ஆணை விட பெண்ணுக்கு விஷம் அதிகம்... கடிச்சா கதை கந்தல்; இந்த பாம்பு பற்றி தெரியுமா?

கடித்தல் உடனே உயிரிழப்பை ஏற்படுத்தும் மிக கொடிய விஷம் கொண்ட பாம்புகள் குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

கடித்தல் உடனே உயிரிழப்பை ஏற்படுத்தும் மிக கொடிய விஷம் கொண்ட பாம்புகள் குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

author-image
Nagalekshmi Rajasekar
New Update
suru

பாம்பு என்றால் பயப்படாதவர்கள் யாருமே கிடையாது. இப்படி அச்சத்தை ஏற்படுத்தும் பாம்புகள் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட வகைகளில் உள்ளது. ஆனால், அதில் 600 வகை பாம்புகளுக்கு மட்டுமே விஷத் தன்மை இருக்கிறது. இதில் மிக கொடிய விஷம் கொண்ட பாம்புகள் குறித்து பார்க்கலாம்.

Advertisment

மிக கொடிய விஷம் கொண்ட பாம்புகள்

சங்கிலி கருப்பு பாம்புகள் அதிகம் விஷம் கொண்ட பாம்புகளாக கருதப்படுகிறது. இந்த பாம்புகள் அமெரிக்கா, மெக்ஸிகோ, அர்ஜண்டினா நாடுகளில் தான் அதிகம் காணப்படுகிறது. சங்கிலி கருப்பு பாம்புகள் தங்கள் வாலை எப்போதும் அசைத்து கொண்டே இருக்கும். இந்த பாம்புகளால் 65 அடி தூரம் இருப்பவற்றை கூட உணர முடியும். இந்த பாம்பு கடித்த இடங்கள் ஆசிட் பட்டது போன்று மாறிவிடும். இதன் விஷம் ரத்த நாளங்களுக்கு சென்றுவிட்டால் மனிதனை காப்பாற்றுவது மிகவும் கடினமாகிவிடும்.

கட்டு விரியன்

இந்த பாம்பு சுமார் மூன்று மீட்டர் நீளம் வரை வளரக்கூடியது ஆகும். இந்த பாம்புகள் இரவு நேரங்களில் மட்டுமே உலா வருகின்றன. இந்த கட்டு விரியன்கள் ஒரு கடியில் 20 முதல் 116 மில்லி கிராம் விஷத்தை வெளிப்படுத்துகிறது. இதனால், வாந்தி, வயிற்று வலி போன்றவை ஏற்படும். 

டைகர் சினேக்

புலிகள் உடம்பில் இருக்கும் வரிகளை போன்று இதன் உடல்களிலும் வரிகள் இருக்கும். இதுவும் இரவு நேரத்தில் வேட்டையாடும் தன்மை கொண்டவை. இந்த பாம்புகள் மனிதனை கடித்தால் இரத்த உறைதலை ஏற்படுத்தி நேரடியாக நரம்பு மண்டலத்தை பாதிக்கும் தன்மை கொண்டவை. இந்த டைகர் சினேக் அதற்கு ஆபத்து என்றால் மட்டுமே மனிதர்களை தாக்குகின்றன.

Advertisment
Advertisements

சுருட்டை விரியன்

சுருட்டை விரியன் பாம்புகள் ஆப்பிரிக்கா, ஆசிய மற்றும் இந்தியாவில் அதிகமாக காணப்படுகிறது. ஒன்றரை மீட்டர் நீளமுள்ள சுருட்டை விரியன் பாம்புகளால் தான் அதிக மனிதர்கள் உயிரிழக்கின்றனர். இந்த பாம்பு இரவில் தான் அதன் தாக்குதலை நிகழ்த்தும். சுருட்டை விரியனில் ஆண் பாம்புகளை விட பெண் பாம்புகள் இரண்டு மடங்கு அதிகமாக விஷத்தை வெளியிடுகிறது. இதன் விஷம் மனிதர்களின் நரம்பு மண்டலத்தை பாதித்து அதிக ரத்த கசிவை ஏற்படுத்துகிறது. இந்த சுருட்டை விரியன் கடிக்கு நஞ்சு முறிவு மருந்துகள் உள்ளன. அதனால் பாதிக்கப்பட்டோரை மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்து செல்வதன் மூலம் உயிரிழப்பை தவிர்க்கலாம்.

snake Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: