Advertisment

வலி போக மருந்துகள் தேவையில்லை.. இசை போதும் - மியூசிக் தெரபி பற்றி மருத்துவர் விளக்கம்

Music Therapy Pain management without Medicines Doctor explained அவ்வளவு வலியோடு தூக்கமில்லாமல் வருகிறவர்கள்கூட, இந்த மியூசிக் தெரபி மூலம் 5 நிமிடத்தில் தூங்கிவிடுவார்கள்.

author-image
priya ghana
புதுப்பிக்கப்பட்டது
New Update
Music Therapy Pain management without Medicines Doctor explained Tamil News

Music Therapy Pain management without Medicines Doctor explained Tamil News

Music Therapy Pain management without Medicines Doctor explained Tamil News : பிறப்பு முதல் இறப்பு வரை நம்மோடு பயணிக்கும் ஓர் காட்சியில்லா உணர்வு இசை. அழும் குழந்தையை அமைதியாக்கித் தூங்க வைக்கும் தாலாட்டு முதல் நம்மோடு சிரித்துப் பேசி உரையாடி இருந்தவரின் உயிர் பிரிந்து சென்றபின் நம் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒப்பாரி வரை எண்ணற்ற இசை நம்மோடு பிணைக்கப்பட்டிருக்கின்றன. கவலை, சலிப்பு, கோபம், காதல், வெட்கம், என ஒவ்வொரு உணர்வுகளுக்கும் இசை, வடிவம் கொடுக்கிறது.

Advertisment

இந்த கொரோனா பெருந்தொற்று காரணமாக வெளியே எங்கேயும் செல்லாமல், தன் நண்பர்கள் மற்றும் உறவினர்களைச் சந்திக்காமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருப்பவர்களுக்கு இசை மிகப் பெரிய ஆறுதலாக இருக்கிறது. இதுபற்றி, ஃபோர்டிஸ் மருத்துவமனையின் Pain Management பிரிவின் முதன்மை ஆலோசகரும் ரோபோடிக் அசிஸ்டென்ட் ஸ்பெஷலிஸ்ட்டுமான டாக்டர் மதன் குமாரிடம் மருத்துவ உலகில் இசையின் உளவியல் நன்மைகளைப் பற்றி உரையாடினோம்.

Pain Management என்றால் என்ன?

"நம் உடலில் எந்த விதமான பிரச்சனை என்றாலும் நாம் மருந்துகளை நாடுவோம். ஆனால், அதனால் ஏராளமான பின்விளைவுகள் ஏற்படலாம். ஆனால், அதுபோன்று எந்த மருந்துகளும் இல்லாமல் நம் உடலில் ஏற்படும் வலிகளை சரிசெய்வதுதான் இந்த பெயின் மேனேஜ்மேன்ட். இதன் மேம்படுத்தப்பட்ட சிகிச்சைமுறை, வலியை உருவாக்கும் நரம்பைக் கூட சரிசெய்ய உதவுகிறது. இதனை ஹோலிஸ்டிக் அணுகுமுறை என்றும் சொல்லலாம்".

publive-image

Dr. Madhan Kumar, Sr. Consultant - Anaesthesiology & Pain Management

மியூசிக் தெரபி என்றால் என்ன?

"சிறிய வயதிலிருந்தே நாம் இசையோடுதான் வளர்க்கிறோம். அழும் குழந்தையை உறங்கவைக்கத் தாய் பாடும் தாலாட்டு ஒருவகையான இசை தெரபிதான். இசையைக் கேட்கும்போது நம் உள்மனதில் ஏராளமான உணர்வுகள் தோன்றும். என்னவென்று சொல்லத்தெரியாத உணர்வுகளாக அவை இருக்கும். ஆனால், மனதுக்கு அவ்வாவு இதமாக இருக்கும். இந்த வைப்ரேஷன் கொண்டு வலியை போக்கவைப்பதுதான் மியூசிக் தெரபி.

நீண்ட காலமாக கேன்சர் அல்லது முதுகு வலி உள்ளிட்ட எந்த வகையான வலியை அனுபவித்திருந்தாலும், அவர்களுக்கும் இந்த மியூசிக் தெரபி கொடுக்கிறோம். 'Mindfulnes' எனப்படும் ஓர் மனநிலையை அவர்கள் அடையும்போது, அவர்களுடைய வலிகள் யாவும் காணாமல் போகிறது. டோபமைன் உள்ளிட்ட சந்தோஷம் தரும் ஹார்மோன்களை தூண்டுவதில் இசைக்கு பெரும் பங்கு உண்டு. அவ்வளவு வலியோடு தூக்கமில்லாமல் வருகிறவர்கள்கூட, இந்த மியூசிக் தெரபி மூலம் 5 நிமிடத்தில் தூங்கிவிடுவார்கள். அதுதான் இசையின் மேஜிக்.

கொரோனா பெருந்தொற்றினால் வீட்டிலிருந்து வேலை செய்கிறவர்கள், வேலை பளு அதிகம் உள்ளவர்கள் தங்களை ரிலாக்ஸ் செய்துகொள்ள 5 நிமிடம் உங்களுக்குப் பிடித்த இசையை அமைதியாக கேட்டாலே போதும். நிச்சயம் உங்கள் எண்ணங்கள் பாசிட்டிவாக மாறும். நம்மிடம் இழந்ததாக நாமே நினைத்துக்கொண்டிருக்கும் தன்னம்பிக்கை, நிச்சயம் பன்மடங்கு அதிகரிக்கச் செய்ய இந்த இசை உதவும். இவையெல்லாமே அறிவியலில் நிரூபிக்கப்பட்டவை".

குழந்தைகளுக்கு இந்த தெரபி கொடுக்கலாமா?

"அந்தக் காலத்தில் குழந்தைகள் ஓடி விளையாடுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருந்தன. ஆனால், இந்த பெருந்தொற்று காலத்தில் அவர்கள் வகுப்புகளுக்குக்கூட செல்ல முடியாத சூழ்நிலை. இது அவர்களுக்கு மனஅழுத்தத்தை அதிகரிக்கவே செய்கின்றன. அதனால், அவர்களுக்கு ஸ்க்ரீன் டைமிங் குறைத்து, செஸ், கேரம் உள்ளிட்ட வீட்டிற்குள்ளேயே விளையாடுகின்ற விளையாட்டுகளை அறிமுகம் செய்யலாம். அதோடு இந்த மியூசிக் தெரபியும் முயற்சி செய்யலாம். ரைம்ஸ், மியூசிக் உள்ளிட்டவற்றை போட்டு, அவர்களை அமைதியாகக் கேட்க வைக்கலாம்".

இதுபோன்று வேறு ஏதேனும் தெரபிகள் உள்ளனவா?

"பிசியோ, ஆக்வா, லாஃப்ட்டர் என ஏராளமான தெரபிகள் மருந்துகளே இல்லாமல் வலியை போக்குகின்றன. இதில் மியூசிக் தெரபி மிகவும் முக்கியமான ஒன்று. இப்பொழுதெல்லாம், உடல்நிலையைவிட மனநிலையை சீராக வைத்துக்கொள்வதற்குத்தான் ஏராளமான மக்கள் வருகின்றனர். எல்லா பிரச்சனைகளையும் அவர்களுக்குள்ளேயே வைத்துக்கொள்ளாமல் இப்பொழுதாவது வெளியே வருகிறார்களே என்று சந்தோஷமாக இருக்கிறது. மறக்காமல் எல்லோரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள்" என்கிற முக்கியமான குறிப்போடு நிறைவு செய்தார் மருத்துவர் மதன்குமார்".

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Doctor Music Video
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment