Advertisment

தாங்க முடியாத பீரியட்ஸ் வலி இயல்பானது தானா? நிபுணர்கள் சொல்வது என்ன?

மாதவிடாயின் போது ஏற்படும் வலி இயல்பானது என்றாலும், அதிகப்படியான வலி கவனிக்கப்பட வேண்டிய உடல்நலப் பிரச்சினையைக் குறிக்கலாம்.

author-image
WebDesk
New Update
lifestyle

Understanding normal (and abnormal) period pain

மாதவிடாய் என்பது எந்தவொரு பெண்ணுக்கும் வலிமிகுந்த கட்டமாகும்.

Advertisment

பெரும்பாலான பெண்கள் மாதவிடாய் சுழற்சியின் போது பிடிப்புகள், முதுகுவலி, மனநிலை மாற்றங்கள், குமட்டல் மற்றும் பிற ஒத்த நிலைமைகளை அனுபவிக்கின்றனர்.

மாதவிடாய் வலி வழக்கமானது தான் என்று நீங்கள் நினைக்கலாம்.

இருப்பினும், உண்மையில் மோசமான மாதவிடாய் வலி சாதாரணமானது அல்ல. இது ஒரு ஒரு அடிப்படை சிக்கலைக் குறிக்கலாம்.

எனவே, மாதவிடாய் வலி மற்றும் அதற்கு என்ன தீர்வு என்பது பற்றி மேலும் தெரிந்துகொள்ள நாங்கள் நிபுணரை அணுகினோம்.

டாக்டர் அன்ஷுமாலா சுக்லா குல்கர்னி கருத்துப்படி, மாதத்திற்கு ஒருமுறை கருப்பையின் புறணி வெளியேறும்போது மாதவிடாய் ஏற்படுகிறது, மேலும் இந்த செயல்முறை சில அசௌகரியங்களை ஏற்படுத்தும்.

மாதவிடாயின் போது ஏற்படும் வலி இயல்பானது என்றாலும், அதிகப்படியான வலி கவனிக்கப்பட வேண்டிய உடல்நலப் பிரச்சினையைக் குறிக்கலாம்.

மாதவிடாய் காலத்தில் சில அசௌகரியங்கள் மற்றும் பிடிப்புகள் ஏற்படுவது இயல்பானது, இருப்பினும் வயிற்றில் அதிகமாக குத்துவது போன்ற உணர்வைக் கொடுக்கும் எந்த வலியும் இரண்டு நாட்களுக்கு மேல் நீடிப்பது சாதாரணமானது அல்ல.

மாதவிடாய் காலத்தில் வலி மற்றும் அசௌகரியம் ஏற்படுவதற்கான காரணங்கள்

இதை விளக்கிய டாக்டர் குல்கர்னி, டிஸ்மெனோரியா (dysmenorrheal) எனப்படும் மாதவிடாய் வலிக்கு பல காரணங்கள் இருக்கலாம் என்றார்.

இது முதன்மை டிஸ்மெனோரியாவாக இருக்கலாம், இது மாதவிடாய்க்கு முன்னும் பின்னும் வலியை அனுபவிக்கும் பெண்களுக்கு ஏற்படும் அல்லது அல்லது இரண்டாம் நிலை டிஸ்மெனோரியாவாக இருக்கலாம், இதில் கருப்பை அல்லது பிற இடுப்பு உறுப்புகளை பாதிக்கும் நிலைமைகள் காரணமாக சாதாரண மாதவிடாய்கள் வாழ்க்கையின் பிற்பகுதியில் வலிமிகுந்ததாக மாறும்.

How to manage pain during periods

பொதுவாக, மாதவிடாய் சுழற்சிக்கு 22 முதல் 35 நாட்கள் ஆகும்

மாதவிடாய் காலத்தில் வலியை எவ்வாறு சமாளிப்பது

பதப்படுத்தப்பட்ட மற்றும் சர்க்கரைகள் அதிகம் உள்ள உணவு, வீக்கம் மற்றும் வலியை அதிகரிக்கும் என்று மகளிர் மருத்துவ நிபுணர் விளக்கினார். இதற்கிடையில், ஸ்ட்ரெச்சிங் போன்ற உடற்பயிற்சிகளுடன் கூடிய ஆரோக்கியமான நார்ச்சத்து நிறைந்த உணவு வலியைக் குறைக்க உதவுகிறது.

நிபுணரின் கூற்றுப்படி, மாதவிடாய் வலியை குணப்படுத்த உதவும் சில வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை மாற்றங்கள் இங்கே உள்ளன:

*உங்கள் இடுப்பு பகுதி அல்லது முதுகில் ஹீட்டிங் பேட் பயன்படுத்தவும்

* உங்கள் வயிற்றை லேசாக மசாஜ் செய்யவும்

* சூடான குளியல்

*முறையான உடல் பயிற்சிகளை மேற்கொள்வது

* இலகுவான, சத்தான உணவுகளை உண்ணுதல்

* யோகா பயிற்சி

*உங்கள் மாதவிடாய்க்கு எந்த மருந்தையும் எடுத்துக்கொள்வதற்கு முன் உங்கள் மருத்துவரை அணுகவும்.

