இங்க எல்லாரும் ஒண்ணுதான்: நாகூர் தர்காவில் நாதஸ்வர இசை

நாகூர் தர்காவிற்கு பல மதங்களைச் சார்ந்தவர்களும் வருகை தருகின்றனர். இங்கு வருபவர்களை இசை மேலும் இணைக்கிறது.

நாகூர் தர்காவிற்கு பல மதங்களைச் சார்ந்தவர்களும் வருகை தருகின்றனர். இங்கு வருபவர்களை இசை மேலும் இணைக்கிறது.

author-image
abhisudha
புதுப்பிக்கப்பட்டது
New Update
Nagore Dargah

Nagore Dargah

நாகூர் தர்கா. இங்கு இந்த சமுகத்தின் இசைக் கருவிகள் இஸ்லாமிய சமுகத்தின் இசைக் கருவிகளுடன் ஒன்றாக இசைக்கப்படுகின்றன என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

Advertisment

தினமும் இங்க இஸ்லாமியர்கள் வாசிச்சதுக்கு அப்புறம் நாங்க இந்து முறைப்படி வாசிக்கிறோம். இது எங்களுக்கும், அவுங்களுக்கும் முன்ன பின்ன மாறி வரும். வெள்ளிக்கிழமை மட்டும் இங்க தொழுகை முடிஞ்சதும் குண்டு போடுவாங்க. குண்டு போட்டதும் நாங்க எல்லாம் வாரத்துல ஒரு நாள் சேர்ந்து வாசிப்போம், என்கிறார் தவில் இசைக் கலைஞர் ஜெகதீசன்…

இது தொடர்பாக DW Tamil யூடியூப் சேனலில் வெளியான வீடியோ

ஆண்டவர் காலத்துல இருந்து வாசித்தற்காக, அதுக்கு தனி இடம் கொடுத்து, நாகூர் ஆண்டவரின் கதவு திறக்கும் போது இந்து இசைக் கலைஞர்கள் வாசிப்பாங்க.

Advertisment
Advertisements

தர்கா அலங்கார வாசல்ல மணிமேடை இருக்கு. அங்க நாதஸ்வரம் வாசிப்பாங்க. இதெல்லாம் கோயில்ல வாசிக்கிறது. இது என்ன இங்க சவுண்ட் கேட்குதுனு வெளியில போற ஆட்கள் நினைப்பாங்க, என்கிறார் இஸ்லாமிய இசைக் கலைஞர் ஹாஜா மெய்தீன்…

Nagore Dargah miracles
தவில் இசைக் கலைஞர் ஜெகதீசன்

ஜெகதீசன் தொடர்ந்து கூறுகையில், காலையில 6.30- 7 மணி வரை வாசிப்போம். மதியம் 1- 1.30 மணி வரைக்கும், இரவு 7.30 – 8 மணி வரைக்கும் வாசிப்போம். காலங்காலமா நாங்க வாசிச்சிட்டு வர்றோம். இது எங்களோட பரம்பரை தொழில்…

எங்க தாத்தா ஒரு 30 வருஷம், என் அப்பா ஒரு 30 வருஷம் பார்த்து நான் இப்போ 25 வருஷம் இப்படி 85 வருடங்களாக வாசிக்கிறோம். அதுக்கு முன்னாடியும் இருந்துருக்காங்க….

இங்க வந்து வாசிக்கிறது எங்களுக்கு ரொம்ப பெருமையா இருக்கு. இஸ்லாமிய கோயில்ல இந்து முறைப்படி வாசிக்கிறது எங்கயுமே கிடையாது. நாகூர் தர்கால மட்டும் தான் உண்டு. இங்க வாசிக்கிறதுக்கு நாங்க கொடுத்து வச்சுருக்கோம்.…

Nagore Dargah miracles
இஸ்லாமிய இசைக் கலைஞர்களுடன் இந்து இசைக் கலைஞர்கள்

நாகூர் தர்காவிற்கு பல மதங்களைச் சார்ந்தவர்களும் வருகை தருகின்றனர். இங்கு வருபவர்களை இசை மேலும் இணைக்கிறது.

இங்க எல்லா மதத்துக்காரங்களும் வர்றாங்க.  கோயில்ல வாசிக்கிற நாதஸ்வரம், தவில் இங்க வாசிக்கிறது பார்த்து சந்தோஷப்படுறாங்க… இசை கோயில்ல தான் வாசிக்கணும், தர்கால தான் வாசிக்கணும் கிடையாது. இசை எல்லாத்துக்கும் பொது என்கிறார் இஸ்லாமிய இசைக் கலைஞர் அப்துல் கனி….

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle Dw Tamil News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: