scorecardresearch

ஆர்யாவுடன் மைனா நந்தினி.. எங்க மீட் பண்ணாங்க தெரியுமா?

இன்ஸ்டாகிராமில் மட்டும் 74 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் நந்தினியை பின் தொடர்கின்றனர்.

ஆர்யாவுடன் மைனா நந்தினி.. எங்க மீட் பண்ணாங்க தெரியுமா?
Myna Nandhini

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி’ சீரியலில் நடித்து பிரபலமான ‘மைனா’ நந்தினி, தற்போது சீரியல், படங்கள், ரியாலிட்டி ஷோ என பிஸியாக இருக்கிறார்.

நந்தினிக்கும், சீரியல் நடிகர் யோகேஷ்வரனுக்கும் கடந்த 2019ஆம் ஆண்டு  திருமணம் நடந்தது. இவர்களுக்கு துருவன் என்ற மகன் இருக்கிறான்.

நந்தினி யோகேஷ்வரன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற போது
மகன் துருவன் உடன் மைனா, யோகேஷ்

விக்ரம் படத்தில் மைனா, விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்திருந்தார். மேலும் சமீபத்தில் வெளியான விருமன் படத்திலும் கார்த்தியின் அண்ணியாக நடித்து அசத்தினார்.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நந்தினி, அதில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்கள், ரீல்ஸ்களை வெளியிட்டு வருகிறார். இன்ஸ்டாகிராமில் மட்டும் 74 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் நந்தினியை பின் தொடர்கின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் நந்தினியின் இன்ஸ்டா போஸ்ட் ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாகியது. அதில் நந்தினி, தனது கணவர் யோகேஷ், மகன் துருவனுடன், நடிகர் ஆர்யாவுடன் சேர்ந்து எடுத்த படங்களை பகிர்ந்திருந்தார்.

ஆர்யா உடன் மைனா, யோகேஷ்

யோகேஷ்வரன், இப்போது ஜீ தமிழ் டிவியின் டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, சஹானாவுக்கு ஜோடியாக ஆடுகிறார்.  சமீபத்தில், நடிகர் ஆர்யா இந்த நிகழ்ச்சியில் விருந்தினராக பங்கேற்றார். அப்போது நந்தினி மற்றும் மகனுடன் ஆர்யாவுடன் சேர்ந்து எடுத்து படங்களை யோகேஷ்வரன் இன்ஸ்டாவில் பகிர்ந்திருந்தார்.

ஆர்யா தனது கேப்டன் படத்தின் புரோமோஷனுக்காக டிஜேடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, இந்த படங்கள் எடுக்கப்பட்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Myna nandhini with arya photos gone viral