விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து பிரபலமான ‘மைனா’ நந்தினி, தற்போது படங்கள், ரியாலிட்டி ஷோ என பிஸியாக இருக்கிறார்.
Advertisment
நந்தினிக்கும், சீரியல் நடிகர் யோகேஷ்வரனுக்கும் கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு துருவன் என்ற மகன் இருக்கிறான்.
சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நந்தினி, அதில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்கள், ரீல்ஸ்களை வெளியிட்டு வருகிறார். இன்ஸ்டாகிராமில் மட்டும் 74 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் நந்தினியை பின் தொடர்கின்றனர்.
அத்துடன் சொந்தமாக மைனா விங்ஸ் யூடியூப் சேனலையும் வைத்துள்ளார்.
Advertisment
Advertisements
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் மைனா பகிர்ந்த புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி உள்ளது. அதில் யோகியின் பிறந்தநாளை முன்னிட்டு இருவரும் லடாக் டூர் சென்ற போட்டோஸ், வீடியோஸை பகிர்ந்திருக்கிறார்..