200 சதுர அடியில் தரமான 1 BHK வீடு- சென்னையில் வாங்கி மதுரைக்கு கொண்டு செல்ல முடியுமா?
இடப்பற்றாக்குறை காரணமாக நகரங்களில் வீடு வாங்குவதோ அல்லது வீடு கட்டுவதோ மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. ஆனால், இந்த சிக்கலை தீர்க்கும் விதமாக இடத்தை அடைக்காத சிறிய வீடுகள் தற்போது பிரபலமடைந்து வருகின்றன.
இடப்பற்றாக்குறை காரணமாக நகரங்களில் வீடு வாங்குவதோ அல்லது வீடு கட்டுவதோ மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. ஆனால், இந்த சிக்கலை தீர்க்கும் விதமாக இடத்தை அடைக்காத சிறிய வீடுகள் தற்போது பிரபலமடைந்து வருகின்றன.
உலகளவில் வீடுகளுக்கான பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. இதற்கு நிரந்தரமான தீர்வு என்ன என மக்கள் தற்போது அதிகம் தேட தொடங்கி இருக்கின்றனர்.
Advertisment
அதில் முக்கியமானது சிறிய அளவிலான வீடுகள். இந்த வகை வீடுகள் சிறியதாக மட்டும் இல்லாமல், நடைமுறைக்கு உகந்ததாகவும், சுற்றுச் சூழலுக்கு ஏற்றதாகவும் குறைந்த விலையில் கிடைக்கின்றன.
அதனால் இந்த சிறிய வீடுகள் பெரிய அளவில் பிரபலமாகி வருகின்றன.
வீடுகளுக்கான பற்றாக்குறை என்பது ஒரு நகர்ப்புற பிரச்னை. இது ஓரு கிராமப்புற பிரச்னை இல்லை. ஆகவே நெரிசலான நகரங்களில் இந்த சிறிய வீடுகள் ஏதேனும் வகையில் தீர்வளிக்க முடியுமா? நமது கான்கிரீட் காடுகளுக்கு இடையில் இந்த சிறிய வீடுகளுக்கு ஏதேனும் இடம் இருக்குமா?
Advertisment
Advertisements
இதுதொடர்பாக DW Tamil யூடியூப் சேனலில் வெளியான வீடியோ..
’தோட்டங்கள் அல்லது முற்றங்களில் நாம் சிறிய வீடுகள் அமைக்க முடியும். குறிப்பாக வீடுகள் கிடைப்பதற்கு நெருக்கடி உள்ள நகர்ப்புறங்களில் இது நிலைமையை ஓரளவுக்கு சரிகட்ட உதவுமே தவிர, தற்போது நாம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சிக்கலை தீர்க்காது’, என்கிறார் IWO நிறுவனம் ஜூலியன் பிசோஃப்.
வெனேசா வெங்க்
டைனிமலிஸ்டோ நிறுவனத்தைச் சேர்ந்த வெனேசா வெங்க் கூறுகையில், ’நகரங்களில் பல இடங்கள் காலியாக உள்ளன. நீங்கள் ஒரு கிரேனை பயன்படுத்தி, இந்த சிறிய வீடுகளை அங்கு பொருத்தி நகரங்களில் உள்ள காலியிடங்களில் நிரப்பலாம். நீங்கள் இரண்டு அடுக்குகள் கொண்ட மாடலையும் ஆர்டர் செய்யலாம். அதுதான் இனி எதிர்காலம். இதன்மூலம் நிறைய மைக்ரோ அபார்ட்மெண்ட் மாதிரிகள் வாயிலாக தீர்வுகளை வழங்க முடியும்’ என்றார்.
நவீன முறையில் கட்டப்படும் இந்த சிறிய வீடுகளை விருப்பத்துக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்கலாம். இவற்றில் சுற்றுச்சூழலுக்கு உகந்த, நடமாடும் கழிவுநீர் வடிகட்டி அமைப்புகள் உள்ளன. மேலும் சிறிய வீடுகளின் கார்பன் தடத்தை குறைக்கும் நோக்கில் இதில் தொடர்ந்து நிறைய யுத்திகளை புகுத்தி வருகின்றனர்.
மைக்ரோ ஹவுஸ்
ஆனால் இந்த சிறிய வீடுகள் உண்மையில் நிலையானதா?
’ஒரு நபருக்கு வணிகரீதியாக விற்கப்படும் சிறிய வீடுகள் 7 மடங்கு அதிக ஆற்றலை பயன்படுத்துகின்றன. மேலும் இதில் கருத்தில் கொள்ள வேண்டிய 2வது காரணி என்னவென்றால் இதுபோன்ற ஒரு சிறிய வீட்டிற்கு நிறைய இடம் தேவைப்படுகிறது.
நீங்களே யோசித்து பாருங்கள்…
சிறிய கட்டிடங்களை கட்டினால் அது நிறைய இடத்தை எடுத்துக் கொள்ளும்.
அதேசமயம் நான் ஒரு அடுக்குமாடி குடியிருப்பைக் கட்டினால் மிகச்சிறிய இடத்தில் இன்னும் பலரை என்னால் தங்க வைக்க முடியும்’, என்கிறார் பொறியாளர் ஓடன் கிளாஸ் வெம்ப்.
எவ்வாறாயினும் இந்த சிறிய வீடுகளுக்கான தேவை என்பது வீடுகளுக்கான நெருக்கடியை தீர்ப்பதை மட்டும் நோக்கமாக கொள்ளவில்லை.
மாறாக ஒருவர் குறைவான இடத்தில் அதிக சுதந்திரத்தை அனுபவிப்பதை உள்ளடக்கிய ஒரு வாழ்க்கைமுறை ….
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“