ஒல்லியான கால்கள் இருந்தால் இறக்கும் வாய்ப்புகள் 300% அதிகம்: ஆய்வில் அதிர்ச்சி

ஒல்லியான கால்கள் இருந்தால் , இதய நோய், பக்கவாதம், நீரிழிவு உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பதற்கான வாய்ப்புகள் 300 சதவீதம் அதிகம்.

ஒல்லியாக இருப்பவர்கள் தங்களுடைய உயரத்திற்கேற்ற எடையைக் கொண்டிருந்தாலும், அவர்களுடைய கால்கள் ஒல்லியாக இருப்பதால், இதய நோய், பக்கவாதம், நீரிழிவு உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பதற்கான வாய்ப்புகள் 300 சதவீதம் அதிகமாக இருப்பதாக ஆய்வு ஒன்றில் அதிர்ச்சியான தகவல் வெளியானது.

ஒல்லியாக இருப்பவர்கள், சரியான எடை மற்றும் உடல் நிறை குறியீட்டெண் எனப்படும் பி.எம்.ஐ. கொண்டிருந்தாலும், அவர்களுக்கு வளர்சிதை மாற்றம் ரீதியாக ஆரோக்கியமாக இல்லாததால் உயிரிழப்பதற்கான வாய்ப்புகள் 300 சதவீதம் அதிகம் என அந்த ஆய்வும் முடிவில் தெரியவந்துள்ளது. இதற்கு நேரெதிராக உடல் பருமனாக இருப்பவர்களின் பி.எம்.ஐ. அவர்கள் ஆரோக்கியமாக இருப்பதாக குறிப்பிட்டால் இதயநோய், பக்கவாதம் உள்ளிட்ட கார்டியோவாஸ்குலார் நோய்களால் அவர்கள் உயிரிழப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனவும் அந்த ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வு ஜெர்மனியில் உள்ள டுபிங்கென் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்டது.

ஒல்லியாக இருப்பவர்களுடன் ஒப்பிடுகையில் பருமனான உடலைக் கொண்டவர்கள் இவற்றால் பாதிக்கப்படுவதற்கு 25 சதவீதம் மட்டுமே இருப்பதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்தது.

ஒல்லியாக இருப்பவர்களில், அவர்களுடைய கால்கள் மிகவும் ஒல்லியாக இருப்பவர்களுக்கு இத்தகைய கார்டியோவாஸ்குலார் நோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் என தெரிகிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Lifestyle news in Tamil.

×Close
×Close