scorecardresearch

பிரியங்கா உடன் ‘ரீல் லவ்’; மூக்குத்தி முருகன் ‘ரியல் லவ்’ தெரியுமா?

மூக்குத்தி முருகன், சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 7ல் போட்டியாளராக கலந்து கொண்டு, தனது அசாத்திய பாடும் திறமையால் மகுடத்தை தட்டிச் சென்றார்.

பிரியங்கா உடன் ‘ரீல் லவ்’; மூக்குத்தி முருகன் ‘ரியல் லவ்’ தெரியுமா?
Mookuthi Murugan

பிரியங்கா என்றாலே தமிழகத்தில் யாருக்கும் தெரியாமல் இருக்காது. பல ஆண்டுகளாக விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருக்கும் பிரியங்கா, கடந்த ஆண்டு பிக்பாஸ் சீசன் 5-ல் 18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு 2வது இடத்தை தட்டிச் சென்றார்.

பிக்பாஸ் செல்வதற்கு முன், பிரியங்கா விஜய் டிவியில் சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக், காமெடி ராஜா, கலக்கல் ராணி என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். பிறகு பிபி வீட்டிலிருந்து வந்த பிரியங்கா, மாகாபா-வுடன் சேர்ந்து ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகினார்.

இப்போது, பிரியங்கா ராஜூ வூட்ல பார்ட்டி, உம் சொல்றீயா ஹூஉம் சொல்றியா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார்.

ஆனால், இது எல்லாவற்றையும் விட பிரியங்கா என்றாலே, அது சூப்பர் சிங்கர் தான்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில், பிரியங்கா போட்டியாளர்களிடம் பேசுவதை செம ஜாலியாக இருக்கும். இதில் போட்டியாளர்களின் பாடல்களை விட, பிரியங்காவும், மாகாபாவும், சேர்ந்து அடிக்கும் லூட்டிகள் தான் பார்வையாளர்களுக்கு ரொம்ப பிடிக்கும்.

போட்டியாளர்கள் மட்டுமல்ல, அவர்களின் பெற்றோர்கள், நடுவர்களையும் பிரியங்கா விடமாட்டார். உன்னி கிருஷ்ணன் முதல் அணுராதா வரை எல்லாரையும் கலாய்த்து தள்ளுவார். அந்தளவுக்கு சூப்பர் சிங்கர் என்றாலே, பிரியங்காவும், மாகாபாவும் தான் என்றாகிவிட்டது.

இப்படி மூக்குத்தி முருகன், கானா சுதாகர் என ஒவ்வொரு சீசனிலும் பிரியங்காவிடம் ஏதாவது ஒரு போட்டியாளர்கள் வசமாக சிக்கி விடுவார்கள். ஆனால் இதில் அனைவராலும் ரசித்து பார்க்கப்பட்டது, மூக்குத்தி முருகன்- பிரியங்கா காம்போ தான்.

அந்த சீசன் முழுவதும் பிரியங்காவும், முருகனும் செய்த அட்டகாசங்கள் ரசிகர்களை வயிறுவலிக்க சிரிக்க வைத்தது. அதிலும் முருகன், அண்டா நிறைய திண்பண்டங்களை  எடுத்து வந்து, பிரியங்காவை இம்பிரஸ் செய்யும் வீடியோ எல்லாம் இன்றும் இணையத்தில் பிரபலமாக உள்ளது.

இப்படி முருகன் சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 7ல் போட்டியாளராக கலந்து கொண்டு, தனது அசாத்திய பாடும் திறமையால் மகுடத்தை  தட்டிச் சென்றார். இவருக்கு விஜய் டிவியின் சார்பாக 50 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டது.

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் அடிப்படையில் ஒரு விவசாயி. இப்படி வெறும் முருகனாக இருந்த இவருக்கு மூக்குத்தி முருகன் எனும் பெயர் வைத்து, ஃபேமஸ் ஆக்கியதே மாகாபா தான். அதை அவரே, பலமுறை மேடையில் குறிப்பிட்டு, மாகாபாவுக்கு நன்றி சொல்லியிருக்கிறார். மாகாபா தனக்கு இன்னொரு அம்மா, அப்பாவை போல மனம் நெகிழ்ந்திருக்கிறார்.

சூப்பர் சிங்கரைத் தொடர்ந்து, மூக்குத்தி முருகன் தனது மனைவி கிருஷ்ணவேனியுடன், மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை சீசன் 2ல் போட்டியாளராக கலந்து கொண்டார்.

அப்போது முருகன், தன் மனைவியை முதன்முதலில் சந்தித்த சுவாரஸ்யமான சம்பவம் குறித்து பகிர்ந்து கொண்டார்.

கிருஷ்ணவேனியின் அக்கா மகளோட மஞ்சள் நீராட்டு விழாவுக்கு போனேன். அப்போதான் முதன்முதல்ல இவங்கள பாத்தேன். பாத்ததும் எனக்கு பிடிச்சு போச்சு. இவங்க அக்காகிட்டேயே போய், யாரு இந்த பொண்ணு கேட்டேன், என் தங்கச்சி தான் சொன்னாங்க. இவங்க எங்க ஊருதான், ஆனா நான் அவங்களே பாத்தது இல்ல என்றார் முருகன்.

உடனே கிருஷ்ணவேனி எங்கம்மாவுக்கு சுத்தமா இந்த மாப்பிளையே பிடிக்கல என்றார். நான் பாடகர், ஆர்டிஸ்ட், பேங்க்ல பணம் போட்டு வச்சுருக்கேன் சொல்லி என் அப்பாவ கரெக்ட் பண்ணிட்டாரு. ஆனா, உண்மையிலேயே அவர்கிட்ட அஞ்சு பைசா கூட கிடையாது என கலாய்த்தார்.

இப்படி ஒரு காலத்தில், ஒன்றுமே இல்லாமல் இருந்தாலும், இன்று மூக்குத்தி முருகன் தன் பாடலால் பல தமிழகர்களின் இதயங்களைக் கட்டி போட்டு, இன்று பிரபல பாடகராக ஆகிவிட்டார்.

இப்படி பல திறமைகள் கொண்ட மூக்குத்தி முருகன், சிறந்த ஓவியரும் கூட.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Mookuthi murugan vijay tv super singer