இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு மாதவன் நடித்த ‘ராக்கெட்ரி தி நம்பி விளைவு’ படம் நல்ல விமர்சனங்களை பெற்றது. இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக மாதவன் அறிமுகமானார்.
இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன், ராக்கெட் தொழில்நுட்பத்தை வெளிநாட்டுக்கு விற்றதாக, 1994-ல் கேரள காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கில் நம்பி நாராயணன் நிரபராதி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன் பின்னணியில் உள்ள உண்மையை வெளிப்படுத்தும் கதையாக உருவான படம்தான் இது,
ஒருமுறை இந்த படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய மாதவன்; எனக்கு சொந்தமாக ஒரு வீடு கிடையாது. இந்தியாவிலோ, துபாய்யிலோ நான் வாடகை வீட்டில் தான் தங்கியிருக்கிறேன். இந்தமுறை இந்தப் படத்துக்கு பிறகு ஒரு வீடு வாங்க வேண்டும் என எனது மனைவி என்னிடம் உறுதி வாங்கியுள்ளாள். ஏனென்றால், ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் ஒரு முறை நாங்கள் வீடு மாற வேண்டியுள்ளது என்று கூறினார்.
தற்போது மாதவன் தனது அடுத்த அடுத்த வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் அவர் மும்பையில் புதிதாக கட்டிய வீட்டின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது, மாதவன் தனது மனைவி சரிதா, மகன் வேதாந்த், பெற்றோர் சரோஜா மற்றும் ரங்கநாதன் மற்றும் அவரது செல்லப்பிராணிகள் உடன் இந்த வசிக்கிறார்.
பெரிய ஹால், வீட்டுக்குள் படிக்கட்டு, சுற்றிலும் கண்ணாடி, வெளியே சிலைகளுடன் தோட்டம் என அந்த வீடு பார்க்க பாரம்பரியமாகவும், மாடர்ன் லுக்கில் அழகாக இருக்கிறது.
மாதவன் வீட்டின் சில காட்சிகள் இங்கே…


“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“