scorecardresearch

தினமும் நைட் தூங்கிறதுக்கு முன்னாடி இதுதான் அப்ளை பண்ணுவேன்.. மெளன ராகம் ஷில்பா பியூட்டி சீக்ரெட்ஸ்

ஷில்பா தன்னுடைய சரும பராமரிப்பு குறித்து Say Swag யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியின் போது பகிர்ந்து கொண்டார்.

தினமும் நைட் தூங்கிறதுக்கு முன்னாடி இதுதான் அப்ளை பண்ணுவேன்.. மெளன ராகம் ஷில்பா பியூட்டி சீக்ரெட்ஸ்
Mouna Ragam serial fame Shilpa Beauty secrets

விஜய் டிவியில் தினமும் இரவு ஒளிபரப்பாகும் மெளன ராகம் சீரியல் இப்போது பல்வேறு திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. மற்ற சீரியல்களை போல இல்லாமல், இந்த சீரியலில் வரும் இடங்களை பார்ப்பதற்காகவே பெரும்பாலான மக்கள் இந்த சீரியலை விரும்பிப் பார்க்கின்றனர். கேரளாவில் தான் இந்த சீரியல் ஷூட்டிங் நடக்கிறது என்பது இந்த சீரியல் பார்க்கும் அனைவருக்கும் தெரியும்.

அரண்மனை போன்ற பிரமாண்டமான பங்களா, கேரளாவின் தேயிலைத் தோட்டம், நீர்வீழ்ச்சி, பசுமை போர்த்திய மலைகள் என அரை மணி நேரம் சீரியல் பார்த்தாலே ஏதோ கேரளாவுக்கு சென்றுவந்த ஃபீல் கிடைக்கும்.

இந்த சீரியலில் ரவீணா தாகா, ராஜீவ் பரமேஸ்வர், சிப்பி ரஞ்சித், ஷில்பா, சல்மான், ராகுல் என பலர் நடிக்கின்றனர்.

இதில் ஷில்பா, ஸ்ருதி என்னும் கேரெக்டரில் நெகட்டிவ் ரோலில் நடிக்கிறார். பார்ப்பதற்கு அழகும், அமைதியும் நிறைந்திருக்கும் ஸ்ருதி, சக்தி தான், மல்லிகாவின் மகள் என்று தெரிந்ததும் அவளை தீர்த்துக்கட்ட அனைத்து வேலைகளையும் செய்கிறாள். இவ்வளவு காலம் அமைதியுடனும் பொறுமைகாத்த சக்தியும் இப்போது ஸ்ருதி, அவளின் அம்மா, பாட்டி என எல்லாரையும் எதிர்க்க ஆரம்பித்து விட்டாள். இதனால் சீரியலில் இனி போகபோக என்ன நடக்கும் என ரசிகர்கள் ஆர்வமாகி விட்டனர்.

இந்நிலையில் ஷில்பா தன்னுடைய சரும பராமரிப்பு குறித்து Say Swag யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியின் போது பகிர்ந்து கொண்டார்.

வீடியோவில் ஷில்பா பேசியது இதோ!

தினமும் ஷூட் முடிச்ச பிறகு, தேங்காய் எண்ணெய் யூஸ் பண்ணிதான் மேக்கப் ரிமூவ் பண்ணுவேன். மேக்கப் ரிமூவர் எப்போவும் யூஸ் பண்ணவே மாட்டேன். முகம் கழுவின பிறகு, குங்குமாதி தைலம் அப்ளை பண்ணுவேன். குங்குமாதி தைலம் யூஸ் பண்ணின பிறகு, முகம் இப்போ பளபளப்பா இருக்கு. வேற எந்த பிரொடக்ட்ஸூம் எனக்கு இவ்வளவு நல்ல ரிசல்ட் கொடுக்கல. ஆனா, நீங்க ரெகுலரா யூஸ் பண்ணனும். கெமிக்கல் இல்லாத குங்குமாதி தைலம் பாத்து வாங்குங்க.

நிறைய தண்ணீர் குடிக்கனும். அம்மா தினமும் கொஞ்சமா பப்பாளி சாப்பிட சொல்லுவாங்க.

உங்களுக்கு உடனே இன்ஸ்டன்ட் க்ளோ வேணும்னா, ஒரு கிண்ணத்துல முல்தானிமட்டி, ரோஸ் வாட்டர், பால், வாழைப்பழம் சேர்த்து நல்ல மிக்ஸ் பண்ணிக்கனும். திக் பேஸ்டா இருக்கணும். இது உங்க முகம், கழுத்துல தடவி 10 நிமிடம் கழித்து கழுவனும்.

சாதரண தண்ணீருல கழுவுறதுக்கு பதிலா, கொஞ்சம் கூலா இருக்கிற தண்ணீர்ல முகம் கழுவினா இன்னும் நல்ல இருக்கும்.

அதேமாதிரி தலைமுடிக்கு முட்டை இல்ல கற்றாழை அதிகமா இருக்கிற ஷாம்பூ யூஸ் பண்ணலாம். வீட்டுலயே எண்ணெய் காய்ச்சி அதை பயன்படுத்தலாம். நான் வீட்டுல காய்ச்சுன எண்ணெய் தான் யூஸ் பண்றேன். இப்படி ஷில்பா தன்னுடைய பியூட்டி சீக்ரெட்ஸ் குறித்து Say Swag யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.

இதோ அந்த வீடியோ!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Mouna ragam serial fame shilpa beauty secrets