விலைய விடுங்க! ருசி எப்படி? உலகின் விலை உயர்ந்த பிரியாணி இது தான்…

நீங்க பசிக்கு சாப்பிட்டாலும் சரி, ருசிக்கு சாப்பிட்டாலும் சரி, பிரியாணி பிரியர்கள் ஒரு கை பார்க்க வேண்டிய இடம் தான் இது.

By: Updated: February 23, 2021, 01:02:04 PM

This is the most expensive Biryani in the world  : மிகவும் ருசியான பிரியாணி எங்கே கிடைக்கும் என்று தேடி தேடி உண்பது இங்கு பலருக்கும் “ஜாலி ஹாபி” தான்… நம்முடைய “Foodie” நண்பர்கள் தங்களின் பிரியாணி அனுபவத்தை சொல்லும் போதே, அடுத்த முறை அந்த ஹோட்டலில் தான் பிரியாணி என்று நாம் ஒரு மன கணக்கு வைத்துக் கொள்வோம். பிரியாணியை பிடிக்காதவர்கள் என்று யாரும் உண்டா என்ன?

ருசியான பிரியாணி பற்றி மட்டுமே நாம் பேசியிருப்போம். ஆனால் உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த பிரியாணி எது என்று உங்களுக்கு தெரியுமா?

அமீரகத்தில் உள்ள பாம்பேய் பாரோ (bombay borough ) உணவகத்தில் தான் அந்த விலை உயர்ந்த பிரியாணி பரிமாரப்படுகிறது. தி ராயல் கோல்ட் பிரியாணி (The Royal Gold Biryani) என்று கூறப்படும் அந்த பிரியாணியில் ”23 கேரட்” உட்கொள்ளக் கூடிய தங்கம் வைக்கப்பட்டுள்ளது தான் அதில் ஸ்பெஷல். விலை என்னவாக இருக்கும் என்று கணிக்கிறீர்கள்? 1000 திராம்கள். இந்திய விலையில் இது வெறும் ரூ. 19,705 மட்டும் தானாம்!

தங்கம் மட்டும் தான் அதில் இருக்கிறதா என்றால் அது தான் இல்லை. இதில் தங்க இலை காபாப்கள், குங்குமப்பூ போட்டு சமைக்கப்பட்ட சாதம், காஷ்மீரின் செம்மறி ஆட்டுக்கறி கபாப், டெல்லியின் புகழ் பெற்ற செம்மறி ஆட்டு சாப்ஸ், ராஜ்புத்தின் சிக்கன் கபாப், முகலாயர்கள் ஸ்டைல் கோஃப்தா, மற்றும் மலாய் சிக்கன் ரோஸ்ட் போன்றவை இந்த இந்த ராயல் கோல்ட் பிரியாணி தட்டில் இடம் பெற்றிருக்கிறது.  நீங்க பசிக்கு சாப்பிட்டாலும் சரி, ருசிக்கு சாப்பிட்டாலும் சரி, பிரியாணி பிரியர்கள் ஒரு கை பார்க்க வேண்டிய இடம் தான் இது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Most expensive biryani in the world

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X