தனியாக இருப்பதே இளைஞர்களின் தூக்கமின்மைக்கு முக்கிய காரணம் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஒருவர் தனிமையைல் இருக்கிறார் என்றால், அவர் துயரத்தில் இருக்கிறார் என்றே அர்த்தம். சமூகத்துடன் அதிக ஈடுபாடு இல்லாமல் இருப்பவர்களுக்கே, தனிமையில் இருக்க ஏற்படுகிறது என ஆராய்சியாளர்கள் கருதுகிறன்றனர். இந்நிலையில், இளைஞர்களின் தூக்கமின்மைக்கான காரணம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் போது 18-19 வயது கொண்ட சுமார் 2000 இளைஞர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தனிமையில் இருக்கும் இளைஞர்கள் மற்றவர்களை காட்டிலும் அதிக சோர்வாக இருப்பதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது, தனிமையில் இருக்கும் இளைஞர்கள் சோர்வாக இருப்பதோடு, ஒரு குறிப்பிட்ட வேலை செய்யும் போது அவர்களால் அதில் முழு ஈடுபாட்டுடன் கவனம் செலுத்த முடிவதில்லையாம். அவர்களால் ஆழ்ந்த தூக்கத்திற்கு செல்ல முடிவதில்லை என்பதோடு, தூக்கம் வருவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம், தூங்கும் நேரம் மற்றும் தூக்கத்தின் போது ஏற்படும் திடீர் தடங்கல்கள் என பல்வேறு பிரச்சனைகள் அவர்கள் சந்திக்க நேரிடுகிறதாம்.
இது தொடர்பாக லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியின் பேராசிரியர் லூயிஸ் கூறும்போது: தூக்கமின்மைக்கு பல்வேறு காரணங்கள் இருந்த போதிலும், தனிமை தான் தூக்கமின்மைக்கு முக்கிய காரணமாக உள்ளது. தனிமையை ஏற்படுத்தக் காரணிகளாக இருக்கும் எதிர்வினை சிந்தனைகள் மற்றும் உணர்வுகளை ஆரம்பத்திலே தடுப்பதன் முக்கியத்துவத்தை இந்த ஆய்வு முடிவு தெளிவுபடுத்துகிறது என்று கூறினார்.
வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவோர்களிடம் தனிமை மற்றும் தூக்கமின்மை பிரச்சனை அதிகமாக தென்படுகிறது. குறிப்பாக குற்றச் செயல்கள், பாலியல் துஷ்பிரயோகம், குழந்தைகளை கொடுமை செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுவோர்களிடம் தனிமை மற்றும் தூக்கமின்மை பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தனிமையால் பாதிக்கப்பட்டவர்களின் தொடர் தூக்க நிலையானது அவர்களுக்கு பாதுகாப்பின்மை மற்றும் உச்சக்கட்ட மனநல பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்பதற்கான அறிகுறியாக கூட இருக்கலாம். கடந்த காலங்களில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் தனிமை, தூக்கமின்மை பிரச்சனைளுக்கு தொடர்பை ஏற்படுத்தும் காரணியாக இருக்கலாம். தனிநபர் ஒருவர் சந்திக்கும் தூக்கமின்மை பிரச்சனைக்கு பாதுகாப்பின்மை போன்ற உணர்வே காரணம் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.