New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/03/Shamitha-Shreekumar.jpg)
Shamitha Shreekumar
Shamitha Shreekumar
Shamitha Sree Kumar : விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ’மெளனராகம்’ சீரியலில் காதம்பரி என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ஷமிதா ஸ்ரீ குமார். இவர் இயக்குநர் சேரன் இயக்கத்தில் உருவான, ‘பாண்டவர் பூமி’ படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக அறிமுகமானார். பின்னர் சரியான வாய்ப்புகள் அமையாத காரணத்தினால், சின்னத்திரைக்குள் நுழைந்தார்.
Rajinikanth Press Meet : ரஜினிகாந்த் பிரஸ் மீட் புகைப்படத் தொகுப்பு
சன் டிவி-யில் ஒளிபரப்பான ‘சிவசக்தி’ சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார் ஷமிதா. அதில் தன்னுடன் இணைந்து நடித்த சீரியல் நடிகர் ஸ்ரீ குமாரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். சன் டிவி-யில் ஒளிபரப்பான பிள்ளை நிலா, பொன்னூஞ்சல் போன்ற தொடர்களில் முக்கிய கதாபாத்திரமாக நடித்த ஷமிதா தற்போது, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘மௌன ராகம்’ தொடரிலும், கலைஞர் டிவியில் ‘பூவே செம்பூவே’ ஆகிய தொடர்களிலும் நடித்து கொண்டிருக்கிறார்.
தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, முதலில் ஷமிதா தான் தனது காதலை ஸ்ரீ-யிடம் சொன்னாராம். முதலில் மறுத்த ஸ்ரீ பின்பு ஒத்துக்கொண்டாராம். இதனைத் தொடர்ந்து இருவரும் தங்களின் பெற்றோர்களின் சம்மதத்துடன் மிகவும் எளிமையாக திருமணம் செய்துக் கொண்டதாக ஒரு நேர்க்காணலில் குறிப்பிட்டிருந்தார்கள். தற்போது இந்தத் தம்பதிக்கு அழகான 2 பெண் குழந்தைகள் உள்ளனர். சீரியலில் கதாநாயகி தொடங்கி தற்போது வில்லியாக நடித்துக் கொண்டிருக்கும் ஷமிதா, நிஜத்தில் ரொம்பவும் மென்மையானவராம்.
கொரொனா வைரஸ்: ‘உலகளாவிய தொற்றுநோய்’ என அறிவிப்பால் என்ன பயன்?
ஷமிதாவுக்கு தென்னிந்திய அசைவ உணவுகள் என்றால் கொள்ளை பிரியமாம். நீலம், பச்சை நிற வண்ணங்களில் உடை உடுத்திக் கொள்வதென்றால் ரொம்பவும் பிடிக்குமாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.