விஜே.. லவ் மேரேஜ்… குக்கிங் ஷோ.. இப்ப பட்டிமன்ற பேச்சாளர்! மணிமேகலை ராக்ஸ்.

வேறு வழியின்றி நண்பர்கள் முன்னிலையில் இவர்கள் பதிவு செய்து கொண்டனர்.

manimegalai age manimegalai husband hussain : சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தனது கரியரை தொடங்கியவர் வி.ஜே.மணிமேகலை. அங்கு பல லைவ் ஷோ-க்களையும், பிரபலங்களின் நேர்க்காணலையும் தொகுத்து வழங்கிய அவர், ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். சில வருடங்களுக்கு முன்பு பெற்றோர் எதிர்ப்புகளை மீறி, உசைன் என்ற நடன இயக்குநரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

கோயம்புத்தூரை சேர்ந்த மணிமேகலை, சென்னை எஸ்.ஆர்.எம் பல்கலைக் கழகத்தில் எம்.பி.ஏ பயின்றார். இதைப்பற்றி ஒரு நேர்க்காணலில், ”வீட்டிலிருந்து முதல் எதிர்ப்பு குரலோடு என் பயணம் ஆரம்பிச்சது. எனக்குச் சொந்த ஊர் கோயம்புத்தூராக இருந்தாலும், வளர்ந்ததெல்லாம் சென்னைதான். விஸ்காம் படிக்க ஆசைப்பட்டேன். ‘அந்த கோர்ஸ் படிச்சு என்ன பண்ணப் போறேன்’னு பெற்றோர் சிகப்புக் கொடி காட்டினாங்க. அந்தக் கோபத்தில் வீட்டிலேயே ஒரு மாசம் உட்கார்ந்திருந்தேன்.

ஹுசைனுக்கும் மணிமேகலைக்கும் காதல் மலர்ந்தது. திருமணத்திற்கு மணிமேகலையின் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததால், வேறு வழியின்றி நண்பர்கள் முன்னிலையில் இவர்கள் பதிவு செய்து கொண்டனர். அதன் பின்னர் 2019-ல் விஜய் டிவி நடத்திய ’மிஸ்டர் அண்ட் மிஸஸ்’ சின்னத்திரை எனும் நடன நிகழ்ச்சியில் பங்கேற்க மணிமேகலை மற்றும் அவரது கணவர் ஹுசைனுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஹுசைன் இயல்பில் நடன இயக்குனர் என்பதால் மணிமேகலைக்கு பிரச்சினை ஏதும் இல்லாமல் நடன முறைகளை அவரது கணவரே கற்றுத்தந்து தன்னுடன் ஆட வைத்தார். அந்த நிகழ்ச்சி இவர்களுக்கு ஒரு நல்ல பெயரைத் தேடித் தந்தது.

இதனைத் தொடர்ந்து தற்போது விஜய் டிவி-யிலேயே ஐக்கியமாகி விட்டார் மணிமேகலை. அதுமட்டுமில்லை, இப்ப பல மேடைகளில் மணிமேகலையை பட்டிமன்ற பேச்சாளாரகவும் பார்க்க முடிகிறது. வாழ்த்துக்கள் மணி.

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Manimegalai age manimegalai husband hussain age manimegalai marriage manimegalai instagram

Next Story
சிவப்புத் தோலும் பாலியல் தேர்வும்… கறுப்பு என்பது வெறுப்பா?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com