'300 மாடு வச்சிருக்கேன்... ஆவினுக்கு டெய்லி 300 லிட்டர் பால் ஊத்துறேன்': கே.என் நேரு மறுபக்கம்
150 ஏக்கர் தென்னை வச்சுருக்கேன், ஆனா ஒரு இளநீர் கூட வெட்டிக் குடிக்க மாட்டேன், மனசு வராது. தோட்டத்துல இருக்க மா, தேங்காய் எதுவுமே நாங்க எடுத்துக்க மாட்டோம்.
150 ஏக்கர் தென்னை வச்சுருக்கேன், ஆனா ஒரு இளநீர் கூட வெட்டிக் குடிக்க மாட்டேன், மனசு வராது. தோட்டத்துல இருக்க மா, தேங்காய் எதுவுமே நாங்க எடுத்துக்க மாட்டோம்.
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள காணக்கிளியநல்லூர் என்ற ஊரில், பிறந்தவர் கே.என்.நேரு. இவரின் தந்தை நாராயணசாமி ரெட்டி, தீவிர காங்கிரஸ் ஆதரவாளர். ஜவகர்லால் நேரு மீது இருந்த பிரியம் காரணமாக, தனது மகனுக்கு 'நேரு' எனப் பெயர் சூட்டினார்.இப்போது திமுக அரசின் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக கே.என்.நேரு உள்ளார்.
Advertisment
கே.என்.நேரு, பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் அரசியலுக்கு அப்பாற்பட்டு தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்த நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
அவர் பேசியதாவது; ‘திருச்சியில 300 மாடு வளக்குறேன்… ஆடு, மாடு எல்லாம் இருக்குது. ஆவினுக்கு மட்டும் தினமும் 300 லிட்டர் பால் கொடுக்குறேன். சென்னை வீட்டுல மாடு வளர்க்கிறேன். சிட்டியில மாடு வளர்க்க கூடாதுனு சட்டம் இருக்கு. ஏன்னா அதோட சாணி எல்லாம் சாக்கடையில போயி கலந்தா அடைச்சுக்கும். ஆனா, நாங்க சரியா குப்பையில கொண்டு சேர்த்துருவோம். அதனால வச்சுருக்கேன். மாட்டுக்கு தேவையான தீவனம் எல்லாம் திருச்சி வயல்ல இருந்து வந்துரும்.
ஊருக்கு போனா விவசாயம் பாப்பேன், விவசாயம் நல்ல தெரியுங்கிறதால என்னென்ன செய்யணும், மருந்து அடிக்கிறது, உரம் போடுறது, மழைக்காலம் வந்தா எப்படி பாக்கணும், தண்ணீர் எப்படி பாய்ச்சனும் எல்லாம் தெரியும்.
Advertisment
Advertisements
இப்போ தென்னை, பாக்கு, சப்போட்டா, கொய்யா, மா, புளி எல்லாம் இருக்குது, கரும்பு, வாழை எல்லாம் இப்போதான் எடுத்தோம்.
150 ஏக்கர் தென்னை வச்சுருக்கேன், ஆனா ஒரு இளநீர் கூட வெட்டிக் குடிக்க மாட்டேன், மனசு வராது. தோட்டத்துல இருக்க மா, தேங்காய் எதுவுமே நாங்க எடுத்துக்க மாட்டோம்.
இங்க இருந்து திருச்சி கொஞ்சம் தூரமா இருக்கிறதால அடிக்கடி போயி பார்க்க முடியல. விவசாயம் பாக்கிறதுக்கு ஆட்கள் பற்றாக்குறையும் இருக்கு. கூலியும் அதிகமா கேட்கிறாங்க, அதனால கட்டுப்படியாக மாட்டுக்கு. நெல் விவசாயிகளுக்கு இது கொஞ்சம் கஷ்டமான நேரம்தான்.
ஆனா தமிழ்நாட்டுல இருக்கிற அனைத்து விவசாயிகளும் நல்ல பொருளை அடுத்தவங்களுக்கு தந்துட்டு, கடைசியா இருக்கிறதைதான் விவசாயி சாப்பிடுவான்.
தமிழ்நாட்டுல ஸ்டிரைக் பண்ணாத ஒரே ஆளுங்க விவசாயிதான். அரசாங்கம் என்ன சொல்லுதோ அதை அப்படியே கேட்பாங்க, தண்ணீர் இருந்தா நெல்லு நடுவாங்க, இல்லன்னா, புஞ்சை பயிருக்கு போயிடுவாங்க, நிலத்தை சும்மா போட மாட்டாங்க.
இப்போ தமிழக அரசு குறுவை விலையை அதிகப்படுத்தி கொடுத்துருக்கு, நேரடி கொள்முதல் நிலையங்கள 61 கிலோ நெல் கொடுத்தா 1,150 ரூபாய் கிடைக்கும், ஆனா, வெளியே கொடுத்தா 800 ரூபாய்தான் கிடைக்கும்.
அதனால சில வியாபாரிகள் வெளிமாநிலத்துல இருந்து வாங்கிட்டு வந்து எங்க நெல்லுதான் சொல்றாங்க, அப்போதான் அரசாங்கம் வாங்கிறதில்ல, நம்ம விவசாயிகளுக்கு கொடுக்கலாமே தவிர, வெளியில இருந்து வாங்குனதுக்கு எப்படி கொடுக்க முடியும். இதனால ஒரிஜினல் விவசாயிகள் பாதிக்கப்படுறாங்க.. இப்படி பல விஷயங்களை கே.என்.நேரு அந்த வீடியோவில் பகிர்ந்து கொண்டார்.
பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலுக்கு கே.என்.நேரு பேட்டி அளித்த அந்த வீடியோ!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“