Advertisment

H20 என்றால் என்ன? வங்கதேச அழகியின் வைரல் பதில்!

எங்கள் ஊரில் H20 என்ற ஹோட்டல் உள்ளது அதுவா?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
H20

H20

வங்கதேசத்தில் நடைப்பெற்ற அழகிப் போட்டியில் H20 என்றால் என்ன? என்று நடுவர்கள் கேட்ட கேள்விக்கு அழகிப்போட்டியில் கலந்துக் கொண்ட பெண் கூறிய பதிலை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றன.

Advertisment

அழகாக இருக்கிற பொண்ணுங்கெல்லாம் அறிவாக இருக்க மாட்டாங்க..னு நயன் தாராவோட ஃபேமஷனான வரி எல்லோருக்கும் தெரியும். அந்த வரியின் அர்த்தம் அழகி போட்டியிலேயே பலருக்கும் தெரிய வந்தது மற்றொரு ஹலைட்.

வங்கதேசத்தில் இரண்டு தினங்களுக்கு இரண்டு தினங்களுக்கு முன்பு நடைப்பெற்ற மிஸ் அழகிப் போட்டியில் உள்ளூர் அழகிகள் பலர் கலந்துக் கொண்டனர். இந்த அழகிப்போட்டியில் அழகுடன் சேர்ந்து அறிவுப்பூர்வமான கேள்விகளும் கேட்டகப்பட்டனர்.

அப்போது போட்டியில் கலந்துக் கொண்ட பெண் ஒருவர் அளித்த பதில் நடுவர்களை மட்டுமில்லை ஒட்டுமொத்த அழகிகளையுமே வாய்விட்டு சிரிக்க வைத்தது. அந்த பெண்ணிடம் நடுவர்கள் H20 என்றால் என்ன என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு அந்த பெண் ரெஸ்டாரண்டா? என்று முகத்தை அப்பாவி போல் வைத்துக் கொண்டு கேட்டார். ஷாக்கான நடுவர்கள் அந்த அழகிக்கு H20 என்றால் தண்ணீர் என்று பாடம் எடுத்தனர். உடனே தவறை புரிந்துக் கொண்ட அந்த அழகி, இல்லை இல்லை எங்கள் ஊரில் H20 என்ற ஹோட்டல் உள்ளது அதுவா? என்று கேட்டேன் என்று சமாளித்து அசடு வழிந்தார்.

இந்த பதில் அத்துனை விரைவாக சமூகவலைத்தளங்களில் பரவியது. இதை கேள்விப்பட்ட நேட்டிசன்கள் அழகியின் பதிலை வழக்கம் போல் சமூகவலைத்தளங்களில் கலாய்த்து வருகின்றன.

Social Media Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment