Advertisment

செழிக்கும் தமிழ் கலாச்சாரம், விநாயகர் கோயில்: பாரீஸில் ‘லிட்டில் ஜாஃப்னா’ எப்படி இருக்கு பாருங்க

ஏறக்குறைய ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் ஃபிரான்சில் வாழ்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் இந்த சுற்றுப்புறத்தை தங்கள் வீடு என்றே அழைக்கின்றனர்.

author-image
abhisudha
New Update
Little Jaffna in Paris

Little Jaffna in Paris

பாரீஸின் லாஷெப்பல்லா பகுதிக்குள் நுழைந்தால், இலங்கையில் இருப்பது போன்ற உணர்வு உங்களுக்கு நிச்சயமாக ஏற்படும். இலங்கையின் பாரம்பரிய உணவு விடுதிகள் முதல் புடவை கடைகள் வரை பாரீஸ் சுற்றுலாவாசிகளை வெகுவாக கவர்கிறது இந்த பகுதி.

Advertisment

பாரீஸில் இலங்கை மக்கள் அதிகம் வாழும் லிட்டில் ஜாஃப்னாஎப்படி உருவானது தெரியுமா?

இதுதொடர்பாக DW Tamil யூடியூப் சேனலில் வெளியான வீடியோ 

இங்குள்ள இலங்கை கடைகளின் பெயர் பலகைகள் தமிழில் எழுதப்பட்டுள்ளன. இங்குள்ள உணவகங்களிலும் இலங்க உணவுகள் விற்பனை செய்யப்படுகின்றன.

நாங்கள் இங்கு வரும்போது சொந்த நாட்டுக்கு வருவதை போன்று உணர்கிறோம். கலாச்சாரம், மதம், உணவு என அனைத்தையும் இங்கு உணர முடியும், என்று பூரிக்கிறார் தமிழ் சுற்றுலாவாசி அத்ரேயீ… 

Paris

ஏறக்குறைய ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் ஃபிரான்சில் வாழ்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் இந்த சுற்றுப்புறத்தை தங்கள் வீடு என்றே அழைக்கின்றனர்.

பாரீஸின் இந்த பகுதி ‘லிட்டில் ஜாஃப்னா’ என்ற புனைப்பெயரையும் பெற்றுள்ளது. இலங்கையின் வடக்கே தமிழில் யாழ்ப்பாணம் என்று அறியப்படும் ஒரு நகரம் தான் இந்த ஜாஃப்னா… 

Paris

லாஷெப்பல்லா பகுதியில் தான் முதன்முதலில் தமிழ் கடைகள் ஆரம்பமானது, ஆனால் 1983ஆம் ஆண்டில் ஸ்ரீலங்காவில் இனப் போர் கடுமையாக வந்ததைத் தொடர்ந்து இங்கு நிறைய கடைகள் வந்தது. இங்கு பலசரக்கு கடைகள், புடவை கடைகள், ரெஸ்டாரண்ட் என்று ஏறக்குறைய 500 கடைகள் இருக்கிறது.

இந்த இடத்தில் தான் தமிழர்களின் முக்கிய கலை, கலாச்சாரம் வளர்ந்து வரும் இடங்கள் இருக்கிறது.

இங்கு தினமும் ஏராளமான தமிழ் மக்கள் வருகிறார்கள், பொருட்களை வாங்குகிறார்கள். இந்த அடிப்படையில் இந்த இடம் பலவிதங்களில் முக்கியமாக இருக்கிறது, என்கிறார் மனித உரிமைகளுக்கான தமிழ் மையத்தின் கிருபாஹரன்….

லாஷெப்பல்லா பகுதியில் விநாயகர் கோயில் ஒன்றும் உள்ளது. நகரத்தின் இந்த பகுதியானது சுற்றுலாவாசிகளிடையே பிரபலமாகி விட்டது.

Paris

இந்த பகுதி அற்புதமாக உள்ளது. முதன்முறையாக நான் இங்கு வந்திருக்கிறேன். நான் ஒரு புடவை வாங்க வேண்டும், அதனால் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். இங்கு நிறைய விஷயங்கள் உள்ளன, அழகான உடைகள், வித்தியாசமான பழங்கள் என இந்த பகுதி சுவாரஸ்யமாகவும், தனித்துவமாகவும் உள்ளது, என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார் பிரிட்டிஷ் சுற்றுலாவாசி கமிலியா….

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Lifestyle Dw Tamil News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment