மகா சிவராத்திரி 2024: விரதம் தொடங்கும் நேரம்; வழிபாடு முறை; உச்சரிக்க வேண்டிய எளிய மந்திரங்கள்
மகாசிவராத்திரி நன்னாளில், சிவபெருமானை வழிபட்டால் நமக்குப் புண்ணியங்கள் வந்து சேரும் என்றும் நம் முன் ஜென்மப் பாவங்கள் முதலானவை கூட விலகும் என்கிறது சிவபுராணம்.
மகாசிவராத்திரி நன்னாளில், சிவபெருமானை வழிபட்டால் நமக்குப் புண்ணியங்கள் வந்து சேரும் என்றும் நம் முன் ஜென்மப் பாவங்கள் முதலானவை கூட விலகும் என்கிறது சிவபுராணம்.
அம்பிகைக்கு நவராத்திரி... ஆடல்வல்லானுக்கு ஒரே ராத்திரி... சிவராத்திரி என்பார்கள்.
Advertisment
மாசி மாதத்தில், தேய்பிறை சதுர்த்தசி நாளில் வருகிற மகா சிவராத்திரி பலன்களையும் புண்ணியங்களையும் தரக்கூடியது என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
சிவபெருமானுக்குரிய விரதங்களிலேயே சிறப்பானதொரு விரதமாக போற்றப்படுவது, மகா சிவராத்திரி வைபவம்தான். அதனால்தான் மகாசிவராத்திரி நன்னாளில், சிவபெருமானை வழிபட்டால் நமக்குப் புண்ணியங்கள் வந்து சேரும், நம் முன் ஜென்மப் பாவங்கள் எல்லாம் விலகும் என்கிறது சிவபுராணம்.
மகா சிவராத்திரி விரதம்
Advertisment
Advertisements
’மகா சிவராத்திரி அன்று விரதம் இருப்பவர்கள், சிவராத்திரிக்கு முதல் நாள் ஒருவேளை மட்டுமே உணவு உட்கொள்ள வேண்டும். இயலாதவர்கள், இரவுப் பொழுதில் எளிமையான, எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவை எடுத்துக் கொள்ளலாம்.
மகாசிவராத்திரி அன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து, வீட்டில் உள்ள சிவபெருமானின் படத்திற்கு தீப தூப ஆராதனை செலுத்தி வழிபட வேண்டும். தொடர்ந்து, அருகில் உள்ள சிவன் கோயிலுக்குசென்று தரிசனம் மேற்கொள்ள வேண்டும்.
மாலையில் மீண்டும் குளித்துவிட்டு, சிவபூஜையை இல்லத்தில் செய்ய வேண்டும்.அருகில் உள்ள சிவன் கோயில்களில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டு வழிபடுவது மகத்துவம் மிக்கது.
சிவராத்திரி முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்கள், ஒவ்வொரு ஜாம பூஜை முடித்த பிறகும் தண்ணீர், பால், பழங்களை உண்ணலாம்.
சிவராத்திரி விரதம் இருப்பதால், தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கும் என்பது ஐதீகம்.
வருகிற வெள்ளிக்கிழமை (மார்ச் 8) மகா சிவராத்திரி. அன்று நாம் விரதம் தொடங்கும் நேரம், வழிபாடு முறை, உச்சரிக்க வேண்டிய மந்திரங்கள் குறித்து தன் யூடியூப் வீடியோவில் கூறுகிறார் பிரபல பாடகி அனிதா புஷ்பவனம் குப்புசாமி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“