New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/04/Yogi-Myna.jpg)
Myna Nandhini Yogesh went Tiruchendur temple video viral
Myna Nandhini Yogesh went Tiruchendur temple video viral
விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி’ சீரியலில் நடித்து பிரபலமான ‘மைனா’ நந்தினி, இப்போது சீரியல், படங்கள், ரியாலிட்டி ஷோ என பிஸியாக இருக்கிறார்.
நந்தினிக்கும், சீரியல் நடிகர் யோகேஷ்வரனுக்கும் கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு துருவன் என்ற மகன் இருக்கிறான்.
முன்னதாக மைனா ”இன்னைக்கு நாங்க துருவுக்கு ரெண்டாவது மொட்டை போடறதுக்கு திருச்செந்தூர் போறோம். அதுவும் டிரெயின்ல தான் போறோம். ரொம்ப நாள் கழிச்சு டிரெயின்ல போறது ஹேப்பியா இருக்கு என டிரெயினில் போகும் போது நடந்த அலப்பறைகளை வீடியோவாக எடுத்து தனது யூடியூபில் பகிர்ந்தார்.
டிரெயின் கம்பார்ட்மென்டை மினி ஹோட்டலாக மாற்றிய மைனா நந்தினி.. எங்க போனாங்க தெரியுமா?
ஆனால், மொட்டை போடுவதை அடுத்த வீடியோவில் பார்க்கலாம் என கூறி, அந்த வீடியோவை முடித்து விட்டார். இதனால் அந்த வீடியோவை காண நெட்டிசன்கள் ஆர்வமாக இருந்த நிலையில், சமீபத்தில் துருவுக்கு’ குலசை கோயிலில் 2வது மொட்டை போட்ட வீடியோவை, மைனா தனது யூடியூபில் பகிர்ந்துள்ளார்.
வீடியோ ஆரம்பிக்கும் போது பேசும் மைனா; இந்த வீடியோ எனக்கு ரொம்ப ஸ்பெஷல். முத்தாரம்மன் எனக்கு ரொம்ப ரொம்ப இஷ்டமான தெய்வம். குலசேகரப்பட்டினத்துலத் தான் அந்த அம்மன் கோயில் இருக்கு. நாங்க வருஷம் வருஷம் அங்கதான் தசராவுக்கு டான்ஸ் ஆடுவோம். குலசாமிக்கு அப்புறமா, இங்கதான் என் பையனுக்கு ரெண்டாவது மொட்டை போடனும்னு நான் வேண்டிக்கிட்டேன்.
இன்னைக்கு என்ன அட்ராசிட்டிஸ்லாம் நடக்க போகுது தெரியல. இன்னைக்கு துருவ் எவ்ளோ அழப்போறான், அதைப் பாத்து நான், யோகிலாம் எவ்ளோ அழப் போறோம்னு தெரியல. இருந்தாலும் சாமிக்குங்கிறதால ரொம்ப ஹேப்பியா இந்த விஷயத்தை பண்ண போறோம்.
முடியோட இருக்கிற துருவ் மொட்டையாகிறதை பாக்கலாம் வாங்கனு மைனா, துருவ், யோகி, மைனா அப்பா அவர்களது நண்பர்கள் அனைவரும் காரில் புறப்பட்டனர்.
காரில் வீடியோ எடுத்துக் கொண்டே பேசிய யோகி’ முத்தாரம்மன் கோயில் நீங்கெல்லாம் கேள்விபட்டிருப்பிங்க. அந்த கோயில் எப்படி இருக்கும்? அங்க என்னெலாம் நடக்குதுனு இந்த வீடியோல காமிக்கிறோம் என காரில் பாட்டு போட்டுக் கொண்டே யோகி, துருவ், மைனா எல்லாரும் செம ஜாலியாக கோயிலுக்கு செல்கின்றனர்.
கோயிலுக்கு சென்று இறங்கியது, யோகி வாசலில் நின்று இதுதான் முத்தாரம்மன் கோயில் என கோயிலை காட்டுகிறார். பிறகு அர்ச்சனைத் தட்டு வாங்கும் இடத்துக்கு சென்ற யோகி, இங்கதான் எப்போவும் அர்ச்சனைத் தட்டு வாங்குவோம். எவ்வளவு கூட்டம் இருக்கும் தெரியுமா? ஆனா இன்னைக்கு கூட்டம் இல்ல என சொல்லி, துருவை கையில் தூக்கிக் கொண்டு மொட்டை போடும் இடத்துக்கு செல்கிறார். இடத்தை அடைந்ததும் கூட்டம் சூழ, மைனா அப்பாவின் மடியில் துருவ் உட்கார சீரும் சிறப்புமாக துருவுக்கு மொட்டை போட்டாச்சு.
பிறகு துருவ் தலையை தொட்டு தொட்டு பார்க்க, யோகியும், அவரோட நண்பர்களும் துருவை நல்ல கலாய்க்கின்றனர். இப்படி யோகி ஒருபக்கம் இருக்க, மைனாவை பார்த்த சிலர், அவருடன் செல்ஃபி எடுக்க குவிந்துவிட்டனர். பிறகு ஒருவழியாக முத்தாரம்மன் கோயிலில் இருந்து புறப்பட்டு, அனைவரும் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றனர்.
நேராக கோயில் கடற்கரைக்கு சென்ற யோகி, இங்க கால் நனைச்சுட்டுதான் கோயிலுக்கு போகனும். அதுதான் ஐதீகமாம். கோயில் உள்ள வீடியோ எடுக்க முடியாதுனு நினைக்கிறேன். அதனால பீச்-லயே வீடியோ எடுத்துட்டு போயிடுவோம்னு கோயிலை சுற்றி வர, , மைனாவை பார்த்த திருநங்கைகள், அவரை பார்த்து சிரித்து பேசி, அவருடன் போட்டோ எடுத்து துருவை ஆசிர்வதித்து சென்றனர்.
திருச்செந்தூர் கோயிலில் சாமி கும்பிட்டு முடித்ததும், ஹோட்டலுக்கு சென்று மதிய உணவு சாப்பிட்டு, ஒரு வழியாக மீண்டும் ரூம்க்கு சென்று, துருவின் மொட்டை மண்டையில் தலப்பா கட்டி விளையாடுகின்றனர். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.