மகரந்தச் சேர்க்கை அதிகரிக்க ஒரு டீஸ்பூன் சர்க்கரை: தொட்டியில் முருங்கை மரம் வளர்ப்பது எப்படி?
How to grow drumstick plant in pot- பெரிய இடவசதி எதுவும் இல்லாமல், வெறும் தொட்டி அல்லது பழைய பானையிலே உங்கள் வீட்டில் நீங்கள் முருங்கை மரம் வளர்க்கலாம். எப்படி என்பதை பாருங்கள்.
How to grow drumstick plant in pot- பெரிய இடவசதி எதுவும் இல்லாமல், வெறும் தொட்டி அல்லது பழைய பானையிலே உங்கள் வீட்டில் நீங்கள் முருங்கை மரம் வளர்க்கலாம். எப்படி என்பதை பாருங்கள்.
How to grow drumstick plant in pot (Photo credit: Wikimedia Creative Commons)
முருங்கை மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என எல்லாமே மருத்துவக் குணங்கள் கொண்டவை. எனவே இதை அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டால், நமது நோய் எதிர்ப்பு சக்தி பல மடங்கு அதிகமாகும்.
Advertisment
இன்றும் கூட கிராமங்களில், முருங்கை தானாகவே வளர்ந்து செழித்து கிடக்கும். கிராமத்தினர் முருங்கைக் கீரையை விலை கொடுத்து வாங்குவதே பார்ப்பதே அரிது. ஆனால் நகரங்களில் வசிக்கும் நான் முருங்கை காய், கீரை என அனைத்தையும் விலை கொடுத்து வாங்கிதான் சமைக்கிறோம்.
அதற்கு காரணம் பெரும்பாலான வீடுகளில் தோட்டங்கள் வைக்க இடமில்லாமல் இருக்கும் அல்லது பெரிய அப்பார்ட்மெண்ட்களில் குடியிருப்பார்கள்.
ஆனால் பெரிய இடவசதி எதுவும் இல்லாமல், வெறும் தொட்டி அல்லது பழைய பானையிலே உங்கள் வீட்டில் நீங்கள் முருங்கை மரம் வளர்க்கலாம். எப்படி என்பதை பாருங்கள்.
Advertisment
Advertisements
தொட்டியில் முருங்கை வளர்ப்பது எப்படி
வீட்டில் செடி வளர்க்க முதலில் செய்ய வேண்டியது உரம் தயாரிப்பது தான். ஆனால் அதற்கு பெரிதாக மெனக்கெட வேண்டாம்.
மண்புழு உரத்தில் மாட்டுச் சாணம், வேப்பப்பொடி கலக்கவும், உங்கள் வீட்டில் உள்ள சமையலறை எச்சங்களையும் பயன்படுத்தலாம். காபித் தூள், தேயிலை தூள், வாழைப்பழத் தோல்கள், முட்டை ஓடுகள், வெங்காயம் மற்றும் பூண்டு தோல்கள் ஆகியவற்றை சேகரித்து உலர்த்தி, உரம் தயாரிக்கலாம்.
தொட்டியின் அளவு 18*18 அங்குலம் இருக்க வேண்டும். பெரிய தொட்டியில் வளர்க்கும்போது, நீங்கள் அதிக முருங்கை அறுவடை செய்யலாம். 7-8 மணி நேரம் சூரிய ஒளி பெறும் இடத்தில் பானை அல்லது தொட்டியை வைக்க வேண்டும்.
7-8 மணி நேரம் சூரிய ஒளி பெறும் இடத்தில் தொட்டியை வைக்க வேண்டும்
செடி இரண்டு அடி உயரம் வளர்ந்த பிறகு, கிளைகள் பெற, நுனிகளை கிள்ள வேண்டும்.
முருங்கை மரங்கள் அதிக தீவனம் தரக்கூடியவை என்பதால், ஒவ்வொரு வாரமும் அவசியம் உரம் இட வேண்டும். தண்ணீருக்கு பதிலாக, சமையலறை கழிவுகளை சேர்த்து தயாரித்த திரவ உரங்களை, 15 நாட்களுக்கு ஒருமுறை மண்ணில் ஊற்றலாம். பழைய மண்ணை எடுத்து உலர்த்தி, ஊட்டச்சத்துகளைச் சேர்த்து, தொட்டியின் கீழ் அடுக்குகளில் சேர்க்கலாம்.
பூச்சிகள் வராமல் இருக்க, ஒவ்வொரு வாரமும் செடியின் மீது வேப்ப எண்ணெய் தெளிக்கலாம். இலவங்கப்பட்டை- மஞ்சள், மஞ்சள்- பூண்டு மற்றும் கோமுத்ரா உடன் மோர் மற்றும் காயம் கலந்து தெளிப்பதும் நல்லது.
ஒவ்வொரு அறுவடைக்குப் பிறகும் செடியை சுமார் 4 அடி வரை கத்தரிக்கவும்.
செடிகள் சுமார் 6 முதல் 8 அடி வரை வளருவதை உறுதி செய்து, பிறகு கத்தரிக்கவும். இப்படி செய்வதால் அடுத்த அறுவடைக்கு மூன்று மாதங்கள் வரை ஆகும்.
ஒருவேளை காய் போடுவதில் பிரச்சனை இருந்தால், ஒரு டீஸ்பூன் சர்க்கரையை ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து தெளிப்பது மகரந்தச் சேர்க்கையை அதிகரிக்க உதவுகிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக உங்கள் தோட்டத்திலிருந்து, புதிய காய்கறிகளை நீங்களே வளர்த்து சமைப்பது போல் ஆனந்தம் எதுவும் இல்லை. எனவே இன்றே, மேலே உள்ள குறிப்புகளை பயன்படுத்தி உங்கள் வீட்டில் முரங்கை மரத்தை வளருங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“