scorecardresearch

பிக்பாஸ்ல இருக்கும் போது உங்களை ரொம்ப பிடிச்சிருந்தது, ஆனா இப்போ

இதைப் பார்த்த ரசிகர்கள், பிக்பாஸ்ல இருக்கும் போது உங்களை ரொம்ப பிடிச்சிருந்தது, ஆனா இப்போ கம்மி ஆயிடுச்சு என்று கூறி வருகின்றனர்.

பிக்பாஸ்ல இருக்கும் போது உங்களை ரொம்ப பிடிச்சிருந்தது, ஆனா இப்போ
Losliya Mariyanesan

இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் பிறந்தவர் லாஸ்லியா மரியநேசன். குடும்ப வறுமையின் காரணமாக, 18 வயதிலே செய்தி வாசிப்பாளராக வேலைக்கு சென்றார். அங்கு ஓரளவுக்கு கிடைத்த புகழ் மூலம் பிக்பாஸ் சீசன் 3 போட்டியில் கலந்து கொண்டார். அப்போது தான் தமிழ் ரசிகர்களுக்கு லாஸ்லியா அறிமுகமானார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு, பிறகு லாஸ்லியா ப்ரென்ட்ஷீப் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார்.  கே.எஸ்.ரவிக்குமார் தயாரித்து, நடித்த ‘கூகுள் குட்டப்பா’ படத்தில் லாஸ்லியா முக்கிய வேடத்தில் நடித்தார். இப்போது மேலும் சில படங்களில் லாஸ்லியா நடித்து வருகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சமூக ஊடகங்களில் ஏராளமான ரசிகர்கள் லாஸ்லியாவை பின்தொடர்கின்றனர். லாஸ்லியா ஏற்கெனவே உடல் எடை குறைந்து மிகவும் ஒல்லியாக இருந்தார். இந்நிலையில் அவரது சமீபத்திய புகைப்படங்களில் லாஸ்லியா மேலும் மெலிந்திருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள், பிக்பாஸ்ல இருக்கும் போது உங்களை ரொம்ப பிடிச்சிருந்தது, ஆனா இப்போ கம்மி ஆயிடுச்சு என்றும் நீங்கள் குண்டாக இருக்கும் போதுதான் அழகாக இருந்தீங்க; இப்போ எடை குறைஞ்சீட்டிங்க; உங்க அழகும் போயிடுச்சு என கமென்டில் பதிவிட்டு வருகின்றனர்.

லாஸ்லியா பகிர்ந்த அந்த போட்டோஸ் இங்கே

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Losliya mariyanesan instagram photos losliya mariyanesan movies