உடலுக்கு தேவையான சத்தாக மெக்னீஷியம் கருதப்படுகிறது. இந்த சத்து ரத்த அழுத்தத்தை சீராக வைத்துகொள்ள உதவுகிறது. நீங்கள் மெக்னீஷியம் நீறைந்த இந்த உணவுகளை எடுத்துகொள்ள வேண்டும்.
கீரை
எல்லா வகையான கீரையிலும் மெக்னீஷியம் சத்து உள்ளது. இந்நிலையில் தவறாமல் கீரையை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பூசணி விதைகள்
பூசணி விதைகளில் மெக்னீஷியம் சத்து அதிகம் உள்ளது. இந்நிலையில் இதை நாம் ஒரு ஸ்நாக்ஸாக எடுத்துகொள்ளலாம்.
முந்திரி
முந்திரியில் அதிக அளவில் மெக்னீஷியம் உள்ளது. இந்நிலையில் இதையும் நாம் உணவில் சேர்த்துகொள்ளலாம்.
சூரிய காந்தி விதைகள்
இதிலும் மெக்னீஷியம் அளவு மிகவும் அதிகம். இந்நிலையில் இதை சாலடில் சேர்த்துகொள்ளலாம். அல்லது ஸ்நாக்ஸாக கூட எடுத்துகொள்ளலாம்.
வாழைப்பழங்கள்
இந்நிலையில் வாழைப்பழத்தில் பொட்டாஷியம் சத்து மட்டும் இல்லை மெக்னீஷியம் சத்துகளும் உள்ளது.
கீன்வா
இதில் அதிக அளவு மெனீஷியம் உள்ளது. இது தானியங்களின் அன்னை என்று அழைக்கப்படுகிறது.
டோஃபூ
இதில் மெக்னீஷியம் அதிகம் உள்ளது. இதை நாம் சூப் அல்லது மிதமான தீயில் வறுத்து எடுத்துகொள்ளலாம்.
அத்தி பழம்
அத்தி பழத்தில் அதிக மெக்னீஷியம் உள்ளது. இந்நிலையில் இதை பழமாகவும் அல்லது உலர வைத்து சாப்பிடலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“