*வைட்டமின் பி-6, வைட்டமின் பி-1, வைட்டமின் ஈ, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற வைட்டமின்கள் மற்றும் சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்வது

*உப்பு, ஆல்கஹால், காஃபின் மற்றும் சர்க்கரை ஆகியவற்றை உட்கொள்வதைக் குறைப்பது

மருத்துவரை எப்போது பார்க்க வேண்டும்?

மாதவிடாய் வலி ஒவ்வொரு மாதமும் அன்றாட பணிகளைச் செய்வதில் தலையிடுகிறது என்றால், நீங்கள் ஒரு மருத்துவரை அணுக வேண்டும் என்று டாக்டர் குல்கர்னி விளக்கினார்.

IUD (An intrauterine device) வைத்த பிறகும் தொடர்ந்து வலி, குறைந்தது மூன்று வலிமிகுந்த மாதவிடாய் காலங்கள், ரத்தம் உறைதல், வயிற்றுப்போக்கு மற்றும் குமட்டலுடன் தசைப்பிடிப்பு மற்றும் மாதவிடாய் இல்லாத போது இடுப்பு வலி ஆகிய அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை பார்க்கவும்.

திடீர் தசைப்பிடிப்பு அல்லது இடுப்பு வலி நோய்த்தொற்றின் அறிகுறிகளாக இருக்கலாம். தினசரி நடவடிக்கைகளில் தலையிடும் தீவிர வலி மற்றும் அசாதாரண ரத்தப்போக்கு மகளிர் மருத்துவ நிபுணரால் பரிசோதிக்கப்பட வேண்டும். சிகிச்சையளிக்கப்படாத தொற்று, இடுப்பு உறுப்புகளை சேதப்படுத்தும் வடு திசுக்களை ஏற்படுத்தும் மற்றும் கருவுறாமைக்கு வழிவகுக்கும்.

மனதில் கொள்ள வேண்டியவை

20 வயதிற்குட்பட்டவர்கள், வலிமிகுந்த மாதவிடாய் குடும்ப வரலாறு உள்ளவர்கள், புகைபிடிப்பவர்கள், அதிக அல்லது ஒழுங்கற்ற மாதவிடாய் உள்ளவர்கள் மற்றும் குழந்தை பிறக்காதவர்கள் அல்லது வயதுக்கு முன்பே பருவம் அடைந்தவர்கள் உட்பட சிலருக்கு வலிமிகுந்த மாதவிடாய் ஏற்படும் அபாயம் அதிகம் என்று நிபுணர் கூறினார்.

பொதுவாக, மாதவிடாய் சுழற்சிக்கு 22 முதல் 35 நாட்கள் ஆகும், 2 முதல் 7 நாட்கள் வரை நீடிக்கும். வழக்கமாக, ஒரு நாளைக்கு 2 முதல் 3 பேட்கள் தேவைப்படும்.

மாதவிடாயின் போது ஏற்படும் சில அசௌகரியங்கள் இயல்பானதாக இருந்தாலும், கடுமையான வலி மருத்துவரால் மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்வது அவசியம், என்று அவர் மேலும் கூறினார்.

வாழ்க்கைமுறை மற்றும் உணவுமுறை மாற்றங்கள், வலியை குணப்படுத்த உதவும், ஆனால் நீங்கள் குறிப்பிடத்தக்க வலி அல்லது ஏதேனும் அசாதாரண அறிகுறிகளை அனுபவித்தால், மருத்துவரின் ஆலோசனையை மாற்றக்கூடாது.

மாதவிடாய் வலியை நாம் அனைவரும் சாதாரணமாக கருதக்கூடாது.

 எண்டோமெட்ரியோசிஸ் போன்ற அழற்சி புண்கள் காரணமாக ஏற்படும் வலி, மிகவும் பலவீனமடையச் செய்யும் மற்றும் சிகிச்சையளிக்கப்படாவிட்டால் கருப்பைகள், கருப்பை, ஃபலோபியன் குழாய்கள் மற்றும் குடல் சிறுநீர்ப்பை ஆகியவற்றை சேதப்படுத்தும் மற்றும் தீவிர மனநலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

மாதவிடாய் வலி இருந்தால், பெண் அதிக நலனுடன் இருக்கிறார் என்று அர்த்தம் இல்லை, அறிகுறிகளை புறக்கணிக்க வேண்டாம் மற்றும் ஒரு மகளிர் மருத்துவ நிபுணரால் பரிசோதிக்கப்பட வேண்டும், என்று டாக்டர் குல்கர்னி முடித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment