லோ பி.பி இருக்கு... ஆனாலும் 28 கிலோ குறைத்த நரம்பியல் நிபுணர்; அவரே சொன்ன 3 சீக்ரெட்ஸ்!

எவ்வளவு கஷ்டப்பட்டும் உடல் எடையை குறைக்க முடியவில்லை என்று புலம்புவோர்களுக்கு மூன்று சீக்ரெட் டிப்ஸ்களை நரம்பியல் நிபுணர் சுதீர் குமார் கூறியுள்ளார்.

எவ்வளவு கஷ்டப்பட்டும் உடல் எடையை குறைக்க முடியவில்லை என்று புலம்புவோர்களுக்கு மூன்று சீக்ரெட் டிப்ஸ்களை நரம்பியல் நிபுணர் சுதீர் குமார் கூறியுள்ளார்.

author-image
Nagalekshmi Rajasekar
New Update
sudhir

உடல் எடை அதிகரிப்பு என்பது உலக பிரச்சனையாகும். இன்றைய நவீன காலக்கட்டத்தில் நம் உடல்களை நாம் முறையாக பராமரிப்பதில்லை. வேலை பளு, சரியான தூக்கமின்மை, மன அழுத்தம், உடல் நலக் கோளாறு என பல பிரச்சனைகளால் ஒவ்வொருவருக்கும் உடல் எடை அதிகரிக்கிறது. இந்த உடல் எடை அதிகரிப்பால் சுவாசக் கோளாறு, கொழுப்பு சத்து கூடுதல் என மேலும் பல பிரச்சனைகள் வந்து சேர்கின்றன.

Advertisment

உடல் எடை குறைக்க முடியாமல் தவிப்பவர்களுக்கு மூன்று சீக்ரெட் டிப்ஸ்களை நரம்பியல் நிபுணர் சுதீர் குமார் கூறியுள்ளார். 100 கிலோ உடல் எடையில் இருந்த மருத்துவர் சுதீர் குமார் லோ பி.பி. இருந்தும் இந்த மூன்று டிப்ஸ்கள் மூலம் தன் எடையை 72 கிலோவாக குறைத்துள்ளார். இதனால், தனது எடை மட்டும் குறையாமல் ஆரோக்கியமும் மேம்பட்டுள்ளதாக அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். 

மூன்று சீக்ரெட் டிப்ஸ்

சீரான ஓட்டம், முறையான தூக்கம் மற்றும் டயட் போன்றவற்றால் நம் உடல் எடையை குறைக்கலாம் என்று மருத்துவர் சுதீர் குமார் கூறியுள்ளார். முதலில் கடந்த 2021-ஆம் ஆண்டு ஓட்ட பயிற்சியில் ஈடுபடும்போது 
ஒரு நளைக்கு 15 கிலோ மீட்டர் வரை சுதீர் குமார் ஓட்ட பயிற்சி மேற்கொண்டுள்ளார். தொடர்ந்து, 2023-ஆம் ஆண்டு இந்த கிலோ மீட்டர் வீதம் குறைந்து 12 முதல் 10 கிலோ மீட்டராகவும், 2024 முதல் 7 முதல் 8 கிலோ மீட்டர் வரை ஓடி வருகிறாராம். மேலும், முதலில், ஓட்ட நடைப்பயிற்சியில் ஈடுபடுபவர்கள் 2 முதல் 3 கிலோ மீட்டர் வரை ஓடுங்கள். முறையான காலணிகள் அணிந்து ஓடுங்கள். மேலும் உங்கள் இதய துடிப்பையும் சீராக வைத்திருங்கள் என்று அவர் கூறியுள்ளார்.

முறையான டயட்

மருத்துவர் சுதீர் குமார் கார்போஹைட்ரேட்ஸ் மற்று பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் குளிர்பானங்கள் குடிப்பதை தவிர்த்துள்ளார். அதுமட்டுமல்லாமல், தான் உண்ணும் உணவில் அதிக புரத சத்தை சேர்த்துள்ளார். இரவு உணவை 7 மணிக்குள் முடிப்பதுடன் உடலுக்கு தேவையற்ற உணவுகளை தவிர்த்துள்ளார். இந்த உணவு பழக்கம் உடற்பயிற்சியுடன் சேர்ந்து ஆரோக்கியமான வாழ்க்கையை உருவாக்கியதாக கூறியுள்ளார்.

Advertisment
Advertisements

சரியான தூக்கம்

முதலில் 4 முதல் 5 மணி நேரம் தூங்கிக் கொண்டிருந்த சுதீர் தனது தூங்கும் நேரத்தை மாற்றியுள்ளார். அதாவது, இரவு 10 மணிக்கு தூங்க செல்லும் அவர் காலை 5 மணிக்கு எழுந்துகொள்ளும் பழக்கத்தை முறைப்படுத்தியுள்ளார். இதன் மூலம் சுதீர் ஒரு நாளைக்கு 7 முதல் 8 மணிநேரம் வரை தூங்குவதாக தெரிவித்துள்ளார். மருத்துவர் சுதீர் குமாரின் சமூக வலைதளப் பதிவை பார்த்த நெட்டிசன்கள் தங்களது டயட் பிளானையும் பகிர்ந்து வருகின்றனர்.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: