சமீபத்தில் ஜி5 ஓடிடியில் வெளியான அயலி வெப் சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த வெப் சீரிஸில் மைதிலி கேரக்டரில் நடித்த லவ்லின் சந்திரசேகர், பிரபல தமிழ் நடிகை விஜி சந்திரசேகரின் மகள் ஆவார். இவர் நடிகை சரிதாவின் தங்கை.
Advertisment
லவ்லின் ஏற்கெனவே ஹவுஸ் ஓனர், மருதா மற்றும் பேட்டைக்காளி படங்களில் நடித்திருந்தாலும் அயலி படம் இவருக்கு நல்ல விமர்சனங்களை தேடித் தந்தது.
எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் லவ்லின், அதில் அடிக்கடி தன்னுடைய போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்வார். அப்படி லவ்லின் கலம்காரி குர்தா அணிந்து, சிம்பிள் மேக்கப் லுக்குடன் இருக்கும் படங்கள் இன்ஸ்டாவில் வைரல் ஆகியது.
இங்கே பாருங்க.
கலம்காரி ஓவியங்கள் பல ஆண்டுகளுக்கு அப்படியே பிரதிபலிக்கும் என்பதால், மற்ற ஓவியங்களிலிருந்து தனித்துவம் பெறுகிறது. இந்த துணி ஓவியங்கள் தேர்ச் சீலைகள், தோரணங்கள், தேர்க் குடைகள் மற்றும் கோயில்களில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. துணிகளில் கைகளால் மட்டுமே தீட்டப்படும் இந்த ஓவியத்துக்கு உலகளவில் வரவேற்பு உள்ளது.
ஒரு ஓவியத்துக்குத் தேவையான நிதானத்தைப் போலக் கலம்காரி ஆடையொன்று ஆயத்தமாவதற்கு கிட்டதட்ட ஏழு நாட்கள் தேவைப்படுகின்றன.
கலம்காரியின் பிறப்பிடம் சிந்து சமவெளி என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். அலைந்து திரியும் கதைசொல்லிகளான நாட்டாரிசைப் பாடகர்கள், ஓவியர்கள் ஆகியோரிடம் இருந்து பரிணாம வளர்ச்சி பெற்ற இந்தக் கலையை கோல்கொண்டா, மச்சிலிப்பட்டினம், சோழ மண்டலப் பகுதிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய இன்றைய ஆந்திர மாநிலத்தில் அங்கீகரித்து வளர்த்தெடுத்து இருக்கின்றனர். ஆங்கிலேயர் வருகைக்குப் பிறகு இந்தக் கலை மேலும் செழித்திருக்கிறது.
கலம்காரி ஆடையின் ஒவ்வொரு இழைக்குள்ளும் நம் சிந்து சமவெளி முன்னோர்களின் நினைவுகள், கதை சொல்லிகளின் வண்ணமயக் கதாபாத்திரங்கள் பிணைந்துள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“