Advertisment

ஆசியாவிலேயே கேரளா நாம் நிச்சயம் பார்க்க வேண்டிய இடம்: ஏன்?

2017-ஆம் ஆண்டில் ஆசியாவில் நாம் நிச்சயம் பார்க்க வேண்டிய பத்து இடங்களை ‘லோன்லி பிளானட்’ அண்மையில் வெளியிட்டது. அதில், கேரளா மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது.

author-image
Nandhini v
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஆசியாவிலேயே கேரளா நாம் நிச்சயம் பார்க்க வேண்டிய இடம்: ஏன்?

2017-ஆம் ஆண்டில் ஆசியாவில் நாம் நிச்சயம் பார்க்க வேண்டிய பத்து இடங்களை ‘லோன்லி பிளானட்’ எனப்படும் உலக பயண நிபுணர்கள் அமைப்பு அண்மையில் வெளியிட்டது. அதில், இந்தியாவில் கேரள மாநிலம் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது.

Advertisment

லோன்லி பிளானட் வெளியிட்ட 10 இடங்கள் குறித்து சிறிய குறிப்புகளை காணலாம்.

1.கன்சு, சீனா

publive-image

சீனாவில் உள்ள கன்சுவில் அதிவேகமான ரயில்கள், சிறந்த நெடுஞ்சாலைகள் ஆகியவற்றிற்கு பெயர் பெற்றவை. வண்னமயாமான மலைகள் நம்மை மலைக்க வைக்கும். அதிலுள்ள பல்வேறு வகையான கற்கள் அந்த மலைகளுக்கு வண்ணப்பூச்சு பூசியது போன்ற நிறங்களைக் கொடுக்கும்.

2.தெற்கு டோக்கியோ, ஜப்பான்

publive-image

உலகை சுற்றிப்பார்க்க ஆசைப்படும் அனைவருக்குமே மிகப்பிடித்த நாடு ஜப்பான். அதன் சுவைமிக்க உணவுகளுக்காகவே ஜப்பானுக்கு செல்லத் தோன்றும். டோக்கியாவில் நாம் நிச்சயம் பார்க்க வேண்டிய இரு நகரங்கள் யோக்கோஹமா மற்றும் காமகுரா. டோக்கியோவிலிருந்து 20 நிமிட ரயில் பயணம் மூலம் நாம் யோக்கோஹமாவிற்கு சென்றுவிடலாம். கடற்கரை நகரம், பன்முகம் கொண்ட கட்டடங்கள், நாக்கில் எச்சில் ஊற வைக்கும் உணவுகள் ஆகியவை மக்களை வெகுவாக கவரும். டோக்கியோவிலிருந்து ஒரு மணிநேர ரயில் பயணம் மூலம் கடற்கரையை நோக்கிய காமகுரா இடத்தை நாம் அடையலாம். மனதை மயக்கும் கஃபே, ரெஸ்டாரண்டுகள் இந்த நகரத்திற்கு பெயர் போனவை.

3.வட கேரளா, இந்தியா

publive-image

கேரளாவை பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை. தெய்வத்தின் திருநாடு கேரளா. எங்கு பார்த்தாலும் பச்சைபசேல் என காட்சியளிக்கும், ஓடைகள் ஓடிக்கொண்டே இருக்கும். கேரளாவிலேயே மிகப்பெரிய விமான நிலையம் கன்னூரில் திறக்கப்பட உள்ளது. அதனால், இன்னும் நாம் வட கேரளாவை சுற்றிபார்ப்பது எளிதாகிறது. அங்குள்ள தொட்டாடா, பேக்கல் கடற்கரைகள் நம்மை நிச்சயம் மயக்கிவிடும்.

4. கியோங் சேக் சாலை, சிங்கப்பூர்

publive-image

சிங்கப்பூர் என்றாலே வானளவு உயர்ந்திருக்கும் கட்டடங்கள் புகழ்மிக்கவை. அதிலும் கியோங் சேக் சாலையில் உள்ள அற்புத வேலைப்பாடு கொண்ட கட்டடங்களை காண்பதற்காகவே அங்கு செல்ல வேண்டும். கட்டடங்களின் வடிவமைப்பு, மிகச்சிறந்த காக்டெய்ல் பார்கள் ஆகியவை நவீன சிங்கப்பூரின் சாட்சியங்களாக நிமிர்ந்து நிற்கும்.

5.ஆஸ்தானா, கஜகஸ்தான்

publive-image

45 நாடுகளின் குடிமக்கள் கஜகஸ்தானை 30 நாட்களுக்கு விசா இல்லாமலேயே சுற்றிப்பார்க்கலாம். புதுப்பிக்கத்தக்க ஆற்றல் எனும் தலைப்பில் ஆஸ்தானாவில் வரும் செப்டம்பர் மாதம் கண்காட்சி நடைபெற உள்ளது. அதற்குள் ஆஸ்தானாவிற்கு சென்றுவிடுங்கள்.

6.டக்கயாமா, ஜப்பான்

publive-image

ஜப்பானின் மத்தியில் ஹிடா மாகாணத்தில் அமைந்துள்ளது டக்காயாமா. ஜப்பானின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தை நாம் அங்குதான் தெரிந்துகொள்ள முடியும். கிமி நோ நா வா (உன் பெயர்) என்ற திரைப்படத்தின் மூலம் இந்த இடத்தை பற்றி அதிகம் அறிந்துகொள்ள முடிகிறது. அங்கு நிறைய மத வழிபாட்டுத் தலங்கள் இருப்பதால் யாத்திரீகர்களும் அதிகம் வருகை தருவர்.

7.சியான், சீனா

publive-image

சீனாவின் பாரம்பரிய இடங்கள் பெரும்பாலானவை சியானிலேயே உள்ளன. இந்த இடத்தை உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அமைப்பு அறிவித்து இந்த ஆண்டுடன் 30 ஆண்டுகள் நிறைவடைகிறது. இங்கு 3 நாட்கள் விசா இல்லாமலேயே நாம் பயணம் மேற்கொள்ளலாம் என்பது கூடுதல் சிறப்பு.

8.ஹில் கண்ட்ரி, இலங்கை

publive-image

இலங்கையிலுள்ள ஹில் கண்ட்ரியில் உள்ள மலை ரயிலில் பயணம் செய்வதற்காக சுற்றுலா பயணிகள் நிச்சயம் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றாக உள்ளது.

9.மேலகா சிட்டி, மலேசியா

publive-image

மேலகா நதியில் படகு சவாரி செய்வது வேறொரு புதிய அனுபவத்தைத் தரும்.

ராஜா அம்பாட், இந்தோனேஷியா

publive-image

இங்குள்ள இந்தோனேஷிய தீவுகள் நம்மை மிகவும் பரவசப்படுத்திவிடும். 200-க்கும் மேலான டைவிங் ஸ்பாட்கள் இங்குள்ளன.

China Malaysia Indonesia Singapore Japan Kazakhstan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment