஒரு பூவை மட்டும் பயன்படுத்தினால் போதும். அது வேறு ஒன்றும் மருதாணி பூ தான். நம் வீட்டின் அருகில் தெருக்களில் மருதாணி செடிகள் அதிகம் வளர்ந்து இருப்பதை பார்த்திருப்போம். பொதுவாக மருதாணி இலைகளை நாம் கையில் வைக்கவும், தலையில் வெள்ளை முடிகளை மறைக்கவும் பயன்படுத்துகிறோம்.

ஆனால், மருதாணி இலைகள் அதற்கு மட்டுமின்றி பல மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆமாம் நாம் தேவையில்லை என்று வெட்டி வீசும் மருதாணி இலையிலும், பூவிலும் அவ்வளவு மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன. மருதாணி இலைகள், பூக்கள் மற்றும் விதகைகள் எவ்வாறு பயன்படுத்தலாம் என்று மருத்துவர் கார்த்திகேயன் கூறியுள்ளார். 

அவர் பேசியதாவது,  “மருதாணிப் பூவில் பல மருத்துவ குணங்கள் உள்ளது. இது தோல் நோய்கள், சோரியாசிஸ் போன்ற நோய்கள் பாதித்த இடங்களில் அரைத்து போடப்படுகிறது. இந்த பூ செரிமானத்திற்கு உதவுகிறது. சிலர் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க மருதாணி பூவை சாப்பிடுவார்கள். சிலர் மன அழுத்தத்தை போக்க நல்ல தூக்கம் வர இந்த பூவை தலைக்கு அடியில் வைத்து தூங்குவார்கள். மருதாணி செடியின் விதைகளை சாம்பிராணி உடன் போட்டால் நல்ல மணம் வரும். 

Advertisment
Advertisements

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: