/tamil-ie/media/media_files/uploads/2022/11/Myna.jpg)
Myna Nandhini
விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து பிரபலமான ‘மைனா’ நந்தினி தற்போது சீரியல், படங்கள், ரியாலிட்டி ஷோ என பிஸியாக இருக்கிறார். நந்தினிக்கும், சீரியல் நடிகர் யோகேஷ்வரனுக்கும் கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு துருவன் என்ற மகன் இருக்கிறான்.
இந்நிலையில் இப்போது மைனா விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார். ஏற்கெனவே இந்த சீசன் ஆரம்பிக்கும் போது, மைனாவும் வீட்டுக்குள் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து ஒரு வாரம் கழித்து மைனா பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார்.
இந்நிலையில் மைனாவின் கணவர் யோகேஷ்வரன் சமீபத்தில் கலாட்டா தமிழ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் மைனா பிக்பாஸ் வீட்டுக்கு செல்வதற்கு முன், வீட்டில் நடந்த சில எதிர்பாராத சம்பவங்களையும், அதனால் மைனா மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் பகிர்ந்து கொண்டார்.
அந்த வீடியோவில் யோகேஷ் பேசுகையில்; மைனாவுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல. அதான் உள்ள போயி யாருக்கும் இன்ஃபெக்ஷன் ஆகிடக் கூடாதுனு, ஒரு வாரம் கழிச்சு பிபி வீட்டுக்கு போனா. மைனாவுக்கு 4வது சீசன்லயே பிக்பாஸூக்கு கேட்டாங்க.. ஆனா அவ அப்போ கர்ப்பமா இருந்தா. 5வது சீசன்லயும் கேட்டாங்க. அப்போ பையன் பிறந்தான். பையன விட்டு பிரிஞ்சி இருக்கணுமா நினைச்சி, வேண்டாம் சொல்லிட்டோம். இப்போ 6வது சீசன்ல பிக்பாஸ் போலாம் கன்ஃபார்ம் பண்ணிட்டோம்.
ஆனா, மைனா உள்ள போனதுக்கு காரணம் ஃபைனான்சியல் தான். அது எல்லாருக்குமே தெரிஞ்ச விஷயம் தான். ஒரு பக்கம் காசு வருது. அதேநேரம் பெயரும் கிடைக்கும். அதை நம்ம எப்படி யூஸ் பண்ணிக்கிறோம், அதை எப்படி கொண்டு போறோம்ங்கிறது தான் விஷயம்.
வீட்டுல எப்பவுமே, பிபி 24*7 மணி நேர ஷோ ஓடிட்டே தான் இருக்கும்.. துருவ் வீட்டுல சுத்திட்டே இருப்பான். மைனா ஏதாவது திடீர்னு பேசுனா நின்னு பாத்துட்டே இருப்பான். அவ ஏதாவது கலாய்ச்சு பேசுனா இவன் சிரிப்பான். ஆனா, துருவ் இப்போ என்னைதான் ரொம்ப மிஸ் பண்றான். எனக்கு தொடர்ந்து ஷூட் போயிட்டு இருக்கு. அவன்கூட இருக்க முடியல. கொஞ்ச நாள் முன்னாடி அவனுக்கு காய்ச்சல் கூட வந்தது, அந்த நேரத்துல அவனோட இருக்க முடியாம போனது எனக்கு கஷ்டமா ஆயிடுச்சு..
ஆனா வீட்டுல எல்லாரும் நல்ல பாத்துக்கிறதால அவன் செட் ஆயிட்டான். இந்த ஃபீல்டு இப்படிதான் இருக்கும் தெரிஞ்சி நாங்க சின்னதுல இருந்தே துருவ்வ அப்படியே வளர்த்துட்டோம்.
மைனா பிபி வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி, நாங்க சும்மா வீடியோ ஷூட் பண்ணிட்டு இருந்தோம். அப்போ பயங்கரமா கத்துற சத்தம் கேட்டுச்சு.. என்ன வெளியே பாத்தா மைனா அம்மா வழுக்கி விழுந்துட்டாங்க.. விழுந்ததுல கால்ல இடிச்சு, ஒரு விரல் துண்டா ஆயிடுச்சு. நாளைக்கு மறுநாள் பிபி வீட்டுக்கு போனும் இருந்தப்போ தான் இந்த மாதிரி ஆயிடுச்சி, அதுல மைனா ரொம்ப டிப்ரஸ்டா ஆயிட்டா. அப்புறம் நாங்க அவளுக்கு எடுத்து சொல்லி, அவங்க அம்மாவ ஹாஸ்பிடல்க்கு கூட்டிட்டு போனோம். அங்க 8 தையல் போட்டு நடக்க கூடாது சொல்லிட்டாங்க.. அதுனால மைனா இன்னும் பயந்துட்டா. ஏன்னா இவங்கதான் மொத்த குடும்பத்தையும் பாத்துக்கணும்.
எங்க அம்மாவுக்கும் கால்ல பிளேட் இருக்கு. அவங்களாலயும் பெரிசா வேலை செய்ய முடியாது. அவங்களையும் ஒரு ஆளு பாத்துக்கணும், இப்போ இவங்களையும் பாத்துக்கணும் நினைச்சதும் மைனா ஒருமாதிரி ஆகிட்டா.. நான்தான் எல்லாரும் சுத்தி இருக்கோம், நாங்க பாத்துக்கிறோம். எல்லாரும் இருக்காங்க. எல்லாரையும் நான் கூப்பிடுறேன். நமக்கு ஹெல்ப் பண்ணுவாங்கனு சொன்னேன்..
ஆனாலும் அவ ரெண்டு மனசா தான் உள்ள போனா. அவ உள்ள போறதுக்கு முன்னாடி இவ்ளோ தடங்கல் இருந்தது, ஆனா இவ்ளோ தடங்கல் இருக்குனா ஏதோ ஒரு விஷயம் இருக்கும் அதனால நீ போனு சொல்லிட்டேன்.
நந்தினி வெளியே எப்படி இருக்காளோ, அதே மாதிரிதான் வீட்டுக்குள்ளயும் இருக்கா. அவ பெரிய சண்டைக்கெல்லாம் போகவே மாட்டா. சின்னதா ஒரு விஷயம் நடந்தாக்கூட வெடிச்சிருவா. அவ முழுசா எக்ஸ்பிரெஸ் பண்றானா ரெண்டே ரெண்டு விஷயம் தான் நடக்கும்.. ஒன்னு பயங்கரமா கத்துவா… எதிர்ல யாரு இருக்காங்க எல்லாம் பாக்க மாட்டா.. கத்தி முடிச்சிட்டு ஒன்னு டிப்ரஷனுக்கு போவா. இல்லன்னா பாத்ரூம் போயி அழுவா. இந்த ரெண்டு விஷயம் தான் இருக்கும்.. ஆனா, அவ கத்துனான எதிர்ல இருக்கிறவங்களால பேசவே முடியாது. அந்த ஒரு எக்ஸ்ட்ரீம் எப்படியும் வரும். அது வராம எல்லாம் இருக்காது. இப்போ அவள டார்கெட் பண்ணி யாராவது பேசுறாங்கன்னா கோவப்படுறா.. இந்த கேம்பிளான் எல்லாம் அவகிட்ட இல்ல.. என்ன தோணுது அதைத்தான் பண்ணிட்டு இருப்பா.. அவ இன்னும் கேம் ஆடணும்.. அப்போதான் இன்னும் ரொம்ப நாள் போக முடியும்.
நான் மைனாவுக்கு ஒரே ஒரு அட்வைஸ் மட்டும் தான் கொடுத்தேன். வெளில நீ மக்களை எண்டர்டெயின் பண்ணிட்டு இருந்த. சிரிக்க வைச்ச, அழுக வைச்ச, இதையே உள்ளயும் போயி பண்ணு. அதை மட்டும்தான் நான் சொன்னேன்.. அதனால தான் கேம் விளையாடுறத பத்தி யோசிக்காமா அவளாவே இருக்கா. நிறைய பேருக்கு அது சேஃப் கேமா தெரியுது.. இப்படி பல விஷயங்களை யோகேஷ் அந்த பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.